உங்கள் வருமான வரிக்கணக்கை (ITR) ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி?

உங்கள் வருமான வரிக்கணக்கை (ITR) ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி?

மாதிரி படம்

ஐடிஆர் தாக்கல் செய்யும் போது உங்கள் பான் கார்டு எண் (PAN), மதிப்பீட்டு ஆண்டு அறிக்கை (Assessment Year) மற்றும் ஒப்புதல் எண்ணை (Acknowledgement Number) உள்ளிட வேண்டும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
வருமான வரி என்பது உழைக்கும் தனி நபர்கள் சம்பாதித்த வருமானத்தில் விதிக்கப்படும் வரி ஆகும். பெரும்பாலான அரசாங்கங்கள், தங்கள் அதிகார எல்லைக்குள் உள்ள அனைத்து நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட நிதி வருவாய் மீது வரிகளை வசூல் செய்கிறது. இது அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நிதியளிக்கும் முக்கிய ஆதாரமாகும். வியாபாரம் செய்வபர்கள், சம்பளதாரர்கள் என ஒவ்வொருவரும் வரி செலுத்த தகுதி உள்ளவர்கள் என்பதை தீர்மானிக்க வருமான வரி கணக்கை (ITR) தாக்கல் செய்ய வேண்டும். 

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது ஒரு கடினமான செயல்முறையாக இருக்கலாம், ஆனால் சம்பாதிக்கும் ஒவ்வொரு நபரும் செய்ய வேண்டியது கட்டாயம். கணக்கை தாக்கல் செய்யும் செயல்பாட்டில் மூன்று வழிமுறைகள் உள்ளன. முதலாவதாக, வரி செலுத்துவோர் வருமானம் மற்றும் வரிக் கடன்கள் பற்றிய விவரங்களை ஐடிஆர் வடிவத்தில் உள்ளிட வேண்டும். இரண்டாவதாக, அவர்கள் வரி வருவாயை ஆன்லைனில் சரிபார்க்க வேண்டும். மேற்கூறிய இரண்டு வழிமுறைகளும் முடிந்த பிறகுதான், வரிவிதிப்பு வருமான வரி அதிகாரத்தால் செயல்படுத்தப்படுகிறது. இது மூன்றாவது மற்றும் கட்டாயமான இறுதி வழிமுறை ஆகும்.

ஐ.டி.ஆர்-ஐ இ-வெரிஃபிகேஷன் செய்வது எப்படி?

இன்டர்நெட் பேங்கிங் (Net Banking)

வங்கி கணக்கு எண் (Bank Account Number)

ஆதார் ஓடிபி (Aadhaar OTP)

டிமேட் கணக்கு எண் (Demat Account Number) ஆகியவற்றில் ஏதேனும் ஒரு முறையை பயன்படுத்தி உங்கள் ஐடிஆர்-ஐ ஆன்லைனில் சரிபார்க்கலாம்.

வருமான வரி கணக்கின் இ- வெரிஃபிகேஷன் செய்வது கட்டாய நடவடிக்கையாகும். இது பல வழிகளில் மேற்கொள்ளலாம். அதை எப்படி சரிபார்ப்பது என்பது குறித்த வழிமுறைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தகவல் தொழில்நுட்பத் துறையின் இ-ஃபில்லிங் (e-filing) போர்ட்டலான  e-Filing Home Page, Income Tax Department, Government of India (incometaxindiaefiling.gov.in)

என்ற இணையதளத்தை பார்வையிடவும்

விரைவு இணைப்புகளின் (Quick Links) கீழ் கிடைக்கும் இ-வெரிஃபை வருவாய் இணைப்பைக் (e-verify Return link) கிளிக் செய்ய வேண்டும்.

ஐடிஆர் தாக்கல் செய்யும் போது உங்கள் பான் கார்டு எண் (PAN), மதிப்பீட்டு ஆண்டு அறிக்கை (Assessment Year) மற்றும் ஒப்புதல் எண்ணை (Acknowledgement Number) உள்ளிட வேண்டும்.

குறிப்பு: பான் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி ஐடிஆர் போர்ட்டலில் உள்நுழைந்து, அதில் “பார்வை / படிவங்களைக் காண்க” (View Returns / Forms) இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் ஒப்புதல் எண்ணைக் கண்டுபிடித்து கொள்ளலாம்.

பதிவேற்றிய ஐடிஆர் படிவத்தின் உள்ளீட்டைக் கண்டுபிடித்து அதில் இ-வெரிஃபை லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.

மின் சரிபார்ப்புக் குறியீட்டை (e-verification code - EVC) உருவாக்க நான்கு விருப்பங்கள் திரையில் தோன்றும்.

நீங்கள் நான்கு விருப்பங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி ஈ.வி.சியை உருவாக்கலாம். பிறகு அந்த குறியீட்டை உள்ளிட்டு "Submit" என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அதில் "கணக்கு வெற்றிகரமாக இ-வெரிஃபை செய்யப்பட்டது” என்று ஒரு செய்தி காண்பிக்கப்படும்.

Also read... Gold Rate | உயர்ந்தது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை... இன்றைய நிலவரம் என்ன?

நீங்கள் ஆதார் மூலம் ஈ.வி.சி- யை உருவாக்க விரும்பினால், உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு OTP-க்காக காத்திருக்கவும். ஐ.டி.ஆரை இ-வெரிஃபை செய்ய உங்களுக்கு கிடைத்த OTP ஐ சமர்ப்பிக்கவும். அதுவே, வங்கி கணக்கு மூலம் ஈ.வி.சியை உருவாக்க, வங்கி பெயர், ஐ.எஃப்.எஸ்.சி மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தி உங்கள் வங்கிக் கணக்கை முன்கூட்டியே சரிபார்க்கவும். உங்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் ஈ.வி.சி எண் கிடைக்கும்.

இதையடுத்து, டிமாட் கணக்கு மூலம் ஈ.வி.சியை உருவாக்க, DP ID, கிளையண்ட் ஐடி (Client ID), மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி (Email ID) ஆகியவற்றைப் பயன்படுத்தி முன்கூட்டியே சரிபார்க்கவும். அதன்பிறகு உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஈ.வி.சி கிடைக்கும். இன்டர்நெட் பேங்கிங் மூலம் ஈ.வி.சியை உருவாக்க, உங்கள் வங்கியின் போர்ட்டலில் உள்நுழைந்து இ-வெரிஃபை விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடிக்கு ஈ.வி.சி கிடைக்கும்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: