Home /News /business /

2022-ல் அதிக ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ள ஐடி மற்றும் டெலிகாம் நிறுவனங்கள்!

2022-ல் அதிக ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ள ஐடி மற்றும் டெலிகாம் நிறுவனங்கள்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Manpower Group-ன் சர்வேயில் பங்கேற்ற 3,020 நிறுவனங்களில் சுமார் 64% பேர் வரும் காலாண்டில் அதிக ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவோம் என்று கூறியுள்ளனர்.

2022 ஜனவரி - மார்ச் வரையிலான காலாண்டில் அதிக ஊழியர்களை பணிக்கு அமர்த்தும் திட்டத்தை நிறுவனங்கள் வெளிப்படுத்தியிருப்பதால், இந்திய வேலை சந்தையில் வரும் ஆண்டில் அதிக வேலைவாய்ப்புகள் இருக்கும் என்பது மேன்பவர் குரூப் சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வின் முடிவுகளின் படி, இந்தியாவில் இருக்கும் சுமார் 49 சதவீத நிறுவனங்கள் மேலே குறிப்பிட்டு உள்ள காலாண்டில் அதிகமானோருக்கு வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று எண்ணியுள்ளது தெரிய வந்திருக்கிறது.

இதற்கு காரணம் கோவிட் தொற்று நோய்க்கு பிந்தைய மீட்சியைப் பற்றி பல நிறுவனங்கள் நேர்மறையான கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளதாக மேன்பவர் குரூப்பின் ஆய்வு கூறுகிறது. மேலும் நிறுவனங்களின் நிகர பணியமர்த்தல் நோக்கம் சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட அதாவது கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்ததை விட உச்சத்தை எட்டியுள்ளது.

மேலும் இது (49%) நாட்டின் பணியமர்த்தல் துறையில் புதிய ரெக்கார்டாகவும் பார்க்கப்படுகிறது. சமீபத்திய மேன்பவர் குரூப் எம்ப்ளாய்மென்ட் அவுட்லுக்கின் இந்த புதிய சர்வே, இந்தியாவில் பணியமர்த்துவது தொடர்பான முதலாளிகளின் உணர்வை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இது முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது 5 சதவீத புள்ளிகள் மேம்பட்டுள்ளது என்று ஒரு PTI அறிக்கை தெரிவிகிறது. மேலும் ஆண்டு அடிப்படையில் (year on year basis) கணக்கிடும் போது 43 சதவீத புள்ளிகளால் மேம்பட்டுள்ளது.

மேன்பவர் குரூப் சர்வே வேறு என்ன சொல்கிறது.?

இது மட்டுமின்றி ManpowerGroup-ன் சர்வேயில் பங்கேற்ற 3,020 நிறுவனங்களில் சுமார் 64% பேர் வரும் காலாண்டில் அதிக ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவோம் என்று கூறியுள்ளனர். இதனுடன் ஒப்பிடுகையில், சுமார்15 சதவீத நிறுவனங்கள் மட்டுமே தங்கள் பணியாளர் அளவை குறைக்க போவதாககூறியுள்ளன. அதே நேரத்தில் சர்வேயில் பங்கேற்ற 20 சதவீத நிறுவனங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை நிலையான மட்டத்தில் வைத்திருக்க விரும்புவதாக கூறி இருக்கின்றன. இந்த சர்வேயில் பங்கேற்ற நிறுவனங்களில் 1% மட்டுமே பணியமர்த்தல் நோக்கம் குறித்து உறுதியாக தெரியவில்லை என்று கூறி இருக்கின்றன.

ManpowerGroup India-வின் நிர்வாக இயக்குநர் சந்தீப் குலாட்டி கூறுகையில் அதிகரித்த நுகர்வோர் செலவுகள், கல்வி துறை இயல்புக்கு திரும்பி இருப்பது மற்றும் தடுப்பூசி கவரேஜை விரைவுபடுத்துவதற்கான முயற்சிகளை அரசுகள் மேற்கொண்டு வருவதன் விளைவுகள் தொற்று கட்டுக்குள் வந்ததால் இந்தியா V- வடிவ மீட்சியை பதிவு செய்தது என்றார்.

Also read... இந்த வங்கியில் 10,000க்கு மேல் வரவு வைத்தாலே இனி கட்டணம் வசூல் - 2022 ஜனவரி 1 முதல் புதிய விதி அமல்!

எந்தத் துறையில் அதிக வேலைவாய்ப்புகள்..

ManpowerGroup சர்வே படி, பெரிய நிறுவனங்களில் 51% பேர் ஜனவரி முதல் மார்ச் காலாண்டில் அதிக ஊழியர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளனர். 25% கூடுதல் பணியாளர்களை நியமிக்கும் சிறிய நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது இது இரண்டு மடங்கு அதிகமாகும். ஐடி மற்றும் தொழில்நுட்பம், தகவல் தொடர்பு தொலைத்தொடர்பு மற்றும் ஊடகத் துறைகள் உட்பட 11 துறைகளில் கணக்கெடுக்கப்பட்ட துறைகளில் 60 சதவீதம் நிகர பணியமர்த்தல் நோக்கம் பதிவாகியுள்ளது. உணவகம் மற்றும் ஹோட்டல் துறை 56% நிகர பணியமர்த்தல் நோக்கங்களுடன் மிகவும் பின்தங்கி இருக்கிறது.

எனினும் 11 துறைகளில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் மற்றும் நாட்டிலுள்ள 4 பிராந்தியங்களிலும் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் 2022 முதல் காலாண்டில் தங்கள் ஊழியர்களுக்கு ஊதியத்தை அதிகரிக்க விரும்புவதாக கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது. தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான தேவை 400% வரை உயர்ந்துள்ளது. ஃபுல் ஸ்டேக் எஞ்சினியர்ஸின் சம்பள உயர்வு எதிர்பார்ப்புகளை அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியது. எனவே நிறுவனங்கள் 70-120% ரேஞ்சில் ஊதிய உயர்வுகளை வழங்கலாம் என்றும் தெரிகிறது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Business, IT Industry, IT JOBS, Telecom

அடுத்த செய்தி