முகப்பு /செய்தி /வணிகம் / TCS, Infosys-ஐ விட்டு வெளியேறும் ஊழியர்கள் - காரணம் இது தான்!

TCS, Infosys-ஐ விட்டு வெளியேறும் ஊழியர்கள் - காரணம் இது தான்!

காட்சி படம்

காட்சி படம்

டிஜிட்டல் மாற்றத்திற்கான தேவை அதிகரித்து வருவது, தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகளை திறக்கிறது.

மக்கள் தங்கள் வாழ்க்கையை சிறப்பாக்கி கொள்ளும் வகையில் சிறந்த பணி கலாச்சாரம், பல்வேறு சலுகைகள், வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல காரணிகளை தான் பணியிடங்களில் எதிர்பார்க்கிறார்கள்.

இன்ஜினியரிங் படிக்கும் அல்லது படித்து முடித்துள்ள இளைஞர்கள் பலரது கனவு TCS, Infosys போன்ற மிகப்பெரிய ஐடி நிறுவனங்களில் கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை பார்த்து வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என்பது தான். இதனிடையே சமீப காலமாக ஐடி ஜாம்பவான்களான டிசிஎஸ் & இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பார்த்து வந்த வேலையை விட்டு பல ஊழியர்கள் வெளியேறி வருகிறார்கள். பெரிய இந்திய ஐடி நிறுவனங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் வெளியேறுகிறார்கள் என்பதை ஒரு சிறிய செய்தியாக கடந்து செல்ல முடியாது.

டிசிஎஸ், இன்ஃபோசிஸ் போன்ற பெரிய ஐடி நிறுவனங்களின் வேலை மீதான மோகம் குறைகிறதா என்பதை இங்கே பார்க்கலாம்.

இருமடங்காக உள்ள அட்ரிஷன் ரேட்:

TCS மற்றும் Infosys ஊழியர்களின் அட்ரிஷன் விகிதங்கள் ஒரு வருடத்தில் இருமடங்காக உள்ளது. Attriton rates என்பது ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறும் விகிதமாகும். நிறுவனத்தை விட்டு வெளியேறும் ஊழியர்கள் காரணமாக அதிக அட்ரிஷன் விகிதங்களுடன் தற்போது ஐடி நிறுவனங்கள் போராடி வருகின்றன. இதற்கு TCS மற்றும் Infosys நிறுவனங்களும் விதிவிலக்கல்ல. இரண்டு நிறுவனங்களுமே கடந்த 6 காலாண்டுகளில் TCS மற்றும் Infosys இரண்டின் அட்ரிஷன் விகிதங்களும் நல்ல உயர்வை கண்டுள்ளன.

also read : குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகளின் முழு விவரம் ..

இதே போன்ற சிக்கல்கள்..

தொழில்துறை முழுவதும் உள்ள ஐடி நிறுவனங்கள் இதே போன்ற சிக்கல்களை கடுமையாக எதிர் கொண்டு வருகின்றன. கோவிட்-19 தொற்று பரவ துவங்கியதில் இருந்து டிஜிட்டல் மாற்றத்திற்கான தேவை அதிகமாக இருக்கிறது. இந்த நேரத்தில் ஐடி நிறுவனங்கள் ஊழியர்களின் அதிகரித்த செலவுகளை (employee costs) சுமக்கின்றன. ஊதியம், காப்பீடு, பலன்கள் உட்பட ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு ஒரு நிறுவனம் செலவழிக்கும் மொத்த பணத்தின் அளவு employee costs என குறிப்பிடப்படுகிறது.

பொதுவாக ஹெல்த் இன்சூரன்ஸ், போக்குவரத்து வசதிகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய ஊழியர் நலன்களுக்கான செலவுகள் கடந்த ஆண்டில் கணிசமாக அதிகரித்துள்ளன.

ஊழியர்கள் ஏன் பெரிய ஐடி நிறுவனங்களை விட்டு வெளியேறுகிறார்கள்?

டிஜிட்டல் மாற்றத்திற்கான (digital transformation) தேவை அதிகரித்து வருவது, தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகளை திறக்கிறது. எளிமையாக சொன்னால் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சிறந்த வளர்ச்சி வாய்ப்புகளை தருவதால், பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து பலர் வேலைகளை விட்டு வெளியேறுகின்றனர்.

also read : பெர்சனல் லோன் அல்லது கிரெடிட் கார்டு - எது உங்களுக்கான சிறந்த தேர்வாக இருக்கும்?

ஊழியர்களை கவர்ந்திழுக்கும் ஸ்டார்ட் அப்ஸ்..

புதிதாக வணிகத்திற்கு வந்துள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு கவர்ச்சிகரமானவை என்று இன்ஃபோசிஸ் குறிப்பிடுகிறது. இதுபற்றி கூறியுள்ள இன்ஃபோசிஸ் சிஓஓ பிரவின் ராவ், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எங்களின் பல ஊழியர்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமான இடமாகும். மேலும் மேலும் யூனிகார்ன்கள் வெளியே உள்ளதால் அந்தத் துறை இப்போது எங்கள் சில ஊழியர்களின் கவனத்தைஈர்த்து வருகிறது என்றார்.

அதிகரிக்கும் பணியமர்த்தல்..

மேற்கண்ட பிரச்சனை TCS மற்றும் Infosys- மட்டுமல்ல. இதே சிக்கலை எதிர்கொள்ளும் பல நிறுவனங்கள் தொழில்துறையில் உள்ளன. எனினும் அதிக அட்ரிஷன் விகிதங்களை எதிர்த்துப் போராட அதிக ஊழியர்களை நல்ல சம்பள உயர்வுகள் மற்றும் பதவி உயர்வுகளுடன் பல நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்துகின்றன.

இதனிடையே FY22-ல் 1.03 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களை பணியமர்த்தியுள்ளது TCS. கடந்த மூன்று மாதங்களில் மட்டும்மூன்றில் ஒரு பங்கை சேர்த்துள்ளது. அதன் ஊழியர்களின் எண்ணிக்கை இப்போது கிட்டத்தட்ட 6 லட்சமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Infosys, TCS