Home /News /business /

ஒவ்வொரு ஆதார் அட்டைக்கும் ரூ.4.78 லட்சம் கடன் தருகிறதா மோடி அரசு? - உண்மை என்ன!

ஒவ்வொரு ஆதார் அட்டைக்கும் ரூ.4.78 லட்சம் கடன் தருகிறதா மோடி அரசு? - உண்மை என்ன!

மாதிரி படம்

மாதிரி படம்

Aadhaar Card | சந்தேகம் வரும்படியான மெசேஜ் உங்களுக்கு வருகிறது என்றால், அது உண்மையானதா அல்லது போலியானதா என்பதை நீங்கள் ஆராய வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    மத்திய அரசிடம் இருந்து பொதுமக்களுக்கு கடன் உதவி வழங்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. அதாவது, அனைத்து ஆதார் அட்டைதாரர்களுக்கும் மத்திய அரசு ரூ.4.78 லட்சம் கடன் கொடுப்பதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நிதியுதவி தேவைப்படுபவர்கள், செய்தியுடன் உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்யுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், இந்த செய்தி முற்றிலும் போலியானது என்று PIB விளக்கம் அளித்துள்ளது. மத்திய நிதியமைச்சகத்தின் சார்பில் இதுபோன்ற எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.

    இதுகுறித்து பிஐபி ஃபேக்ட் செக் அமைப்பு தெரிவிக்கையில், “அனைத்து ஆதார் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு ரூ.4.78 லட்சம் கடன் கொடுக்க இருப்பதாக செய்தி ஒன்று உலா வருகிறது. இது போலியானது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், “அந்தச் செய்தியை யாருக்கும் ஃபார்வார்டு செய்யக் கூடாது. உங்களது நிதி விவகார தகவல்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்’’ என்றும் பிஐபி தெரிவித்துள்ளது.

    Read More : கடன் வாங்கியவர்களை டார்ச்சர் செய்ய கூடாது..விதியை கடுமையாக்கிய ஆர்.பி.ஐ!


    ஆன்லைன் தளங்களில் நாளுக்கு நாள் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. அதுகுறித்து வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். குறிப்பாக  'அரசு சார்பில் உங்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது, உங்களுக்கு வங்கிக் கடன் வழங்க ஒப்புதல் கிடைத்துள்ளது, இந்த இணையதளத்தில் சலுகை விலையில் பொருட்கள் விற்கப்படுகிறது' என்று ஏதோ ஒரு தலைப்பிட்டு சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்படுகின்றன.

    குறிப்பிட்ட உதவி அல்லது சலுகையை பெறுவதற்கு அவர்கள் இணைத்துள்ள லிங்க் உள்ளே செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படும். அதனுள்ளே சென்றால், நமது பெயர், வங்கிக் கணக்கு எண் போன்ற விவரங்களைப் பெற்று மோசடி செய்கின்றனர். ஆகவே, இதுபோன்ற மோசடிகள் குறித்து வாடிக்கையாளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அவ்வபோது அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    போலிச் செய்திகளை கண்டறிவது எப்படி

    சந்தேகம் வரும்படியான மெசேஜ் உங்களுக்கு வருகிறது என்றால், அது உண்மையானதா அல்லது போலியானதா என்பதை நீங்கள் ஆராய வேண்டும். உதாரணத்திற்கு அரசு ரீதியிலான தகவல்கள் என்றால், அதனை நீங்கள் https://factcheck.pib.gov.in. என்ற இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம் அல்லது +918799711259 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலமாக தகவல் அளிக்கலாம் அல்லது pibfactcheck@gmail.com. என்ற இமெயில் முகவரிக்கு உங்கள் சந்தேகங்களை தெரிவிக்கலாம்.

    தகவல்களை உறுதி செய்யாமல் ஏதேனும் ஒரு லிங்க்-ஐ கிளிக் செய்து, அதில் கேட்கப்படும் உங்கள் தனி விவரங்கள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை நீங்கள் கொடுத்தீர்கள் என்றால் நீங்கள் மோசடிக்கு உள்ளாக்கப்படலாம்.

     
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Aadhaar card, Business, Loan

    அடுத்த செய்தி