இந்தியாவில் பிட்காயின் முதலீடு சட்டப்பூர்வமானதா? க்ரிப்டோகரன்ஸி நடைமுறைகள் என்ன?

வெளிநாட்டு குடியுரிமை பெற்ற உறவினர்கள் மூலம் இந்தியர்கள் பிட்காயின் வர்த்தகத்தில் இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவில் பிட்காயின் முதலீடு சட்டப்பூர்வமானதா? க்ரிப்டோகரன்ஸி நடைமுறைகள் என்ன?
பிட்காயின்
  • News18
  • Last Updated: September 9, 2019, 6:21 PM IST
  • Share this:
இந்தியாவில் சமீப காலமாக பிட்காயின் முதலீடுகள் குறித்தப் பேச்சு பரவலாகி வருகிறது. ஆனால், மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுமைக்கு உட்பட்ட எந்தவொரு வங்கியும், ஆன்லைன் வர்த்தகத் தளமும் தனிநபருக்கோ அல்லது வணிக ரீதியான செயல்களுக்கோ க்ரிப்டோகரன்ஸிகளை வாங்கவோ விற்கவோ கூடாது என உத்தரவிட்டுள்ளது.

சர்வதேச அளவில் முதன்முதலாக நடைமுறைக்கு வந்த க்ரிப்டோகர்னஸிகளுள் பிட்காயினும் ஒன்று. கடந்த 2009-ம் ஆண்டு பிட்காயின் நெட்வொர்க் சதோஷி நகமோடோ என்னும் குழுமத்தால் தொடங்கப்பட்டது. பாதுகாப்பான பணப் பரிவர்த்தனைகளுக்காக க்ரிப்டோக்ராஃபி உதவியுடன் செயல்படும் டிஜிட்டல் கரன்ஸி ரகமே க்ரிப்டோகரன்ஸி என்பதாகும்.

உடைக்கமுடியாத அளவில் மிகுந்த தொழில்நுட்ப உதவியுடன் டேட்டாவை கோட் ஆக மாற்றி அமைக்கும் முறையே க்ரிப்டோக்ராஃபி. ஆக, கண்ணில் காண முடியாத டிஜிட்டல் பணம்தான் பிட்காயின். ஒவ்வொரு பிட்காயினும் ‘டிஜிட்டல் வாலெட்’ மூலமாக சேமித்து வைக்கப்படும். இந்த டிஜிட்டல் வாலெட்டை ஸ்மார்ட்போன் அல்லது கணினியின் மூலமாக இயக்க முடியும்.


ஒவ்வொரு பணப் பரிமாற்றமும் ‘ப்ளாக்செயின்’ ஆக பதிவு செய்யப்படும். இதன் மூலம் ஒவ்வொருவரின் பிட்காயின் வர்த்தகமும் தனித்துவமாக ட்ராக் செய்ய முடியும். பிட்காயின் மிகவும் மூத்தது. இதன் பிறகு லைட்காயின், எத்திரியம், ஜிகேஷ், டேஷ், ரிப்பிள் எனப் பல க்ரிப்டோகரன்ஸிகள் நடைமுறையில் உள்ளன.

ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரையில் க்ரிப்டோகரன்ஸிகள் சட்டத்துக்குப் புறம்பான்மையாகவே உள்ளன. இதுபோன்ற மறைநிலை கரன்ஸிகளுக்கு ஒருநாளும் சட்டப்பூர்வ அனுமதி அளிக்கக்கூடாது என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. இதை அதிகாரப்பூர்வமாக க்ரிப்டோகரன்ஸி தடை மற்றும் டிஜிட்டல் கரன்ஸி நடைமுறைப்படுத்துதல் மசோதா தெளிவுபடுத்துகிறது.

மேலும், இந்தியாவில் க்ரிப்டோகரன்ஸி பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை உடன் 25 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ரிசர்வ் வங்கி உத்தரவின் பெயரில் பிட்காயின் மட்டுமல்லாது க்ரிப்டோகரன்ஸி வகைகள் அத்தனையும் சட்டவிரோதமானவை. ஆனால், வெளிநாட்டு குடியுரிமை பெற்ற உறவினர்கள் மூலம் இந்தியர்கள் பிட்காயின் வர்த்தகத்தில் இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.மேலும் பார்க்க: வீட்டுக்கடன்களுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது- எஸ்.பி.ஐ தலைவர் அறிக்கை!

உயருகிறது மின் இணைப்பு டெபாசிட், பதிவுக் கட்டணம்!
First published: September 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்