Home /News /business /

வீட்டு கடன் வாங்க நினைப்பவர்கள் இன்சூரன்ஸ் செய்வது கட்டாயமா??

வீட்டு கடன் வாங்க நினைப்பவர்கள் இன்சூரன்ஸ் செய்வது கட்டாயமா??

காட்சி படம்

காட்சி படம்

Home Loan Insurance | வீடு கட்டுவது வீடு வாங்குவது என்பது அனைவரின் வாழ்விலும் பெரும் கனவாக அமைந்திருக்கும் ஒன்று. அப்படி வீடு வாங்குவதற்காகவோ அல்லது கட்டுவதற்காகவோ நாம் வாங்கும் வீட்டுக்கடனுக்கான காப்பீடு பற்றிய தகவல்கள் நமக்கு தெரிவதில்லை,

மேலும் படிக்கவும் ...
    ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அல்லது காப்பீட்டு கட்டுப்பாட்டாளர் எப்போதுமே நீங்கள் கடனைப் பெறுவதற்காக காப்பீடு வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா?

    இது ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவால் (ஆர்பிஐ) சொத்துக்கு காப்பீடு செய்யும் விதிமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழுகிறது.

    ரிசர்வ் வங்கி அல்லது காப்பீட்டு ஒழுங்குமுறை நிறுவனம் கடனைப் பெறுவதற்காக நீங்கள் காப்பீட்டை வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. மேலும், பரிந்துரைக்கப்பட்ட காப்பீட்டாளர்களிடமிருந்து மட்டுமே காப்பீட்டை வாங்குமாறு வங்கிகள் உங்களை வற்புறுத்த முடியாது. இருப்பினும், வங்கிகள் வீட்டுக் கடனை நீட்டிக்கும்போது சொத்து மற்றும் ஆயுள் காப்பீட்டைக் கேட்பது பொதுவான நடைமுறையாக உள்ளது.

    அடமானம் வைக்கப்பட்ட சொத்து மற்றும் கடன் வாங்குபவரின் நிதி நலனைப் பாதுகாக்க காப்பீடு அவசியமாக பார்க்கப்படுகிறது. அதிக வட்டி வசூலிக்கும் பல வங்கிகள் காப்பீடு வாங்க விதிவிலக்கு அளிக்கின்றன. வீடு சேதமடைந்தாலோ அல்லது கடன் வாங்கியவர் திடீரென இறந்தாலோ அதனால் ஏற்படும் இழப்பின் அபாயத்தை சரி செய்ய நீங்கள் செய்யும் காப்பீடு பயன்படுகிறது.

    Read More : பெண்களுக்காக அரசு வழங்கும் கடனுதவிகள்.. எப்படி பெறுவது? முழு விபரம்!


    மேலும் கடன் பெறுவார் தாங்களாவே சொத்து காப்பீட்டை வாங்குவதும் சிறந்த யோசனை தான். ஏனெனில் இது உங்களுடைய நிதி நிலைக்கு நல்லது. வீட்டுக் காப்பீடு மிகவும் குறைவான தொகையை கொண்டது, தீ அல்லது இயற்கை சீற்றங்களின் போது வீடு சேதமடைந்தால் நீங்கள் செய்த காப்பீடு மூலமாக அதனை ஈடு செய்ய முடியும். அதேபோல் இந்தக் காப்பீட்டை நீங்கள் விரும்பும் நிறுவனத்திடம் இருந்து வாங்கலாம், அதை வங்கியில் இருந்து வாங்க வேண்டிய அவசியமில்லை. 1 கோடி ரூபாய் செலவில் கட்டும் ஒரு வீட்டிற்கு வீட்டுக் காப்பீட்டுச் செலவு சுமார் ₹3,500 ஆகும்.

    அடுத்து ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி வைத்திருப்பவர்கள் பலருக்கும் எழும் சந்தேகம், ஏற்கனவே ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் டாப் அப் போன்ற பலவற்றை வைத்திருந்தாலும், கேஸ் லெஸ் சேவைக்கென வேறு நிறுவனத்தில் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டுமா? என்பது தான். உதாரணமாக 50 வயதைக் கடந்த தம்பதிக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக நியூ இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து இரண்டு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகள் மற்றும் 5 ஆண்டுகளாக எச்டிஎப்சி நிறுவனத்திடம் இன்சூரன்ஸ் டாப் செய்து வருகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள்.

    கேஸ் லெஸ் மருத்துவ சேவையை பெற எனது பாலிசியை வேறு ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்திற்கு மாற்ற வேண்டுமா? என்ற கேள்விக்கு விளக்கம் இதோ...

    உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸை ஒரு காப்பீட்டாளரிடம் இருந்து மற்றொருவருக்கு மாற்றுவதை நீங்கள் கருத்தில் கொள்ளும்போது வலுவான காரணம் இருக்க வேண்டும். அனைத்து காப்பீடு நிறுவனங்களும் பணமில்லா (Cashless) வசதியை வழங்குகின்றன. இருப்பினும், மருத்துவமனைகளின் நெட்வொர்க் காப்பீட்டாளரைப் பொறுத்து மாறுபடும். உங்களுக்கு விருப்பமான மருத்துவமனைகள் உங்கள் காப்பீட்டாளரின் நெட்வொர்க்கில் இல்லை என்றால், உங்கள் திட்டத்தை போர்ட் செய்வதை நீங்கள் பரிசீலிக்கலாம்.

    போர்டிங்கை மதிப்பிடுவதற்கான மற்றொரு காரணம் உங்கள் தற்போதைய திட்டத்தில் உள்ள கட்டுப்பாடுகளாகும். இந்தக் கட்டுப்பாடுகளில் அறை வாடகைக் கட்டுப்பாடு, இணை ஊதியம் அல்லது நோய் வாரியான கட்டுப்பாடுகள் ஆகியவை அடங்கும். உங்கள் திட்டத்தில் அத்தகைய கட்டுப்பாடுகள் இருந்தால், பாலிசியில் முழு உரிமைகோரலை அனுமதிக்கும் திட்டத்திற்கு நீங்கள் போர்ட் செய்யலாம்.

    நிர்வாகச் சிக்கலைத் தவிர, போர்டிங்கில் மட்டுப்படுத்தப்பட்ட குறைபாடு உள்ளது. சில காப்பீட்டாளர்கள் உங்கள் திட்டத்தை போர்ட் செய்ய ஒப்புக்கொள்வதற்கு முன் மருத்துவ பரிசோதனையை வலியுறுத்தலாம். மேலும், புதிய திட்டத்தில், கூடுதல் காத்திருப்பு காலங்கள் எதுவும் அறிமுகப்படுத்தப்படவில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும். சில காப்பீட்டாளர்கள் முழு உத்தரவாதத் தொகையையும் அதாவது, அடிப்படைத் தொகை மற்றும் ஒட்டுமொத்த போனஸ் ஆகியவற்றை போர்ட் செய்ய அனுமதிப்பார்கள். எனவே இதனை உங்களுடைய இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் பரிசோதித்துக் கொள்வது நல்லது.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Home insurance, Home Loan

    அடுத்த செய்தி