ஹோம் /நியூஸ் /வணிகம் /

ஹால்மார்க் எவற்றுக்கு பொருந்தும்? எவற்றுக்கு பொருந்தாது?

ஹால்மார்க் எவற்றுக்கு பொருந்தும்? எவற்றுக்கு பொருந்தாது?

காட்சி படம்

காட்சி படம்

BIS hallmark, | இந்தியாவில் தற்போது தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு உலோகங்களுக்கு மட்டுமே ஹால்மார்க்கிங் செய்யப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai |

நவராத்திரி முடிந்த நிலையில், தற்போது தீபாவளி பண்டிகையை நோக்கி கொண்டாட்டங்கள் நகர்கிறது. அஷ்யதிரிதியை போலவே தீபாவளியும் நகைகளை வாங்குவதற்கு ஏற்ற நாட்களாகக் கருதப்படுகிறது. இதனால், பலர் நகைக்கடைகளுக்குச் செல்ல தயாராகி வருகின்றனர்.

பெரும்பாலான தங்க ஆபரணங்கள் என்று வரும்போது, ​​கடைகளில் ஹால்மார்க் செய்யப்பட்ட பொருட்களை மட்டுமே விற்பனை செய்வார்கள். ஆனால் வெள்ளி நகைகள் மற்றும் நாணயங்கள் தரத்தை எப்படி கண்டுபிடிப்பது? தெரிந்துகொள்வோம் வாருங்கள் …

ஹால்மார்க் என்றால் என்ன?

இந்திய தரநிலைகள் பணியகத்தின்(BIS ) படி, ஹால்மார்க்கிங் என்பது, விலை உயர்ந்த உலோகங்களின் விகிதாசார உள்ளடக்கத்தின் துல்லியமான நிர்ணயம் மற்றும் அவற்றின் முறையான பதிவு ஆகியவற்றைக் குறிக்கிறது. பல நாடுகளில், ஹால்மார்க்குகள் விலைமதிப்பற்ற உலோகப் பொருட்களின் தூய்மை அல்லது நேர்த்திக்கு உத்தரவாதம் அளிக்கும் அதிகாரப்பூர்வ அடையாளங்களாக செயல்படுகின்றன.

விரைவில் டிஜிட்டல் கரன்சி... ரிசர்வ் வங்கி அறிவிப்பு

இந்தியாவில் தற்போது தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு உலோகங்களுக்கு மட்டுமே ஹால்மார்க்கிங் செய்யப்படுகிறது. கலப்படம், போலி நகைகளை தவிர்ப்பதற்காக கொண்டுவரப்பட்டது. நாட்டில் தங்க, வெள்ளி நகைகளின் சட்டப்பூர்வ தரநிலைகளை பராமரிக்க உற்பத்தியாளர்களுக்கு இது உதவுகிறது.

தங்கத்திற்கு ஹால்மார்க் கட்டாயம் :

இந்திய அரசு (GoI) கடந்த ஆண்டு ஜூன் நடுப்பகுதியில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் கட்டாயமாக்கியது. ஜூன் 1, 2022 முதல், ஹால்மார்க் செய்யப்பட்ட தங்க நகைகளை அதன் தூய்மையைப் சரிபார்த்து மட்டுமே விற்பனை செய்ய உற்பத்தியாளர்கள் சட்டப்பூர்வமாகக் கட்டுப்பட்டுள்ளனர். இது வெள்ளை தங்க உலோகக் கலவைகளுக்கும் பொருந்தும்.

தங்கம் தொடர்பாக ஒரு குறிப்பிட்ட அளவு தெளிவு இருந்தாலும், வெள்ளி நகைகள் மற்றும் நாணயங்கள் பற்றி மக்களுக்கு இன்னும் கேள்விகள் உள்ளன. தங்கப் பொருட்களுக்கு நடைமுறையில் உள்ள கட்டாய ஹால்மார்க்கிங் விதிகள் வெள்ளி நகைகள் மற்றும் நாணயங்களுக்குப் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

இனி செல்லபிராணிகளுடனே விமானத்தில் பயணிக்கலாம்..! - ஆகாசா ஏர் நிறுவனம் அசத்தல் அறிவிப்பு

நாணயத்திற்கு கிடையாது :

உண்மையில், கட்டாய ஹால்மார்க்கிங் தங்க நாணயங்களுக்கும் பொருந்தாது, ஏனெனில் இது விலைமதிப்பற்ற உலோகத்தால் செய்யப்பட்ட கலைப்பொருட்கள் மற்றும் நகைகளை மட்டுமே பொருந்தும். நாணயங்கள் பெரும்பாலும் கலப்படம் இன்றி செய்யப்படுகிறது.

வெள்ளிப் பொருட்களுக்கு :

வெள்ளிப் பொருட்களுக்கு ஹால்மார்க் செய்ய உற்பத்தியாளர்கள் சட்டப்பூர்வமாகக் கட்டுப்பட்டிருக்கவில்லை என்றாலும், வெள்ளியின் ஆபரணங்களைக் குறிக்க சில நேர்த்தி மற்றும் தூய்மை தரங்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இந்திய வெள்ளியின் ஆறு கிரேடுகளான 990, 970, 925, 900, 835 மற்றும் 800 ஆகியவை முறையே 99, 97, 92.5, 90, 83.5 மற்றும் 80 சதவீத தூய்மை நிலைகளைக் கொண்டுள்ளன.

BIS-ன் படி, நுகர்வோர் தங்களுடைய நகைகள் அல்லது விலைமதிப்பற்ற உலோக மாதிரிகளை BIS அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீடு மற்றும் ஹால்மார்க்கிங் மையங்களில் சோதனை செய்யலாம்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Gold, Jewels