வெளியாகியுள்ள பொது அறிவிப்பில், ஈவன்ஹெல்த் (Even Health) என்கிற நிறுவனத்தின் வழியாக வழங்கப்படும் பாலிசிகள், ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்கள் அல்ல என்று இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் சுட்டிக்காட்டி உள்ளது. மேலும் குறிப்பிட்ட நிறுவனம் இந்தியாவின் இன்சூரன்ஸ் ரெகுலேட்டரின் கீழ் பதிவு செய்யப்படவில்லை என்பதையும் வெளியான அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
www.even.in என்ற இணையதளத்தை இயக்கும் ‘Even Healthcare Pvt Ltd’ என்கிற நிறுவனம் வழியாக கிடைக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்கள் உண்மையான ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்கள் அல்ல என்று ஐஆர்டிஏஐ (Irdai) வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் “கூறப்பட்ட நிறுவனமானது ஐஆர்டிஏஐ-இல் பதிவுசெய்யப்பட்ட நிறுவனம் அல்ல. எனவே ‘ஈவன் ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட்’ வழங்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களுக்கு சந்தா செலுத்தும் பொதுமக்கள் ஆபத்தோடு ஒப்பந்தம் செய்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது” என்றும் ஐஆர்டிஏஐ தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
also read : இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பதற்கு முன்பு இந்த விஷயங்களை கவனிக்க மறந்து விடாதீர்கள்!
"ஐஆர்டிஏஐ இல் பதிவுசெய்யப்பட்ட காப்பீட்டு நிறுவனங்கள் அல்லது அவர்களால் நியமிக்கப்பட்ட காப்பீட்டு முகவர்கள் மற்றும் காப்பீட்டு இடைத்தரகர்கள் மட்டுமே காப்பீட்டுத் தயாரிப்புகளை விற்க முடியும் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கட்டுப்பாடற்ற நிறுவனங்களைக் கையாளும் போது எச்சரிக்கையாக இருக்கும் படியும், ஐஆர்டிஏஐ இல் பதிவு செய்யப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து மட்டுமே ஹெல்த் இன்சூரன்ஸ் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை பெறும்படியும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்றும் இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.
ஐஆர்டிஏஐ இல் பதிவுசெய்யப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களின் பட்டியலுக்கான இணைப்பையும் இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் வழங்கி உள்ளது. குறிப்பிட்ட நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ பட்டியலை கீழ்வரும் இணைப்பின் வழியாக சரி பார்க்கவும்:
also read : பெண்களுக்கான எல்.ஐ.சி பாலிசி: ஒரு நாளைக்கு ரூ.29 முதலீடு செய்து ரூ.4 லட்சத்தை பெறலாம்!
ஈவன்.இன் (Even.in) தற்போது மாதத்திற்கு ரூ.525 க்கு மெம்பர்ஷிப்பை வழங்குகிறது. இந்த மெம்பர்ஷிப் வழியாக வரம்பற்ற மருத்துவ ஆலோசனைகள் (கன்சல்டேஷன்ஸ்) மற்றும் நோயறிதல்களை (ட்யாக்னாஸ்டிக்ஸ்) வழங்குவதாகவும், உடன் ரூ.50 லட்சம் ஹாஸ்பிட்டல் கவரை (hospital cover) வழங்குவதாகவும் இந்நிறுவனம் கூறுகிறது. இருப்பினும், ஐஆர்டிஏஐ-இன் கூற்றுப்படி, இந்தத் திட்டங்களுக்கு சந்தா செலுத்தும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஆபத்துகளை எதிர்கொள்ள நேரும்.
ஈவன்.இன் நிறுவனமானது கோஸ்லா வென்ச்சர்ஸ், பீட்டர் தியேல்-லேட் ஃபவுன்டஸ் ஃபண்ட், பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ் சிஇஓ நிகேஷ் அரோரா, க்ரெட் தலைவர் குணால் ஷா மற்றும் ஜெரோதா இணை நிறுவனர் நிதின் காமத் மற்றும் பலரால் ஆதரிக்கப்படுகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Insurance