Home /News /business /

கொரோனா கவாச், கொரோனா ரக்ஷக் பாலிசிகளுக்கான 'காலக்கெடு' மீண்டும் நீட்டிப்பு.!

கொரோனா கவாச், கொரோனா ரக்ஷக் பாலிசிகளுக்கான 'காலக்கெடு' மீண்டும் நீட்டிப்பு.!

corona Insurance

corona Insurance

Corona Health Insurance | இந்த பாலிசியின் கீழ் ரூம் / ஐசியு வரம்பு எதுவும் இல்லை. மருத்துவர் / அறுவை சிகிச்சைக்கான கட்டணம், மயக்க மருந்து, ரத்தம், ஆக்சிஜன், ஆபரேஷன் தியேட்டர் கட்டணம், மருந்துகள், நோய் கண்டறிதல் போன்ற மருத்துவமனைச் செலவுகளை இந்த பாலிசி உள்ளடக்கும்.

மேலும் படிக்கவும் ...
குறுகிய கால கோவிட்-தொடர்புடைய உடல்நலக் காப்பீட்டுக் கொள்கைகளான கொரோனா கவாச் பாலிசி (Corona Kavach Policy) மற்றும் கொரோனா ரக்ஷக் ஹெல்த் இன்சூரன்ஸ் (Corona Rakshak Health Insurance) திட்டங்களின் விற்பனை மற்றும் புதுப்பிற்க்கான காலக்கெடுவை செப்டம்பர் 30, 2022 வரை நீட்டிக்குமாறு காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு அனைத்து லைஃப் ஜெனரல் மற்றும் ஸ்டேன்ட்அலோன் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமானது (Insurance Regulatory and Development Authority of India) கடந்த ஜூன் 2020-இல் கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் மருத்துவ அவசரநிலை விளைவாக ஏற்படும் நிதி சார்ந்த பிரச்சனைகளுக்காக இந்த திட்டங்களை அறிமுகம் செய்தது.

கொரோனா கவாச் மற்றும் கொரோனா ரக்ஷக் ஆகிய இரண்டுமே அடிப்படையான மற்றும் குறைந்த விலை கொண்ட ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகள் ஆகும். அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில், இந்த பாலிசிகள் மார்ச் 2021 வரை விற்கப்பட வேண்டும் என்று நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் கோவிட்-19-இன் இரண்டாவது அலை பரவியதால் செப்டம்பர் 30, 2021 வரை பாலிசிகளை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது செப்டம்பர் 30, 2022 வரை இந்த காலக்கெடுவை நீட்டிக்க ஐஆர்டிஏஐ (IRDAI) முடிவு செய்துள்ளது.



கொரோனா கவாச் இன்சூரன்ஸ் பாலிசி :

கொரோனா கவாச் பாலிசி - இழப்பீடு அடிப்படையிலான ஒரு திட்டமாகும். இது மருத்துவமனையில் அனுமதித்தல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு முந்தைய சிகிச்சை, வீட்டு பராமரிப்பு சிகிச்சை செலவுகள் மற்றும் கோவிட் நோயாளிகளுக்கான ஆயுஷ் சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கியது. குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.50,000 ஆகும் மற்றும் அதிகபட்சம் ரூ.5 லட்சம் ஆகும்.

Also Read : state bankல் இப்படியொரு சூப்பரான சேமிப்பு திட்டமா?

இதன் பாலிசி காலமானது 3.5, 6.5 அல்லது 9.5 மாதங்கள் மற்றும் பாலிசிதாரரின் விருப்பத்தின்படி தேர்வு செய்யலாம். இந்த பாலிசியின் கீழான 'வெயிட்டிங் பீரியட்' வெறும் 15 நாட்கள் மட்டுமே ஆகும், மேலும் இந்த பாலிசி தனிநபர் மற்றும் ஃபேமிலி ஃப்ளோட்டருக்கும் கிடைக்கும்.

Also Read : குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகளின் முழு விவரம் ..

இந்த பாலிசியின் கீழ் ரூம் / ஐசியு வரம்பு எதுவும் இல்லை. மருத்துவர் / அறுவை சிகிச்சைக்கான கட்டணம், மயக்க மருந்து, ரத்தம், ஆக்சிஜன், ஆபரேஷன் தியேட்டர் கட்டணம், மருந்துகள், நோய் கண்டறிதல் போன்ற மருத்துவமனைச் செலவுகளை இந்த பாலிசி உள்ளடக்கும்.

health insurance polices medical policy schemes details

கொரோனா ரக்ஷக் இன்சூரன்ஸ் பாலிசி :

கொரோனா ரக்ஷக் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் என்பது நன்மைகளை அடிப்படையாக கொண்ட ஒரு திட்டமாகும் (benefit-based plan), இது பாலிசிதாரருக்கு - குறைந்தபட்சம் தொடர்ந்து 72 மணிநேரம் கோவிட் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்தால் - மொத்த தொகையையும் செலுத்தும்.

Also Read : பென்சன் பெறுபவர்கள் கூடுதல் உதவித்தொகை கிடைக்க இதை செய்யுங்கள்!

இதன் கீழ் காப்பீட்டுத் தொகை ரூ 50,000 முதல் ரூ 2.5 லட்சம் வரை இருக்கும் மற்றும் கவரேஜ் காலம் 3.5 மாதங்கள், 6.6 மாதங்கள் மற்றும் 9.5 மாதங்கள் ஆகும். இந்த பாலிசி தனிப்பட்ட கவரேஜை மட்டுமே வழங்குகிறது மற்றும் காப்பீட்டுத் தொகையில் 100% செலுத்தினால் பாலிசி நிறுத்தப்படும்.
Published by:Selvi M
First published:

Tags: Corona, Insurance

அடுத்த செய்தி