Home /News /business /

ஐஆர்சிடிசி தளத்தில் இனி டிக்கெட் புக் செய்வது ஈஸி!

ஐஆர்சிடிசி தளத்தில் இனி டிக்கெட் புக் செய்வது ஈஸி!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

IRCTC iPay என்ற பேமெண்ட் கேட்வே சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
நீங்கள் ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் புக் செய்யும் போது பரிவர்த்தனை தோல்வி அடைந்துள்ளதா? இப்படிச் செய்தால் இனி தோல்வி அடையாது என்று ஐஆர்சிடிசி இணையதளம் அறிவித்துள்ளது.

ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் புக் செய்யும் போது பணப் பரிவர்த்தனை தோல்வி அடைந்து சிரமம் ஏற்படுகிறது என்று தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன.

இதற்குத் தீர்வு காணும் விதமாக IRCTC iPay என்ற பேமெண்ட் கேட்வே சேவை அறிமுகம் செய்துள்ளது.

IRCTC iPay பேமெண்ட் கேட்வே சேவை மூலம் டிக்கெட்டுக்கான கட்டணத்தைச் செலுத்தும் போது எக்காரணத்தைக் கொண்டும் பரிவர்த்தனை ரத்தாகாது என்று ஐஆர்சிடிசி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பிற பேமெண்ட் கேட்வே சேவையில் உள்ளது போன்றே ஐஆர்சிடிசியின் இந்தப் புதிய பேமெண்ட் கேட்வேயிலும் ஆன்லைன், கிரெடிட்/டெபிட் கார்டு, யூபிஐ போன்ற வழிகளில் பணம் பரிவர்த்தனை செய்ய முடியும்.

IRCTC iPay பேமெண்ட் கேட்வேயை எம்எம்ஏடி கம்யுனிகேஷன்ஸ் என்ற டெல்லியை சேர்ந்த நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிறுவனம் ஐஆர்சிடிசியின் தொழில்நுட்ப கூட்டாளியாகவும் உள்ளது.

மேலும் பார்க்க:
Published by:Tamilarasu J
First published:

Tags: IRCTC

அடுத்த செய்தி