ஐஆர்சிடிசி இணையதளத்தில் விமான டிக்கெட் புக் செய்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பயண இன்சூரன்ஸை இலவசமாக அளிக்க உள்ளனர்.
தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் ஏற்கனவே விமானப் பயணங்களுக்கு இன்சூரன்ஸ் வழங்கினாலும் அதற்குக் கூடுதலாகக் கட்டணத்தை வசூலிக்கின்றன.
“உள்நாடு மற்றும் வெளிநாடு பயணங்கள் என இரண்டுக்கும் இலவசமாகப் பயண இன்சூரன்ஸ் வழங்கப்படும்” என ஐஆர்சிடிசி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான எம் பி மால் தெரிவித்துள்ளார். இதுவே ரயில் டிக்கெட் புக் செய்யும் போது ஒரு ரூபாய் பயண இன்சூரன்ஸ் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஐஆர்சிடி தளத்தில் தினமும் 5,000 முதல் 6,000 விமான டிக்கெட்கள் புக் செய்யப்படுகிறது. தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் ஒவ்வொரு டிக்கெட்டிற்கும் 200 ரூபாய் செயல்பட்டுக் கட்டணம் வசூலிக்கின்றன. ஆனால் ஐஆர்சிடிசி தளம் 50 ரூபாய் மட்டுமே பெறுகிறது. மேலும் டிக்கெட்டை ரத்து செய்யும் போது எந்தக் கட்டணத்தையும் வசூலிப்பதில்லை.
சென்ற மாதம் முதல் ஏர் இந்தியா பயணிகள் மஹாராஜா எக்ஸ்பிரஸ் ஆடம்பர ரயில் டிக்கெட் புக் செய்யும் போது 17 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது. விரைவில் ஐஆர்சிடிசி தளத்தில் ஹோட்டல் புக்கிங் சேவையும் வழங்கப்பட உள்ளது.
மேலும் படிக்க: நாடு முழுவதும் 8-ம் வகுப்பு வரை இந்தி கட்டாயம்?
Published by:Tamilarasu J
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.