ஹோம் /நியூஸ் /வணிகம் /

பணமில்லாமல் ரயில் டிக்கெட் புக் செய்யலாம்... சூப்பர் ப்ளான்.. அசத்தும் IRCTC!

பணமில்லாமல் ரயில் டிக்கெட் புக் செய்யலாம்... சூப்பர் ப்ளான்.. அசத்தும் IRCTC!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ரயில்களில் முன்பதிவு செய்ய, இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) பயணிகளுக்காக "ட்ராவல் நவ் பே லேட்டர்" என்ற புதிய வசதியை தொடங்கியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சாமானிய மக்களின் போக்குவரத்தில் ரயில்வே உயிர்நாடியாக கருதப்படுகிறது. பேருந்து போக்குவரத்தை விட ரயில் போக்குவரத்து மக்களின் பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில் இருக்கிறது.

எனவே தினமும் கோடிக்கணக்கான பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்கள் மற்றும் தங்களது வீடுகளுக்கு ரயிலில் பயணம் செய்கின்றனர். நாட்டில் பண்டிகை காலம் தொடங்கியுள்ள நிலையில் வேலை நிமித்தமாக வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் வசிக்கும் அல்லது தங்கியிருக்கும் மக்கள், உறவுகளுடன் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பயணிகளின் வசதிக்காகவும், உறுதி செய்யப்பட்ட சீட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இந்திய ரயில்வே பல பண்டிகைகால சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. இந்நிலையில் ரயில்களில் முன்பதிவு செய்ய, இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) பயணிகளுக்காக "ட்ராவல் நவ் பே லேட்டர்" என்ற புதிய வசதியை தொடங்கியுள்ளது.

Read More : இந்த மாதம் முதல் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பில் வந்திருக்கும் முக்கிய மாற்றம்!

இதற்காக IRCTC உடன் CASHe பார்ட்னர்ஷிப் சேர்ந்துள்ளது. புதிய ஆப்ஷனான Travel Now Pay Later வசதி மூலம், IRCTC-யின் அதிகாரபூர்வ வெப்சைட் மூலம் வாடிக்கையாளர்கள் பணம் இல்லாமல் கூட ரயில்வே டிக்கெட்டுகளை புக்கிங் செய்து கொள்ளலாம். பின்னர் EMI முறையில் குறிப்பிட்ட சில மாதங்களுக்குள் பணம் செலுத்தி கொள்ளலாம். CASHe-யுடன் கூட்டு சேர்ந்து IRCTC அறிமுகப்படுத்தி உள்ள இந்த புதிய வசதியை Rail Connect ஆப்ஸிலும் மக்கள் பெறலாம்.

டிக்கெட் புக்கிங் செய்ததிலிருந்து 6 மாதங்களுக்குள்...

அவசரமாக ரயில் டிக்கெட் புக்கிங் செய்ய வேண்டிய சூழல் ஆனால் கையில் பணம் இல்லை என்ன செய்வது போன்ற இக்கட்டான சூழலில் உள்ள மக்கள் IRCTC-யின் Travel Now Pay Later வசதி மூலம், பணம் செலவின்றி ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். CASHe-ன் EMI ஆப்ஷனை தேர்ந்தெடுப்பதன் மூலம் எளிதாக டிக்கெட்டுகளை புக்கிங் செய்வதோடு, அதன் டிக்கெட்டுகளுக்கான பணத்தை 3 முதல் 6 மாதங்களுக்குள் EMI ஆப்ஷன் மூலம் செலுத்தலாம். இந்த புதிய வசதியின் மூலம் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரயில் பயணிகள் பெரும் பலன்களை பெறுவார்கள் என்று இந்திய ரயில்வே குறிப்பிட்டுள்ளது.

தட்கல் மற்றும் நார்மல் டிக்கெட் புக்கிங் ஆகிய இரண்டிற்கும் டிராவல் நவ் மற்றும் பே லேட்டர் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது சிறப்பு. ரிசர்வ்டு மற்றும் தட்கல் டிக்கெட்டுகளை புக்கிங் செய்யும் பயணிகளுக்கு IRCTC-யின் செக்அவுட் பேஜில் EMI பேமென்ட் ஆப்ஷன் கிடைக்கும். CASHe-ன் TNPL EMI பேமென்ட் ஆப்ஷனானது அனைத்து யூஸர்களும் எந்த ஆவணமும் இல்லாமல் இந்த வசதியைப் பெறுவதற்கு தானாகவே தகுதி பெறுவதன் மூலம் தடையற்ற பயனர் அனுபவத்தை வழங்குகிறது.

புதிய வசதி பற்றி கூறி இருக்கும் CASHe தலைவர் வி. ராமன்குமார், IRCTC-யின் அதிகாரபூர்வ வெப்சைட் மற்றும் ஆப்ஸ் மூலம் இந்த புதிய TNPL வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. IRCTC ட்ராவல் ஆப்-ஆனது 90 மில்லியனுக்கும் அதிகமான டவுன்லோட்ஸ்களை கொண்டுள்ளது மற்றும் ஒரு நாளைக்கு 1.5 மில்லியனுக்கும் அதிகமான ரயில்வே டிக்கெட்கள் புக்கிங் செய்யப்பட்டு வருகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், அதிகளவிலான மக்களுக்கு TNPL வசதியை வழங்க முடியும். எங்களது நிதி சேவைகளை TNPL சேவை மூலம் முடிந்தவரை நாடு முழுவதும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளளோம். மேலும் நாட்டின் மிகப்பெரிய டிஜிட்டல் கிரெடிட் தளமாக மாறவும் முயற்சிக்கிறோம் என்றார்.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Business, IRCTC