Home /News /business /

ஐ.ஆர்.சி.டி.சி., ஐ.பி.ஓ இன்று தொடங்கியது! முதலீடு செய்யலாமா?

ஐ.ஆர்.சி.டி.சி., ஐ.பி.ஓ இன்று தொடங்கியது! முதலீடு செய்யலாமா?

கோப்புப் படம்

கோப்புப் படம்

IRCTC IPO opens on September 30, price band fixed at Rs 315-320 per share |

  • News18
  • Last Updated :
    இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐ.ஆர்.சி.டி.சி இன்று ஐ.பி.ஓ வை தொடங்கியுள்ளது. வரும் அக்டோபர் 3-ம் தேதி வரை முதலீட்டாளர்களுக்கு இதன் மூலம் பங்குகள் விற்கப்படும்.

    பொதுத்துறை நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி, ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு, கேட்டரிங், குடிநீர் விநியோகம், டிராவல் அண்டு டூரிஸம் என்கிற நான்கு பிரிவுகளில் சேவை வழங்கி வணிகம் செய்கின்றது. கடந்த மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி, இந்த நிறுவனத்தின் மொத்த வருமானம் 27% அதிகரித்து, ரூ.1,867.88 கோடியாக இருக்கிறது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.1,470.46 கோடியாக இருந்தது.

    இந்த நிலையில், ஐ.ஆர்.சி.டி.சி, நிறுவனம் ஐ.பி.ஓவை (Initial Public Offering) இன்று தொடங்கியுள்ளது. இந்தப் புதிய பங்கு வெளியீட்டின்மூலம் தோராயமாக 645 கோடி ரூபாய் வரை திரட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பங்கு வெளியீட்டின் போது, 10 ரூபாய் மதிப்புள்ள சுமார் 2 கோடி பங்குகளை, மத்திய அரசு விற்பனை செய்ய இருக்கிறது.

    இந்த நிறுவனத்தின் 100 சதவிகித பங்குகள் மத்திய அரசின் வசமுள்ள நிலையில், தற்போது, 12.5% பங்குகளை மத்திய அரசாங்கம் முதலீட்டாளர்களுக்கு விற்க இருக்கிறது. பங்கு விலைப்பட்டை 315 ரூபாய் முதல் 320 வரை நிர்ணயித்திருக்கிறது. இந்த ஐ.பி.ஓ வெளியீடு இன்று தொடங்கி வரும் அக்டோபர் 3-ம் தேதி முடிவடைகிறது.

    வளர்ந்து வரும் ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் ஒரு பிரிவில் மட்டுமல்லாமல், நான்கு பிரிவுகளில் வணிகம் செய்வதால், நீண்ட கால நோக்கில் இந்த ஐ.பி.ஓ-வில் முதலீடு செய்யலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

    Published by:Sankar
    First published:

    Tags: IRCTC

    அடுத்த செய்தி