ஈரான் வங்கிக்கும் மும்பையில் கிளை தொடங்க அனுமதி - நிதின் கட்காரி

இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தப்படி, இந்தியாவின் யூகோ வங்கி ஈரானில் தங்களது வங்கி கிளையைத் திறக்கும்.

news18
Updated: January 11, 2019, 2:17 PM IST
ஈரான் வங்கிக்கும் மும்பையில் கிளை தொடங்க அனுமதி - நிதின் கட்காரி
நிதின் கட்கரி
news18
Updated: January 11, 2019, 2:17 PM IST
ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளதால் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு மட்டும் பண்டமாற்ற முறை அல்லது ரூபாய் பரிவர்த்தனைகளைச் செய்ய அனுமதி அளித்திருந்தது.

தற்போது இந்தப் பொருளாதாரத் தடையிலிருந்து மேலும் விலக்கு பெற ஈரான் வங்கிக்கு மும்பையில் கிளை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

அடுத்த மூன்று மாதத்தில் மும்பையில் ஈரானின் பசர்கட் வங்கி கிளையைத் தொடங்கும் என்றும் அதற்கான அனுமதியை இந்திய அரசு வழங்கியுள்ளதாகவும் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறினார்.

மறு பக்கம் இந்தியாவின் யூகோ வங்கி ஈரானில் தங்களது வங்கி கிளையைத் திறக்கும். இரண்டு வங்கிகளின் வணிக முடிவு மகிழ்ச்சி அளிப்பதாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவத் ஜாரிஃப் கூறியுள்ளார்.

இந்தியாவிற்கு அதிகளவில் கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்வதில் முதன்மையான ஒரு நாடாக ஈரான் உள்ளது. அதே நேரம் இரண்டு நாடுகளுக்கு இடையில் உள்ள பண்டமாற்ற முறை வணிகமும் தொடரும் என்று நிதின் கட்காரி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: குடும்ப அட்டைகளின் வகைப்பாடுகளை எப்படி தெரிந்துகொள்வது?
First published: January 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...