Home /News /business /

ஜி20 மாநாட்டில் மோடி, டிரம்ப் சந்திப்பில் பேசப்பட்ட விஷயங்கள் என்ன?

ஜி20 மாநாட்டில் மோடி, டிரம்ப் சந்திப்பில் பேசப்பட்ட விஷயங்கள் என்ன?

ட்ரம்ப், மோடி

ட்ரம்ப், மோடி

இந்தியா - அமெரிக்கா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா குறிப்பிட்டுள்ளார்.

  • Last Updated :
ஜப்பானின் ஒசாகா நகரில் அமெரிக்க அதிபர் டிரம்பும், பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில், ஈரான் பிரச்னை, 5ஜி தொழில்நுட்பம், வர்த்தகம், பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்துப் பேசினார்.

பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் மோடியின் மகத்தான தேர்தல் வெற்றிக்கு டிரம்ப் வாழ்த்து தெரிவித்து கைகுலுக்கினார். இந்த வெற்றிக்குத் தகுதியானவர் தான் நீங்கள், முதன் முதலில் மோடி பிரதமராக பதவியேற்ற போது பல கட்சிகள், அமைப்புகள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டிருந்ததன, ஆனால் அவர்கள் உங்களால் ஒரேபக்கம் வந்துள்ளன.

இந்தியாவும், அமெரிக்காவும் முன்னெப்போதும் இல்லாத வகையில் நெருக்கமான நட்பு நாடுகளாக மாறியியுளது. ராணுவம் உள்ளிட்ட துறைகளில் இணைந்து பணியாற்றலாம் என்று டிரம்ப் கூறினார்.



வர்த்தக விவகாரங்களை பொறுத்தவரை, வர்த்தக முன்னுரிமை நாடு என்ற அந்தஸ்தை இந்தியாவிற்கு ரத்து செய்த பிறகு, இந்தியா தரப்பில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக டிரம்பிடம் மோடி சுட்டிக்காட்டியுள்ளார். ஈரானில் ஏற்பட்டுள்ள சீரற்ற நிலை பல வழிகளிலும் இந்தியாவை பாதிக்கிறது என்பதும் டிரம்பிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பெட்ரோலிய இறக்குமதி மூலம் எரிசக்தித் தேவையை நிறைவு செய்வதில் மட்டுமின்றி, வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கும் பாதிப்புகள் ஏற்படும் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணைகள் வாங்குவது குறித்த பிரச்சனை பேச்சுவார்த்தையில் இடம்பெறவில்லை என்றும் வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே கூறினார். மேக் இன் இந்தியா திட்டத்தின் இலக்குகளை நிறைவேற்ற, 5ஜி தொழில்நுட்பம் வழங்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது தொடர்பாகவும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக விஜய் கோகலே கூறினார்.

ஒசாகா நகரில் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் சந்திப்பும் நடைபெற்றது. இதில் பேசிய பிரதமர் மோடி, மனிதகுலத்திற்கு பயங்கரவாதமும், பருவநிலை மாற்றமும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்தார்.

இதனிடையே, இந்தியா - அமெரிக்கா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பார்க்க:
Published by:Tamilarasu J
First published:

Tags: Donald Trump, G20 Summit, Narendra Modi

அடுத்த செய்தி