ஹோம் /நியூஸ் /வணிகம் /

விர்ச்சுவல் டெபிட் கார்டுக்கு பராமரிப்பு கட்டணங்கள் மற்றும் மறுவழங்கல் கட்டணங்களை அறிமுகப்படுத்துகிறது IPPB...

விர்ச்சுவல் டெபிட் கார்டுக்கு பராமரிப்பு கட்டணங்கள் மற்றும் மறுவழங்கல் கட்டணங்களை அறிமுகப்படுத்துகிறது IPPB...

விர்ச்சுவல் டெபிட் கார்டு

விர்ச்சுவல் டெபிட் கார்டு

இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி (India Post Payments Bank - IPPB) என்பது  இந்திய அரசின் அஞ்சல் துறைக்கு முற்றிலும் சொந்தமான பப்ளிக் லிமிட்டட் கார்ப்ரேஷன் நிறுவனம் ஆகும். இது தகவல் தொடர்பு அமைச்சகத்தின் ஒரு பகுதியாகும்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

நாடு முழுவதும் டிஜிட்டல் பேமென்ட்ஸ்களை மேம்படுத்தும் வகையில், IPPB-ஆனது RuPay விர்ச்சுவல் டெபிட் கார்டுகளை வழங்குகிறது. இந்நிலையில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (IPPB) அதன் விர்ச்சுவல் டெபிட் கார்டுகளுக்கான வருடாந்திர பராமரிப்பு மற்றும் பழைய கார்டுகளுக்கு பதில் புதிய கார்டுகளை வழங்குவதற்கான (மறு வழங்கல்) கட்டணங்களை அறிமுகப்படுத்துவதாக அறிவித்து உள்ளது. வரும் ஜூலை 15, 2022 முதல் இந்த கட்டணங்கள் அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

இது தொடர்பான செய்தி குறிப்பு ஒன்றில் விர்ச்சுவல் டெபிட் கார்டுக்கு ஆண்டு பராமரிப்புக் கட்டணம் ரூ. 25 (ஜிஎஸ்டி உட்பட) வசூலிக்கப்படும்.  அதே நேரத்தில் ஏற்கனவே இருந்த விர்ச்சுவல் கார்டுக்கு பதில் புதிய கார்டு வழங்கவும் ரூ.25 (ஜிஎஸ்டி உட்பட) வசூலிக்கப்படும். இருப்பினும் பிரீமியம் அக்கவுண்ட்ஸ்களுக்கு (SBPRMs) இந்த புதிய கட்டணங்களிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

IPPB விர்ச்சுவல் கார்ட்:

ஐபிபிபி விர்ச்சுவல் கார்டு என்பது டிஜிட்டல் டெபிட் கார்டு ஆகும். இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி ரூபே விர்ச்சுவல் டெபிட் கார்டை (RuPay Virtual Debit Card) வழங்குகிறது. IPPB மொபைல் பேங்கிங் ஆப் பயன்படுத்தும் எவரும் இந்த கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். இது யூஸர் அவர்களின் சொந்த தினசரி லிமிட்களை குறிப்பிடுவதற்கான விருப்பத்தை வழங்குகிறது. இந்த கார்ட் ஒவ்வொரு RuPay பொருத்தப்பட்ட இ-காமர்ஸ் அல்லது மெர்ச்சென்ட் போர்ட்டலிலும் ஏற்று கொள்ளப்படுகிறது. இ-காமர்ஸ் பர்ச்சேஸ்களுக்கான கார்டில் குறைந்தபட்ச தினசரி வரம்பு ரூ.1 மற்றும் அதிகபட்ச வரம்பு ரூ.50,000 ஆகும்.

Also Read... டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகளுக்கான விதிமுறைகள் மாற்றம்!

மேலும் IPPB பரிவர்த்தனை அல்லது பிளாக்கிங்/அன்பிளாக்கிங் கட்டணத்தையும் வசூலிப்பதில்லை. முன்னதாக, கார்டு மறு வழங்கலுக்கு எந்த கட்டணத்தையும் IPPB  வசூலிக்கவில்லை. ஆனால் அதன் சமீபத்திய அறிவிப்பின்படி விர்ச்சுவல் டெபிட் கார்டுகளில் ஆண்டு பராமரிப்புக் கட்டணம் ரூ. 25 மற்றும் மறுவழங்கல் கட்டணம் ரூ.25 என்றும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் ரூபே கார்டுகளை ஏற்கும் எந்த மெர்ச்சென்ட் வெப்சைட்/ஆன்லைன் போர்ட்டலிலும் ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய இந்த கார்டை பயன்படுத்தலாம்.

IPPB ஆப்-ல் விர்ச்சுவல் டெபிட் கார்டை உருவாக்குவது எப்படி.?

* முதலில் IPPB app-ஐ டவுன்லோட் செய்து கொண்டு பின்னர் லாகின் செய்யவும்

* Rupay Cards என்ற ஆப்ஷனை கிளிக் செய்து பின் Virtual debit cards என்பதனை கிளிக் செய்யவும்

* பின் அடுத்த பேஜில் தோன்றும் Request Virtual Debit Card என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். இப்போது Rupay கார்டின் விவரங்கள் காண்பிக்கப்படும்

* விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்று கொள்ள Continue என்பதை கிளிக் செய்து உறுதிப்படுத்தவும்

* இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் OTP-ஐ என்டர் செய்யவும்

* இதன் பிறகு உங்கள் விர்ச்சுவ டெபிட் கார்டு உருவாக்கப்பட்டு, உங்கள் அக்கவுண்டிலிருந்து குறிப்பிட்ட தொகை கழிக்கப்படும்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Banking, India post