Home /News /business /

நல்லா ஞாபகத்தில் வச்சிக்கோங்க.. இனிமேல் சேவிங்க்ஸ் கணக்குக்கு இந்த வங்கியில் கம்மியான வட்டி தான் கிடைக்கும்!

நல்லா ஞாபகத்தில் வச்சிக்கோங்க.. இனிமேல் சேவிங்க்ஸ் கணக்குக்கு இந்த வங்கியில் கம்மியான வட்டி தான் கிடைக்கும்!

இந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கி

இந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கி

கண்டிப்பாக வாடிக்கையாளர்களுக்கு இந்த தகவல் அதிர்ச்சி மற்றும் ஏமாற்றத்தை தரும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    இந்திய தபால் துறை மூலம் மக்களுக்கு வங்கி சேவை வழங்கி கொண்டிருக்கும் இந்திய போஸ்ட் பேமெண்ட் பேங்க் வங்கி சேவிங்க்ஸ் அக்கவுண்ட் குறித்து முக்கியமான அறிவிப்பை வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்டுள்ளது.

    அதாவது இந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்த அறிவிப்பு கண்டிப்பாக வருத்தம் அளிக்கும். ஏனென்றால் சேமிப்பு கணக்குகளுக்கு வட்டியை குறைப்பதாக வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.இந்த வட்டி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டு வந்தது.இந்நிலையில் சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்படுவதாக இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் அறிவித்துள்ளது. , ரூ.1 லட்சம் வரையிலான சேமிப்புகளுக்கு வட்டி விகிதம் 2.25 சதவீதமாக இருக்கும். அதேபோல, ரூ.1 லட்சத்துக்கு மேல் ரூ.2 லட்சம் வரையிலான டெபாசிட்களுக்கு வட்டி விகிதம் 2.50 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க.. ITR filling : 3 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கலாம்... வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்!

    இந்த புதிய மாற்றம் இந்த மாதம் பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இந்த வட்டி விகிதம் ரூ.1 லட்சம் வரையிலான டெபாசிட்களுக்கு 2.50 சதவீதமாகவும், ரூ.2 லட்சம் வரையிலான டெபாசிட்களுக்கு  2.75 சதவீதமாகவும் இருந்தது. இந்நிலையில் தற்போது இந்த வட்டி விகிதம் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக வாடிக்கையாளர்களுக்கு இந்த தகவல் அதிர்ச்சி மற்றும் ஏமாற்றத்தை தரும்.

    இதையும் படிங்க.. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஜாக்பாட்... போட்டி போட்டுக்கொண்டு அதிக வட்டி தரும் வங்கிகள்!

    இதற்கு முன்பு , போஸ்ட் ஆபீஸ் வங்கி ஒரு வரம்புக்கு மேல் பணத்தை எடுப்பதற்கும் டெபாசிட் செய்வதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவித்திருந்தது. வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறை எடுக்கும்போதும் குறைந்தபட்சம் ரூ.25 செலுத்த வேண்டும எனவும் கூறியிருந்தது. இந்த புதிய மாற்றம் ஜனவரி 1 2022 ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. வரம்பை விட அதிகமாக டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். இலவச வரம்பிற்குப் பிறகு ஒவ்வொரு முறையும் நீங்கள் பணம் எடுக்கும்போது, குறைந்தபட்சம் 25 ரூபாய் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்திருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது வட்டியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: India post, Savings

    அடுத்த செய்தி