ஹோம் /நியூஸ் /வணிகம் /

20 மில்லியன் டன் பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்து சீருடை தயாரிக்க இந்தியன் ஆயில் நிறுவனம் திட்டம்!

20 மில்லியன் டன் பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்து சீருடை தயாரிக்க இந்தியன் ஆயில் நிறுவனம் திட்டம்!

இந்தியன் ஆயில் பெட்ரோல்

இந்தியன் ஆயில் பெட்ரோல்

பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டினால் ஏற்படும் கார்பன் வெளியேற்றம் காரணமாகவும் சுற்றுச்சூழல் மாசடைந்து, புவி வெப்பமயமாதல் அதிகரித்து வருகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • New Delhi, India

  சுற்றுச்சூழலுக்கு பிளாஸ்டிக் எந்த அளவுக்கு தீங்கானது என்பது நாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆகவே, மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியா நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் என பல தரப்பினரும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முடிந்த வரையில் குறைக்கவும், பயன்படுத்துகின்ற பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்யவும் நடவடிக்கை எடுக்கின்றனர்.

  குறிப்பாக, பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டினால் ஏற்படும் கார்பன் வெளியேற்றம் காரணமாகவும் சுற்றுச்சூழல் மாசடைந்து, புவி வெப்பமயமாதல் அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழலில், இந்தியாவின் மாபெரும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் எரிபொருள் சில்லறை விற்பனை நிறுவனமான இந்தியன் ஆயில் சார்பிலும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

  பயன்படுத்தப்பட்ட 20 மில்லியன் பிளாஸ்டிக் பாட்டில்கள், அதாவது ஆண்டுக்கு சராசரியாக 405 டன் அளவிலான பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்து, அவற்றை பாலிகாட்டனாக மாற்றம் செய்து, அதில் இருந்து சீருடைகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. சுற்றுச்சூழலை காக்கவும், மாசுபாட்டை ஒழிக்கவும் இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி பூண்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

  பிளாஸ்டிக் கழிவில் இருந்து தயாரிக்கப்படும் உடைகளில் ‘கோ க்ரீன்’ என்ற விழிப்புணர்வு வாசகம் இடம்பெற்றிருக்கும். அதனை இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையங்கள் மற்றும் கேஸ் சிலிண்டர் டெலிவரி பணியாளர்களுக்கு வழங்குவதற்கு அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

  பெட்ரோல் நிலையங்கள் மற்றும் இதர அமைப்புகளிடம் இருந்து சேகரிக்கப்படும் பிளாஸ்டிக்கை, பருத்தி சேர்த்து மறுசுழற்சி செய்து, அதில் இருந்து பாலிகாட்டன் சீருடை தயாரிக்கப்பட உள்ளது.

  இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம்.வைத்தியா கூறுகையில், “கச்சா எண்ணெய் தொழில்துறை தான், கார்பனை மிக அதிகம் வெளியேற்றக் கூடியதாக இருக்கிறது. இந்தத் தொழிலின் இயல்பு அதுதான். அதே சமயம், 2046ஆம் ஆண்டுக்குள் சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஜீரோ நிலைக்கு கொண்டு வர இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி பூண்டுள்ளது.

  ரயில் பாதையில் எந்த மஞ்சள் கோடு நீளமானது.? 10 வினாடிக்குள் கண்டுபிடித்தால் நீங்கள் தான் அதிபுத்திசாலி.!

  சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த சீருடைகள் எங்களுடைய பசுமை இலக்கை பிரதிபலிப்பதாக அமையும். பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக நாம் மேற்கொள்கின்ற புதிய முயற்சிகள் எப்படி புதிய வாய்ப்புகளுக்கான கதவுகளாக மாறுகின்றன என்பதற்கு இந்த சீருடை உற்பத்தி ஓர் நல்ல எடுத்துக்காட்டு ஆகும்’’ என்று தெரிவித்தார்.

  ஆண்டுக்கு 8 மில்லியன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலந்து வருகின்றன மற்றும் கடலில் மொத்தம் 150 மில்லியன் டன் அளவுக்கு கழிவுகள் உலா வருகின்றன. இதே நிலை தொடர்ந்தால், 2050ஆம் ஆண்டுக்குள் கடலில் மீன்களைக் காட்டிலும் பிளாஸ்டிக் கழிவுகள் தான் அதிகமிருக்கும் என்றும் வைத்யா கூறினார்.

  காட்டில் தொலைந்த நபரை சல்லடைபோட்டு தேடிய மக்கள்.. அசால்டாக கண்டுபிடித்த செல்ல நாய்!

  பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஆடைகளானது, விர்ஜின் பாலிஸ்டர் துணிகளுக்கு ஈடான தரத்தில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Indian Oil