• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • வங்கிகள் ஏலம் விடும் வீடுகளை வாங்கினால் உங்களுக்கு தான் லாபம் தெரியுமா?

வங்கிகள் ஏலம் விடும் வீடுகளை வாங்கினால் உங்களுக்கு தான் லாபம் தெரியுமா?

ஐஓபி வங்கியின் ஏலம்

ஐஓபி வங்கியின் ஏலம்

கடனை சரியாக திருப்பிச் செலுத்தாதவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பல்வேறு சொத்துகள் விற்பனைக்கு வரும்.

  • Share this:
    Iob indian overseas bank aanouncement : பிரபல பொதுறை வங்கியான ஐஓபி வங்கி நடத்தும் ஏலத்தில் கலந்துக்கொண்டு உங்கள் சொந்த வீடு கனவை நனவாக்கி கொள்ளுங்கள்.

    சொந்த வீடு வாங்க வேண்டும் என திட்டமிட்டிருக்கிறீர்களா? இதோ இந்தியன் ஓவர்சிஸ் வங்கி நடத்தும் ஏலத்தில் கலந்துகொண்டு அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். இதில் நீங்கள் லாபமும் பார்க்கலாம். புரோக்கர் வழியாகவோ ஆப்ஸ் வழியாகவோ சொந்த வீட்டை தேடி அலைவதை விட்டுவிடுங்கள். இதில் கமிஷன் பிரச்சனையுண்டு. ஆனால் இதுப்போன்ற வங்கி ஏலத்தில் கலந்துகொண்டு வீட்டை வாங்குவது முடிந்த அளவு செலவை குறைக்கும்.

    வீடு, நிலம் உள்ளிட்ட சொத்துகளை வாங்க விரும்புவோர் குறைந்த விலையில் வாங்குவதற்கான வாய்ப்பு. இங்கு மார்க்கெட் விலையைக்காட்டிலும் குறைந்த விலையில் ஏலம் விடப்படும். இந்த ஏலத்தில் , கடனை சரியாக திருப்பிச் செலுத்தாதவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பல்வேறு சொத்துகள் விற்பனைக்கு வரும்.

    Also Read : நகையை விடுங்க.. ஒரு பெண் குழந்தை பிறந்தால் எப்படியெல்லாம் பணம் சேர்க்கலாம் தெரியுமா?

    வீடுகள், ஃப்ளாட்டுகள், நிலம், வணிக சொத்துகள் என பலவகை சொத்துகள் ஒரே நேரத்தில் குறிப்பிட்ட தொகையில் ஏலம் விடப்படும். விருப்பப்படுவோர் வாங்கலாம். இதற்கான தகுதி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் ஓபன் செய்து கொள்ளலாம். மொபைல் நம்பர், இமெயில் ஐடி ஆகியவற்றை வெரிஃபை செய்துகொண்டு ஏலத்துக்கு செல்லலாம்.

    Also read : அவசர திருமணம்.. உடனே லோன் வேண்டுமா? நிறைய வழி இருக்கு தெரிஞ்சிக்கோங்க!

    மேலும் விவரங்களுக்கு ஐஓபி வங்கியின் இணையளத்தில் சென்று பார்த்தால் ஏலம் குறித்த விளம்பரம் இடம் பெற்றிருக்கும் அல்லது ‘Properties' பிரிவை கிளிக் செய்து பார்க்கலாம். தேவைப்பட்டால் அருகில் இருக்கும் ஐஓபி வங்கிக்கு சென்றும் விசாரிக்கலாம். ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் ஏலம் நடைபெறும் என ஏற்கனவே வங்கி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: