நகைக்கடன் என்றவுடன் பலரும் நாடி செல்லும் பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நகைக்கடன் குறித்த முழு விபரங்களை தான் பார்க்க போகிறோம்.
நகைக்கடன் என்பது இன்றைய சூழலில் அவசர தேவைக்கு பலரால் பயன்படுத்தப்படும் கடனாக மாறி வருகிறது. வீட்டில் இருக்கும் தங்கத்தை அடகு கடையில் வைப்பதை விட வங்கியில் வைத்து குறைந்த வட்டியில் பணம் பெற்று, அதற்கான வட்டியை எளிதாக கட்டி சீக்கிரமாக நகையை மீட்பது சிறந்தது என பொதுமக்கள் நினைக்க தொடங்கிவிட்டனர். அதிலும் பொதுத்துறை வங்கியில் நகைக்கடன் என்பது மிகவும் எளிதான நடைமுறையாக இருப்பது பொதுமக்களுக்கு கைக்கொடுக்கிறது. அதன் அடிப்படையில் இன்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நடைக்கடன் சிறப்பம்சங்களை பற்றி பார்க்கலாம்.
இந்த வங்கியில் ஆண்டுக்கு 7% வட்டியில் நகைக்கடன் வழங்கப்படுகிறது. பெண்களுக்கான சிறப்பு நகைக்கடனும், பெண் தொழில் முனைவோருக்கு சிறப்பு நகைக்கடனும் இந்த வங்கியில் நடைமுறையில் இருக்கிறது. இதில் வட்டி மிக மிக குறைவு. இந்த கடனை பெற நகைகளை நேரடியாக வங்கிக்கு எடுத்து சென்று எடை விவரங்களை கணக்கிட வேண்டும். கூடவே வட்டி, மாதம் இஎம்ஐ, விதிமுறைகள் பற்றியும் தெளிவாக கேட்டுக் கொண்ட பின்பு உங்களை நகையை வைத்து அதன் எடைக்கு ஏற்ற பணத்தை பெறலாம். தங்கத்தின் மதிப்பில் 75% வரை தங்களுக்கு கடனாக தரப்படுகிறது.
தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாறுகிறது அதே போல் நகைக்கடனில் ஒரு கிராமுக்கு வழங்கப்படும் தொகையும் அன்றைய விலை நிலவரத்தை பொறுத்து மாறுபடலாம். இந்த நகைக்கடனில் தங்கத்தின் எடையை மட்டுமே கடனுக்கு கணக்கிலெடுக்கப்படும் கல்லின் மதிப்பு சேர்க்கப்படாது.
தகுதிகள் :
வயது : 18 முதல் 70 வரை, சம்பளம் பெறுபவர் அல்லது சுயதொழில் செய்பவராக இருக்க வேண்டும். தங்கத்தின் தூய்மை கண்டிப்பாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் . குறைந்தபட்சம் 18 காரட். இதில் ஆபரண தங்க நகைகள் ஏற்றுக் கொள்ளப்படும். அதிகபட்சம் 50 கிராம் வரை நாணயங்கள் பெற்றுக்கொள்ளப்படும் .
ஆவணங்கள்: ஆதார் கார்டு /பான் கார்டு/ வோட்டர் id/ பாஸ்போர்ட் இதில் ஏதாவது 2 இருந்தால் போதும்.
இந்த நகைக்கடனுக்கான வட்டியை ஆன்லைனில் செலுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூடுதல் விவரங்களுக்கு
https://www.iob.in/jwellz-loan.aspx இந்த தளத்தில் சென்று பார்க்கவும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.