Home /News /business /

IOB : திடீர் அறிவிப்பு.. அந்த திட்டத்திற்கு மட்டும் வட்டியை குறைத்தது!

IOB : திடீர் அறிவிப்பு.. அந்த திட்டத்திற்கு மட்டும் வட்டியை குறைத்தது!

ஐஓபி

ஐஓபி

IOB deposit : இந்த வங்கியில் 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட டெபாசிட்டுகளுக்கு வட்டி குறைக்கப்பட்டுள்ளது

    திரும்பிய பக்கம் எல்லாம் சேமிப்பு திட்டங்கள் இருப்பதால், கவர்ச்சிக்கரமான வட்டி அறிவிப்பு, வரிச்சலுகை என கொட்டி சலுகைகளில்  பாதுகாப்பானதை தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது நமத்கு கடமை. நாம் செய்யும் முதலீடுக்கு நல்ல வருமானம் கிடைப்பது பிக்சட் டெபாசிட் திட்டங்களில் தான். பங்குச்சந்தை, பிபிஎப்-காட்டிலும் குறைவாக வட்டி கிடைத்தாலும், பாதுகாப்பான முதலீடு ஆகும். குறிப்பாக வரியை சேமிக்க விரும்புவோர் அதிகளவில் வரி சேமிப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்வதை பார்க்க முடிகிறது. இத்திட்டங்களில் முதலீடு செய்தால் வரிச் சட்டம் பிரிவு 80சி கீழ் வரிச்சலுகை கிடைக்கிறது.

    இதுமட்டுமில்லை, டாக்ஸ் சேவிங்ஸ் பிக்சட் டெபாசிட் (Tax saving fixed deposit) ஐந்து வருட டெபாசிட் காலத்துடன் வருகின்றன. இந்த காலத்திற்கு இடையில் நீங்கள் டெபாசிட் செய்து வைத்த பணத்தை எடுக்க முடியாது. மேலும் இதில் முதலீடு செய்வதால் 1.5 லட்சம் வரை வரிச் சலுகை பெற முடியும். வரி சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட்டிற்கு அதிக வட்டி கொடுக்க கூடிய வங்கிகள் நிறைய உள்ளன. சில தனியார் மற்றும் அரசு சார்ந்த வங்கிகள் வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து வரி சேமிப்பு பிக்சட் டெபாசிட்டிற்கு 6.75 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றன.

    இனி டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு இல்லாமலேயே ஏடிஎம்-களில் பணம் எடுக்கலாம்! தெரியுமா?

    இது ஒருபுறம் என்றால், சில பொதுத்துறை வங்கிகள் சமீபகாலமாக பிக்சட் டெபாசிட் திட்டங்களில் வட்டி விகிதத்தை குறைத்து வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை தந்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது புதியதாக இணைந்து இருக்கிறது. பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank). இந்த வங்கி சமீபத்தில் அறிவித்திருக்கும் செய்தி வாடிக்கையாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வங்கியில் 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட டெபாசிட்டுகளுக்கு வட்டி குறைக்கப்பட்டுள்ளது.புதிய வட்டி விகிதங்கள் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    பான் - ஆதாரை இன்னும் இணைக்கவில்லையா? இந்த சேவைகளை இனி பயன்படுத்த முடியாது!

    இந்த புதிய மாற்றம், குறுகிய கால டெபாசிட்டுகளுக்கு பொருந்தும். 1 -2 ஆண்டு டெபாசிட்டுக்கு 5.15% வட்டி , 444 நாட்களுக்கு 5.20% வட்டி, 2 முதல் 3 ஆண்டு வரையிலான டெபாசிட்டுக்கு 5.20% வட்டி வழங்கப்படுகிறது. அதே போல், இனிமேல் 7 - 45 நாட்கள் 3% வட்டி, 46 - 90 நாட்கள் 3.5% வட்டி, 91 - 179 நாட்கள் 4% வட்டி, 180 - 364 நாட்கள் : 4.5% வட்டி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bank, Fixed Deposit, Savings

    அடுத்த செய்தி