• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • ஏராளமான சில்லறை கடன்கள்..ஐஓபி வங்கியில் அப்ளை செய்தால் உடனே கிடைக்கும்!

ஏராளமான சில்லறை கடன்கள்..ஐஓபி வங்கியில் அப்ளை செய்தால் உடனே கிடைக்கும்!

ஐஓபி வங்கியில் சில்லறை கடன்கள்

ஐஓபி வங்கியில் சில்லறை கடன்கள்

வங்கியின் வலைத்தளம் வழியாக மட்டுமே இந்த கடன்களுக்கு விண்ணப்பிக்க முடியும்

  • Share this:
    ஏராளமான சில்லறை கடன்களை செயல்பாட்டில் வைத்துள்ள பொதுத்துறை வங்கியான ஐஓபி வங்கியில் எளிதில் கடன்கள் பெறலாம் தெரியுமா?

    எஸ்பிஐ வங்கிக்கு அடுத்தப்படியாக மிகப்பெரிய பொதுத்துறையாக சிறந்த சேவையை வழங்கி கொண்டிருக்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஏராளமான சில்லறை கடன்கள் உள்ளன. க்ளீன் கடன், நுகர்வு கடன்கள்-சஹாயிகா, கல்வி கடன்கள்-வித்யஜோதி, வித்யா ஜோதி, புஷ்பாகா – வாகன கடன்கள் என ஏகப்பட்டவை. இந்த கடன்களை பெறுவது மிகவும் எளிது. வாடிக்கையாளர்கள் எளிதி இந்த கடன்களை பெற வங்கி நிர்வாகம் பல்வேறு வசதிகளை செய்து வைத்துள்ளது.

    இந்த கடன்களுக்கு ஆன்லைன் மற்றும் மொபைல் ஆப்ஸிலும் விண்ணப்பிக்கலாம். வாடிக்கையாளர்கள் அல்லாதவர்கள் வங்கியின் வலைத்தளம் வழியாக மட்டுமே இந்த கடன்களுக்கு விண்ணப்பிக்க முடியும். ஐஓபி வாடிக்கையாளர்கள் இந்த சேவைகளில் ஏதேனும் ஒன்றன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

    also read.. ரூ. 7 லட்சம் கிடைக்கும்.. தேவைப்பட்டால் கடன் கூட வாங்கலாம்.. உங்களுக்கான அசத்தல் ஸ்கீம்!

    இதே முறையில் ஐஓபி வங்கியில் இருக்கும் வீட்டுக்கடன்களுக்கும் வாடிக்கையாளர்கள் அல்லது வாடிக்கையாளராக இல்லாதவர்கள் விண்ணப்பிக்கலாம். தங்கள் வீட்டுக் கடன்களை மற்ற வங்கிகளிலிருந்து ஐஓபி வங்கிக்கும் மாற்ற முடியும்.

    கடன் பெறுவதற்கான விதிமுறைகள், வாடிக்கையாளர்கள் விண்ணப்பத்தை சமர்பித்த பின்பு ஒரு கொள்கை ரீதியான ஒப்புதல் கடிதம் உருவாக்கப்பட்டு விண்ணப்பதாரருக்கு எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படும் வாடிக்கையாளர்கள் பின்னர் கடன் பெற தேவையான ஆவணங்கள் மற்றும் கொள்கை ரீதியான ஒப்புதல் கடிதத்துடன் அருகிலுள்ள கிளைக்குச் செல்ல வேண்டும்.

    ஆவணங்களைச் சரிபார்த்த பின்பு வங்கி நிர்வாகிகள் உங்கள் கடனை ஒப்புதல் செய்வார்கள். தொழில் முனைவோர்களுக்கு இந்த கடன் எளிதில் கிடைக்க அதிக வாய்ப்பு உண்டு.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: