முக்கியமான இந்த 3 வங்கிகளில் இப்படியொரு வசதி இருப்பது உங்களுக்கு தெரியுமா?

ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும் உங்கள் அக்கவுண்டில் இருக்கும் பேலன்ஸ் முழு விவரமும் தெரிந்துவிடும்.

ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும் உங்கள் அக்கவுண்டில் இருக்கும் பேலன்ஸ் முழு விவரமும் தெரிந்துவிடும்.

  • Share this:
    நீங்கள் இந்தியன் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கனரா வங்கி வாடிக்கையாளர்களாக இருந்தால் இந்த தகவலை தெரிஞ்சி வச்சிக்கோங்க.

    முன்பெல்லாம் நம்ம அக்கவுண்ட் பேலன்ஸை தெரிந்துகொள்வது மிகவும் கடினம். அக்கவுண்ட் இருக்குற வங்கிக்கு போய் பாஸ்புக்கில் பதிவு செய்தால் தான் எவ்வளவு பேலன்ஸ் அக்கவுண்டில் இருக்கிறது என தெரியும். அதன் பின்பு நெட் பேக்கிங் வசதி மூலம் ஆன்லைனில் பேலன்ஸ் பார்க்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து எஸ்.எம்.எஸ் வழியாகவும் பேலன்ஸைப் பார்க்கலாம். இப்போது அதைவிட மிகவும் எளிமையாக செலவு இல்லாமல் பேலன்ஸை பார்க்க முடியும். இருந்தாலும் பலருக்கும் இந்த தகவல் தெரிவதில்லை. அதனால் தான் இந்த பதிவு.

    நீங்கள் ஐஓபி வாடிக்கையாளராக இருந்தால் உங்கள் கணக்கில் இருப்புதொகையை தெரிந்து கொள்ள வங்கிக்கு செல்லத் தேவையில்லை. உங்கள் மொபைலில் இருந்து 04442220004 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும் கணக்கில் இருப்பு தொகை மெசேஜாக உங்கள் மொபைலுக்கு வரும். இதுக்கு கட்டணம் எதுவும் கிடையாது.இதற்கு கட்டாயமாக உங்கள் வங்கி கணக்கில் உங்கள் மொபைல் நம்பர் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும்.நீங்கள் ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளராக இருந்தால் உங்கள் கணக்கில் இருப்புதொகையை தெரிந்து கொள்ள உங்கள் மொபைலில் இருந்து 9594612612 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் விட்டால் போதும் கணக்கில் இருப்பு தொகை உங்களுக்கு தெரிந்துவிடும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நீங்கள் கனரா வங்கி வாடிக்கையாளராக இருந்தால் உங்கள் கணக்கில் இருப்புதொகையை தெரிந்து கொள்ள உங்கள் மொபைலில் இருந்து -9015-483-483 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுங்கள் உங்கள் அக்கவுண்ட் பேலன்ஸ் விவரம் மெசேஜாக வரும். கட்டணம் எதுவும் கிடையாது. இதுப்போல் வங்கியில் இருக்கும் சிறப்பான எளிமையான சில வாடிக்கையாளர் சேவைகளை அவ்வப்போது தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

    also read.. ரூ. 200 சேமிப்பு உங்களை லட்சாதிபதி ஆக்க போகிறது தெரியுமா?

    அவசரமான நேரத்தில் கண்டிபாக உதவும். முடிந்தவரை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published: