ப. சிதம்பரத்தை சிக்க வைத்த ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் பின்னணி என்ன?

INX Media Case Timeline

Web Desk | news18-tamil
Updated: August 21, 2019, 10:15 PM IST
ப. சிதம்பரத்தை சிக்க வைத்த ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் பின்னணி என்ன?
INX Media Case Timeline
Web Desk | news18-tamil
Updated: August 21, 2019, 10:15 PM IST
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு சிக்கலை ஏற்படுத்திய ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் பின்னணி என்ன?

மும்பையைச் சேர்ந்த ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனம் அந்நிய முதலீட்டை முறைகேடாக பெற உதவினார் என்பதுதான் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரத்தின் மீதான குற்றச்சாட்டு.

ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது 2017ல் சிபிஐ ஊழல் வழக்கையும், அமலாக்கப்பரிவு சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கையும் பதிவு செய்தன.


கடந்த 2007ல் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தை சேர்ந்த இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோர் தங்கள் நிறுவனத்தின் 26 சதவீத பங்குகளை விற்க நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தை அணுகியபோது அது நிராகரிக்கப்ப்பட்டது.

அதைத் தொடர்ந்து அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை இந்திராணி முகர்ஜி அணுகியபோது 4.6 கோடி ரூபாய் அளவிற்கு பங்குகளை விற்க ப.சிதம்பரம் அனுமதித்தார்.

அதற்கு கைமாறாக, மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்திற்கு பீட்டர் முகர்ஜி உதவவேண்டும் என சிதம்பரம் கூறியதாக வாக்குமூலத்தில் இந்திராணி தெரிவித்திருக்கிறார்

Loading...

இந்நிலையில் வருமான வரி சோதனையில் 305 கோடி ரூபாய் முதலீட்டை ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ஈர்த்திருந்தது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து கார்த்தி சிதம்பரத்தை அணுகிய இந்திராணி முகர்ஜி, மூன்றரை கோடி ரூபாயை அவருக்குச் சொந்தமான அட்வான்டேஜ் ஸ்ட்ரேட்டஜிக் நிறுவனத்தின் கணக்கில் செலுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது

இதனிடையே மகள் ஷீனா போராவை கொலை செய்தது தொடர்பாக பீட்டர் முகர்ஜியும், இந்திராணி முகர்ஜியும் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.


Watch Also:
First published: August 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...