முகப்பு /செய்தி /வணிகம் / இரண்டு நாட்களில் ரூ.3.8 லட்சம் கோடியை இழந்த சென்செக்ஸ்... என்ன காரணம்!

இரண்டு நாட்களில் ரூ.3.8 லட்சம் கோடியை இழந்த சென்செக்ஸ்... என்ன காரணம்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் இரண்டு நாட்களில் 3.8 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சந்தை மூலதனத்தை இழந்துள்ளது.

இந்திய பங்குச்சந்தைகள் நேற்று சரிவுடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 318 புள்ளிகள் குறைந்து 38 ஆயிரத்து 897 புள்ளிகளில் நிறைவடைந்தது. அதே போல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 90 புள்ளிகள் சரிந்து 11 ஆயிரத்து 597 புள்ளிகளில் நிறைவடைந்தது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 879 புள்ளிகள் சரிவை சந்தித்திருந்தது.

இந்த சரிவுக்கு அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தக போர் பதற்றங்கள் சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது. நேற்றைய ஒரு நாள் சரிவில் முதலீட்டாளர்களுக்கு 1.6 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

அடுத்ததாக நடப்பு நிதியாண்டில் கார்ப்ரேட் நிறுவனங்களின் முதல் காலாண்டு வருவாய் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லாதது, நுகர்தல் குறைந்து உற்பத்தி சரிந்துள்ளது, மிட்-கேப் மற்றும் ஸ்மால்-கேப் பங்குகள் சரிவு போன்றவை சந்தை சரிவுக்கு முக்கிய காரணங்களாக உள்ளது.

மேலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஜூலை மாதத்தில் மட்டும் 5,000 கோடி ரூபாய் முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளார்கள். இதற்கு பட்ஜெட்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விதித்த வரி விதிப்பே காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும் பார்க்க:

First published:

Tags: Sensex