மோடியின் திட்டங்கள் உதவவில்லை...இந்தியாவைத் தவிர்க்கும் முதலீட்டாளர்கள்- பிரெஞ்சு பொருளாதார வல்லுநர்!

’முதலீட்டாளர்கள் சந்தேகங்கள் குறித்து பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்படும் மெயில்கள் எதற்கும் பதில் வருவதே இல்லை’.

மோடியின் திட்டங்கள் உதவவில்லை...இந்தியாவைத் தவிர்க்கும் முதலீட்டாளர்கள்- பிரெஞ்சு பொருளாதார வல்லுநர்!
கை சோமென்
  • Share this:
இந்தியாவில் சில அரசியல் நிலைப்பாடுகள் பொருளாதாரத்தை எதிர்மறையான முறையில் தாக்குவதால் சர்வதேச முதலீட்டாளர்கள் இந்தியாவுக்கு வர தயக்கம் காட்டுவதாக பிரெஞ்சு பொருளாதார வல்லுநர் குறிப்பிட்டுள்ளனர்.

பிரெஞ்சு பொருளாதார வல்லுநர் கை சோமன் கூறுகையில், “தற்போதைய சூழலில் உள்ளூர் மற்றும் அந்நிய முதலீட்டாளர்கள் என இரு தரப்பினருமே இந்தியாவில் முதலீடு செய்ய பயப்படுகின்றனர். தொடக்கத்தில் மேக் இன் இந்தியா திட்டம் மூலம் இந்திய தொழில்துறையினருக்கும் மிகுந்த ஆதரவு அளித்து ஊக்கப்படுத்தினார் பிரதமர் மோடி.

ஆனால், அவரது திட்டங்கள் பாதிதூரம் கூட வரவில்லை அதற்குள் செயலிழக்க ஆரம்பித்துவிட்டன. அவரே தனது பொருளாதார குறிக்கோளை மறந்துவிட்டு அரசியல் விவகாரங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். இதுவே இந்தியாவுக்கும் இந்திய அரசுக்கும் கெட்டப் பெயரை வாங்கித் தந்துவிட்டது.


ஹிந்துத்வா, குடியுரிமைச் சட்டம் என எது குறித்தும் பேசவது என் வேலை இல்லை. நான் இந்தியப் பொருளாதார நிலை குறித்து மட்டுமே பேசுகிறேன். முதலீட்டாளர்கள் சந்தேகங்கள் குறித்து பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்படும் மெயில்கள் எதற்கும் பதில் வருவதே இல்லை” என்று கூறியுள்ளார்.

மேலும் பார்க்க: சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் ரகசியம் காக்கப்படும்- மத்திய அரசு
First published: December 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்