நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மோசமான அளவில் அதிகரித்து வருவதோடு, பொருளாதார மீட்சியை பாதிக்கும் அதிக கட்டுப்பாடுகள் ஏற்படுமோ என்ற அச்சத்தின் மத்தியிலும் இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக கடுமையாக சரிந்தன.
மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் இன்று 740 புள்ளிகள் (1.51%) சரிந்து 48,440 புள்ளிகளில் நிறைவடைந்தன. கடந்த 2 நாட்களில் மட்டும் 1,611 புள்ளிகள் சரிந்துள்ளன, இது 3.21 % சரிவாகும்.
பங்குச்சந்தையில் கடந்த 2 நாட்களாக ஏற்பட்டிருக்கும் எதிர்மறையான தாக்கத்தால் 7,00,591.47 லட்சம் கோடி ரூபாய் சரிந்துள்ளது. பங்குச்சந்தை மூலதனம் 1,98,75,470.43 கோடி ரூபாயாக உள்ளது.
இந்தியா மற்றும் உலகம் முழுவதும் அதிகரித்த தொற்று விகிதம் பங்குச்சந்தையில் அதிக அவநம்பிக்கையை உருவாக்குகிறது, கடந்த ஒரு மாதமாக நீடித்து வந்த உயர்வு சமீபத்திய நாட்களில் நேரெதிராக மாறியுள்ளது என்று Geojit Financial Services நிறுவனத்தின் ஆராய்ச்சிப்பிரிவு தலைவர் வினோத் நாயர் தெரிவித்துள்ளார்.
பங்குச்சந்தை சரிவில் அதிகம் பாதிப்படைந்தது மாருதி நிறுவனம் தான். அந்நிறுவனம் 4% சந்தை மூலதனத்தை இழந்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ், பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் ஆட்டோ, பாரதி ஏர்டெல் போன்ற நிறுவன பங்குகளும் அதிக சரிவை சந்தித்தன.
இன்று டாக்டர் ரெட்டீஸ், ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி, எல் & டி போன்ற 4 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே ஏற்றமடைந்தன. மும்பை பங்குச்சந்தையில் 2,247 நிறுவனங்களின் பங்குகள் சரிந்துள்ளன, 706 ஓரளவு ஏற்றமடைந்தன, 168 நிறுவனங்கள் மாற்றமில்லாமல் வர்த்தகமாகின.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.