Home /News /business /

நிதி நெருக்கடி சமயங்களில் முதலீட்டாளர்கள் எடுக்க வேண்டிய முக்கியமான முடிவுகள்!

நிதி நெருக்கடி சமயங்களில் முதலீட்டாளர்கள் எடுக்க வேண்டிய முக்கியமான முடிவுகள்!

முதலீடு

முதலீடு

குறைந்த செலவில் சொத்துக்களை குவிக்க ஏற்ற சிறந்த நேரம் ஏற்ற இறக்கமாக இருக்கும் நேரம் தான்.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India
  இரண்டரை ஆண்டுகளுக்கு முன் மிக தீவிரமாக பரவ ஆரம்பித்த  கோவிட் தொற்று காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரம் மற்றும் ஃபினான்ஷியல் மார்க்கெட் மிகவும் பாதிக்கப்பட்டது. வரலாறு காணாத வகையில் உலக நாடுகள் அனைத்தும் ஒரே நேரத்தில் முடங்கிய நிலையில், தொற்றுநோய் சில கடினமான வாழ்க்கை பாடங்களைக் கற்று கொடுத்தது மட்டுமல்லாமல், சில மதிப்புமிக்க முதலீட்டு பாடங்களையும் நமக்கு கற்று கொடுத்துள்ளது.

  2020-ல் துவங்கிய தொற்று சில வாரங்களில் முதலீட்டாளர்களின் மதிப்பில் கிட்டத்தட்ட 35% சிதைத்தது. உலக பொருளாதாரம் தொற்றிலிருந்து மீண்டு வர குறைந்தபட்சம் 3-4 வருடங்கள் ஆகும் என்று பரவலாக நம்பப்பட்டது.

  மாதந்தோறும் ரூ. 50,000 வரை பென்சன் கிடைக்கும்.. கலக்கும் எல்.ஐ.சி திட்டம்!

  இருப்பினும் தொற்று குறைய துவங்கி லாக்டவுன்கள் தளர்த்தப்பட்ட நிலையில் கணிப்பை பொய்யாக்கி சந்தைகள்  கிட்டத்தட்ட 2.5 மடங்கு உயர்ந்தன. இந்த பொருளாதார மீட்சிக்கு 10 - 15 மாதங்கள் மட்டுமே ஆனது. எனினும் 2022-ஆம் ஆண்டின் துவக்கத்தில் ரஷ்யா-உக்ரைன் நெருக்கடி உலக பொருளாதாரத்தில் மீண்டும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. கோவிட் மற்றும் போர் நெருக்கடி என 2 அசாதாரண காலகட்டத்தையும் பார்த்துள்ள முதலீட்டாளர்கள், தங்கள் நிதி இலக்குகளை அடைய இவற்றிலிருந்து கற்று கொள்ள வேண்டிய கூடிய சிறந்த நிதி பாடங்கள் இங்கே...

  அவசரம் வேண்டாம்:

  பெரும்பாலான முதலீட்டாளர்கள் பதற்றம் அல்லது பீதியில் முடிவுகளை எடுக்க முனைகின்றனர். நெருக்கடியான நிலைகளின் போது அவசர கதியில் எந்த முடிவையும் எடுப்பது நிதியை பெருக்கும் வாய்ப்பை தடுத்து விடும். எதிர்பாராத நேரத்தில் பங்கு சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியின் போது பல முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை வாபஸ் பெற்று வெளியேறும் வழியை தேர்ந்தெடுத்தனர். இதன் மூலம் விரைவான மீட்சிக்கு பிறகு முதலீடுகளை பெருக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். எனவே எந்த ஒரு சூழலிலும் பீதி அடைய வேண்டாம் என்கிறார் Bankbazaar.com-ன் CEO ஆதில் ஷெட்டி. முதலீட்டு வாய்ப்புகளில் நீண்ட கால மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய முடிவுகளை எடுப்பதில் அவசரம் காட்டக்கூடாது  என்றும் கூறுகிறார்.

  மிடில் கிளாஸ் மக்களும் லட்சாதிபதி ஆகலாம்.. சேமிப்பை இங்கு தொடங்கினால் போதும்!

  குறையும் போது முதலீட்டை அதிகரிக்கவும்:

  விலைகள் குறையும் போது கூடுதல் பங்குகளை வாங்கும் உத்தி, உங்கள் முதலீட்டு செலவைக் கணிசமாக குறைக்கிறது. குறைந்த விலையில் வாங்கப்படும் சொத்துக்களை பொறுமையுடன் அணுகினால் நல்ல வருமானத்தை கொடுக்கும்.

  இலக்குகளில் கவனம்:

  நிதி இலக்குகளை நிறைவேற்றுவதை நோக்கமாக கொண்டவையாக இருக்கின்றன ஒருவரின் முதலீடுகள். முதலீடுகளில் இருந்து சிறந்த பலன்களை பெற முதலீட்டாளர்கள் தங்கள் இலக்குகளை மையமாக கொண்டு குறிப்பிட்ட காலத்திற்கு முதலீடு செய்ய வேண்டும். அந்த குறிப்பிட்ட காலம் வரை என்ன நடந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் அல்லது அதிக கவனம் செலுத்தாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் ஒரு நல்ல முதலீட்டு அனுபவத்திற்கு பொறுமை முக்கியம்.

  பல சொத்து வகைகளில் முதலீடு:

  ஒரே சொத்தில் முதலீடு செய்யாமல் பல்வேறு சொத்து வகைகளில் முதலீடு செய்வது ஆபத்து மற்றும் வருமானத்தை சமநிலைப்படுத்த உதவும் ஒரு முக்கிய உத்தி ஆகும். சந்தை மதிப்பீட்டைப் பொறுத்து முதலீட்டாளர் பல சொத்துக்களினால் கிடைக்கும் உகந்த பலனை பெற இந்த யோசனை உதவுகிறது.

  நிலையற்ற தன்மையை வாய்ப்பாக்க வேண்டும்:

  குறைந்த செலவில் சொத்துக்களை குவிக்க ஏற்ற சிறந்த நேரம் ஏற்ற இறக்கமாக இருக்கும் நேரம் தான். பங்கு சந்தையில் நிலவும் நிலையற்ற தன்மையை நீண்ட கால செல்வத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பாக பார்க்க வேண்டும். ஏற்ற இறக்க தன்மை ஸ்டாக் மார்கெட்ஸ்கள் மூலம் முதலீட்டாளர்கள் அதிக வருமானம் பெற உதவுகிறது.

  புத்திசாலித்தனம் எது?

  மார்க்கெட் வீழ்ச்சியடையும் போது முதலீடுகளை நிறுத்துவது அல்லது திரும்பப் பெறுவது புத்திசாலித்தனமான செயல் அல்ல. உங்களுக்கு உண்மையிலேயே பணம் தேவைப்பட்டால் அல்லது உங்கள் நிதி இலக்குகள் விரைவில் எட்டப்பட்டால் தவிர செய்ய்துள்ள முதலீடுகளில் கை வைக்க கூடாது.

   
  Published by:Sreeja
  First published:

  Tags: Business, Savings

  அடுத்த செய்தி