• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • முதலீடு செய்ய நல்ல திட்டத்தை தேடுபவர்கள்... இந்த ஸ்கீம்மை கொஞ்சம் கவனியுங்கள்!

முதலீடு செய்ய நல்ல திட்டத்தை தேடுபவர்கள்... இந்த ஸ்கீம்மை கொஞ்சம் கவனியுங்கள்!

முதலீடு

முதலீடு

தலீடு செய்ய திட்டமிட்டிருப்பவர்கள் கட்டாயம் இந்த திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

  • Share this:
    முதலீட்டில் அதிக வட்டி அல்லது லாபம் கிடைக்கும்போது உங்கள் பணம் வேகமாக இரட்டிப்பாகும். எனவே முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பவர்கள் கட்டாயம் இந்த திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

    சேமிப்பு கணக்கை காட்டிலும் சில குறிப்பிட்ட முதலீடு திட்டங்களில் அதிக வருவாயைப் பார்க்கலாம். நீங்கள் லட்சாதிபதி ஆவதும் கோடிஸ்வரராக உயர நினைப்பதும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் மிகச் சிறந்த முதலீடு திட்டத்தில் தான் உள்ளது.இளம் வயதிலே சற்றும் கவனத்துடன் இதை ஆரம்பித்தால் ஓய்வு காலத்தில் அதிக பணத்தை சம்பாதிக்கலாம். .ஒவ்வொரு முதலீட்டாளர்களும் தங்களது பணத்தை குறுகிய காலத்தில் அதிகரிக்க நினைக்கிறார்கள். உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க தேவையான காலம் உங்கள் முதலீடுகளால் கிடைக்கும் லாபம் அல்லது வட்டி வீதத்தைப் பொறுத்தது. உங்கள் முதலீட்டில் அதிக வட்டி அல்லது லாபம் கிடைக்கும்போது உங்கள் பணம் வேகமாக இரட்டிப்பாகும்.

    அந்த வகையில் இந்த பதிவு முழுக்க முழுக முதலீட்டாளர்களுக்கானது. ஒரு நல்ல முதலீடு திட்டத்தை தேடிக் கொண்டிருப்பவர்கள் கட்டாயம் இதை படியுங்கள். பிரதான் மந்திரி வாய் வந்தன யோஜனா திட்டம் இந்திய அரசால் செயல்படுத்தப்ட்ட திட்டம் ஆகும். இதில் உங்கள் பணத்திற்கு முழு பாதுகாப்பு உண்டு. இதன் வட்டி விகிதம் 7.4% முதிர்வு காலம் 10 ஆண்டுகள் ஆகும். மாதம் மாதம் உங்களின் முதலீட்டிற்கான வட்டி உங்களுக்கு கிடைத்துவிடும். மிகவும் பாதுகாப்பான முதலீட்டு திட்டம், இது உங்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.

    அடுத்தது என்.பி.எஸ். டயர் 2 (Nation pension scheme) கணக்கில் முதலீடு செய்வது. இதுப்பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.என்.பி.எஸ் திட்டத்தை வைத்திருந்தால் இந்த கணக்கையும் துவங்க முடியும். இதில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் நபர்களுக்கு வருமான வரிவிலக்கு பிரிவு 80சியின் கீழ் கிடைக்காது.ஆனாலும் பாதுகாப்பான முதலீட்டை தேடுபவர்களுக்கு இது மிகச் சிறந்த தேர்வாகும். இந்த திட்டத்தில் இருந்து எப்போது வேண்டுமானாலும் செலுத்திய பணத்தினை எடுத்துக் கொள்ளலாம்.இதுக் குறித்த கூடுதல் தகவல்களை ஆன்லைனிலும் பார்க்கலாம். அதுமட்டுமில்லை இந்த திட்டம் குறித்த சந்தேகங்கள் இருந்தால் அதை விரிவாக தெரிந்து கொள்ளவும் ஆன்லைனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: