• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • மாத சம்பளம் வாங்கும் ஊழியர் இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் ஜாக்பாட் தான்!

மாத சம்பளம் வாங்கும் ஊழியர் இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் ஜாக்பாட் தான்!

முதலீடு

முதலீடு

வங்கி சேவைகளில் நிலையான வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டியை காட்டிலும் இதில் வட்டி அதிகம்

  • Share this:
    மாத சம்பளம் வாங்குபவர்கள் கண்ணை மூடிக் கொண்டு இந்த திட்டத்தில் நம்பி முதலீடு செய்தால் ஜாப்பாட் பார்க்கலாம் என்பது போஸ்ட் ஆபீஸ் முழுக்கமாக உள்ளது.

    உங்கள் சேமிப்பின் அங்கமாக இருந்து வருவாயை பெருக்கும் திட்டமாக இது இருக்கும் அதே போல் கடைசி வரை உங்கள் பணத்திற்கு பாதுகாப்பும் கிடைக்கும். இந்த திட்டத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் எஎன்றால் தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் மிகவும் பிரபலமான சேமிப்பு திட்டம் தேசிய சேமிப்பு சான்றிதழ். சிறு வருமான முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.தபால் அலுவலகத்தின் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் (என்.எஸ்.சி) மிகவும் பாதுகாப்பான முதலீட்டு திட்டமாகும். என்.எஸ்.சி திட்டத்தில் நீங்கள் மாதத்திற்கு ரூ .100 குறைவாக முதலீடு செய்தால், சில ஆண்டுகளில் நீங்கள் கோடீஸ்வரராக மாற வாய்ப்புள்ளது.

    இந்த திட்டத்தை நீங்கள் அருகில் இருக்கும் தபால் நிலையத்தில், அவர்கள் கேட்கும் ஆவணங்களை சமர்பித்து கணக்கு துவங்கலாம். மேலும் உங்களின் இந்த சேமிப்பு திட்டத்தில் உள்ள பணத்தை ஒரு தபால் நிலையத்தில் இருந்து மற்றொரு தபால் நிலையத்திற்கு எளிமையாக மாற்றவும் முடியும். இந்த திட்டத்தில் நீதிமன்ற உத்தரவு இருந்தால் பணத்தை இடையிலேயே திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

    பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக 5 வருடத்தில் 7 லட்சம் சேர்க்கலாம்! அதற்கு செய்ய வேண்டியது இதுமட்டும் தான்!

    5 ஆண்டுகளுக்கான ஃபிக்ஸ்ட் மெச்சூரிட்டி காலத்துடன் இந்த சேமிப்பு திட்டம் 6.8% வட்டி வழங்கக் கூடியது. இந்த சேமிப்பு கணக்கில் முதலீட்டின் உச்சவரம்பு இல்லை.தொண்டு நிறுவனங்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்த கணக்கை துவங்கலாம். 10 வயதுக்கு மேலான மைனர் பெயரில் தனியாகவோ, பெற்றோருடன் கூட்டாகவோ முதலீடு செய்யலாம் . வங்கி சேவைகளில் நிலையான வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டியை காட்டிலும் இதில் வட்டி அதிகம். 1961 இன் பிரிவு 80 சி-ன் கீழ் ரூ .1.5 லட்சம் வரை வரி விலக்கு உண்டு. பணத்தேவை ஏற்பட்டால் சில நிபந்தனைகளுடன் 1 வருடத்திற்குப் பிறகு உங்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம். வருவாயை கூட்டும் வகையில், நல்ல லாபம் தரக்கூடிய, மிடில் கிளாச் மக்களுக்கு ஏற்ற வகையில் இதுப்போன்ற பல சிறுசேமிப்பு திட்டங்கள் உள்ளன. அதுக்குறித்து வரும் நாட்களில் பார்க்கலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: