ஹோம் /நியூஸ் /வணிகம் /

3 ஆண்டுகளில் நல்ல ரிட்டர்ன் தரும் ஹைபிரிட் முதலீடு!

3 ஆண்டுகளில் நல்ல ரிட்டர்ன் தரும் ஹைபிரிட் முதலீடு!

ஹைபிரிட் முதலீடு!

ஹைபிரிட் முதலீடு!

3 year return: ஹைப்ரிட் ஃபண்டுகள், ஈக்விட்டி மற்றும் கடன் பங்குகளின் கலவையில் முதலீடு செய்கின்றன. எனவே, கடன் நிதிகளுடன் ஒப்பிடும்போது கூடுதல் வருவாயை உருவாக்க உதவும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இப்போதுள்ள இளைஞர்கள் தங்களுக்கான செலவுகளை பெரும்பாலும் தாங்களே பார்த்துக்கொள்கின்றனர். கார் வாங்க, தங்கள் திருமணத்திற்கான பணம், வீடு வாங்க பணம் என்று தாங்களே சேமித்து வாங்குகின்றனர். 3 முதல் 4 ஆண்டுகளில்  பணம் வேண்டும் எதில் முதலீடு செய்யலாம் என்று யோசிக்கும் நபர்களுக்கான வழி இதோ..

மூன்று வருடங்கள் உள்ள உங்கள் இலக்கிற்கு கடன் பெறுவதற்கு பதிலாக ஹைப்ரிட் ஃபண்டுகளில் முதலீடு செய்வதை நீங்கள் பரிசீலிக்கலாம். ஹைப்ரிட் ஃபண்டுகள், ஈக்விட்டி மற்றும் கடன் பங்குகளின் கலவையில் முதலீடு செய்கின்றன. எனவே, கடன் நிதிகளுடன் ஒப்பிடும்போது கூடுதல் வருவாயை உருவாக்க உதவும். 

அதோடு போர்ட்ஃபோலியோவின் ஒரு பகுதி ஈக்விட்டியில் முதலீடு செய்யப்படுவதால், அவை குறிப்பிட்ட அளவு அபாயத்தையும் கொண்டுள்ளன. ஆனால் அவை பெரும்பாலும் சமாளிக்கக்கூடியதே.

பணமாகக் கொடுத்தால் செலவை மிச்சப்படுத்தலாமா ?

பல்வேறு வகையான கலப்பின நிதிகள் உள்ளன. ஒன்று அக்ரெஸிவ் ஹைப்ரிட் ஃபண்டுகள். இந்த வகையான முதலீட்டில், முதலீடு பணத்தில் ஈக்விட்டிக்கு 70 - 80% அதிகமாக ஒதுக்கீடு செய்யப்படும். மற்றொரு வகை , கன்சர்வேடிவ் ஹைப்ரிட் ஃபண்டுகள். இந்த வகை முதலீடுகள் எப்போதும் கடன் கருவிகளுக்கு அதிக ஒதுக்கீடு வழங்கும். ஈக்விட்டி பங்குகளில்  குறைந்த முதலீட்டைக் கொண்டிருக்கும்.

இதிலேயே சமச்சீர் நிதிகளில் நீங்கள் முதலீடு செய்யலாம். இந்த வகையில்  முதலீட்டாளர் ஈக்விட்டி பங்கு மற்றும் கடனுக்கான ஒதுக்கீட்டை சந்தைக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் அவ்வப்போது மாற்றிக்கொள்ளலாம். அதாவது  ஈக்விட்டி மற்றும் கடன் ஒதுக்கீடு காலப்போக்கில் மாறும் வகையில் நிர்வகிக்கப்படுகிறது. சந்தையில் ஈக்விட்டியின் வளர்ச்சி நேர்மறையாக இருக்கும் போது  முதலீட்டுத் தொகையில்  அதிக பங்கை  ஈக்விட்டி ஒதுக்கீட்டுக்காக அமைத்துக்கொள்ளலாம். ஈக்விட்டி சந்தை நிலையற்றதாக இருக்கும் நேரம் முதலீட்டாளர், ஈக்விட்டியில் ஒதுக்கீட்டைக்  குறைத்து , கடன் பங்குகளை அதிகரிக்கலாம். எனவே, சமச்சீர் நிதிகள் தற்போதைய சந்தை நிலவரங்களைக் கருத்தில் கொண்டு சிறந்த தேர்வாக இருக்கும். 

 உங்கள் தேவைக்கான இலக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் என்றால்,. நீங்கள் ஒவ்வொரு மாதமும் SIPகள் (முறையான முதலீட்டுத் திட்டம்) மூலம் ஐசிஐசிஐ பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் மற்றும் எடெல்வீஸ் பேலன்ஸ்டு அட்வாண்டேஜ் ஃபண்ட். போன்ற பேலன்ஸ்டு அட்வாண்டேஜ் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். வருமான வரி சட்டம் 111A கீழ் விலக்கும் கிடைக்கும்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Business, Investment, Personal Finance