முகப்பு /செய்தி /வணிகம் / டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா.?

டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா.?

டிஜிட்டல் தங்கம்

டிஜிட்டல் தங்கம்

Digital Gold | வளர்ந்து வரும் ஆன்லைன் யுகத்திற்கு ஏற்ப டிஜிட்டல் வடிவில் தங்கத்தை முதலீடு செய்வது கூடுதல் நன்மைகளை தரக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வர உள்ள பண்டிகை காலத்தில் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது எவ்வாறு என பார்க்கலாம்...

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

தீபாவளி, துர்கா பூஜை என அடுத்தடுத்து இந்தியாவில் பண்டிகை காலம் களை கட்ட உள்ளது. இப்படிப்பட்ட நல்ல நாட்களில் புத்தாடைகள், இனிப்பு பலகாரங்கள், பூ அலங்காரம், பட்டாசுகள், பூஜை என பல நல்ல காரியங்களுடன் சேர்த்து தங்க நகைகளை வாங்குவதும் பராம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஏனெனில் இந்திய குடும்பங்களைப் பொறுத்தவரை தங்கம் வெறும் ஆடம்பர பொருளாக மட்டுமின்றி முதலீடாகவும், சேமிப்பாகவும் கருதப்படுகிறது.

தற்போது காலம் மாறிவிட்டது, வளர்ந்து வரும் ஆன்லைன் யுகத்திற்கு ஏற்ப டிஜிட்டல் வடிவில் தங்கத்தை முதலீடு செய்வது கூடுதல் நன்மைகளை தரக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வர உள்ள பண்டிகை காலத்தில் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது எவ்வாறு என பார்க்கலாம்...

டிஜிட்டல் தங்கம் என்றால் என்ன.?

தங்க நகைகள், தங்கக்கட்டிகள் ஆகியவற்றின் மீது முதலீடு செய்து வரும் முதலீட்டாளர்கள் மத்தியில் டிஜிட்டல் தங்கம் பிரபலமாகி வருகிறது. டிஜிட்டல் தங்கம் என்பது பணத்தை கொடுத்து தங்க நகைகளை வாங்குவதற்கு பதிலாக, ஆன்லைனில் பணத்தை முதலீடு செய்து அதன் மதிப்பிற்கு நிகரான தங்கத்தை டிஜிட்டல் பத்திரம் அல்லது சான்றிதழாக சேமித்து வைப்பது ஆகும்.

டிஜிட்டல் தங்கத்தை எங்கே வாங்குவது.?

டிஜிட்டல் தங்கம் என்ற பெயருக்கு ஏற்றார் போல் ஆன்லைனில் வாங்கக்கூடிய தங்கம் ஆகும். ஆக்மாண்ட் தங்கம் (Augmont Gold), MMTC-PAMP இந்தியா பிரைவேட். லிமிடெட் (இது மாநில அரசு நடத்தும் எம்எம்டிசி லிமிடெட் மற்றும் சுவிஸ் நிறுவனமான MKS PAMP கூட்டு நிறுவனம் ஆகும்). டிஜிட்டல் கோல்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் சேப்கோல்ட் பிராண்ட் ஆகிய டிஜிட்டல் தங்கத்தை விற்பனை செய்யும் பிரபலமான நிறுவனங்கள் ஆகும்.

இந்த நிறுவனங்கள் உங்களின் முதலீட்டுக்கு ஏற்ற வகையில் தங்கத்தை வாங்கி உங்கள் பெயரில் பாதுகாப்பான பெட்டகங்களில் சேமித்து வைக்கும். பேடிஎம், அமேசான் பே, கூகுள் பே, போன் பே போன்ற பணப்பரிவர்த்தனை ஆப்-கள் மூலமாகவும் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்யலாம். டிஜிட்டல் தங்கத்தின் விலை வரம்பு 1 ரூபாயில் இருந்து தொடங்குகிறது.

Also Read : தங்கத்தில் முதலீடு செய்வோர் கவனத்திற்கு…. தங்கத்திற்கான வரைமுறை, வரி அளவைத் தெரிந்துகொள்ளுங்கள்!

டிஜிட்டல் தங்கம் வாங்குவதில் உள்ள நன்மைகள் என்னென்ன?

சரக்கு/நாணய ஆய்வாளர் டிரேட்புல்ஸ் செக்யூரிட்டீஸ் பவிக் படேல் கருத்துப்படி, மத்திய அரசு அனைத்து தங்கத்தையும் ஹால்மார்க் செய்யப்பட வேண்டும் என உத்தரவை நடைமுறைப்படுத்தியுள்ளதால், தங்கத்தை வாங்குவது என்பது தனிநபரின் தேவை மற்றும் விருப்பத்தை பொருத்தது” என தெரிவித்துள்ளார்.

அவர் நியூஸ் 18க்கு அளித்துள்ள பேட்டியில், “தங்க நகைகள், காசுகள், தங்க கட்டிகள் என Physical வடிவத்தில் தங்கத்தை வாங்கும் போது அது சுத்தமானதாகவும், சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட தரத்துடன் இருப்பதை உறுதி செய்வது மிகப்பெரிய சவலாக இருந்து வந்தது. ஆனால் தற்போது நகைக்கடைகளில் விற்பனை செய்யப்படும் அனைத்து விதமான தங்கத்தையும் ஹால்மார்க் முத்திரையுடன் தான் விற்பனை செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதால், தற்போது அதன் தூய்மையைப் பற்றி எந்த அச்சமும் இல்லாமல் ஒருவர் தங்கத்தை வாங்க முடியும்.

Also Read : தங்கத்தில் முதலீடு செய்யனும்னு ஐடியா இருக்கா? அப்ப முதல்ல இதை தெரிஞ்சுக்கோங்க

இதற்கு முன்பு தங்கத்தை சேமிக்க அதனை நகைகளாக வாங்குவது மட்டுமே ஒரே வழியாக இருந்தது, ஆனால் இப்போது டிஜிட்டல் முறையில் தங்கத்தை வாங்குவது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இருப்பினும் டிஜிட்டல் தங்கத்தின் மீதான முதலீடுகளைக் கண்காணிக்க ரிசர்வ் வங்கி அல்லது செபி அதிகாரப்பூர்வ அமைப்பு இல்லாதது குறைபாடாக பார்க்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி ஆபரணத் தங்கம் சவரன் 38 ஆயிரத்திற்கும் மேல் விற்பனையாகி வருகிறது. ஆனால் டிஜிட்டல் தங்கத்தை வாங்க குறைந்த அளவிலான முதலீடுகளே போதுமானது. SIP போன்ற தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பும் ஒருவர், தங்கத்தை வாங்கும் போது, ​​எந்த தொகையிலும் டிஜிட்டல் தங்கத்தை வாங்க முடியும். தங்க நகைகளை வங்கி லாக்கர்களில் வாடகை செலுத்தி பாதுகாப்பது போன்ற எந்த எக்ஸ்ட்ரா செலவு மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான அச்சம் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்யும் போது கிடையாது.

Also Read : மூத்த குடிமக்களுக்கு ஒரு குட்நியூஸ்... இந்த வங்கிகளில் எல்லாம் FD வட்டி விகிதம் உயர்வு.! 

திருமணம், பிறந்தநாள் போன்ற நிகழ்வுகளுக்கு பரிசளிக்க விரும்பினால் தங்க நகைகளை வாங்கிக்கொடுப்பது சிறந்தது. ஆனால் குடும்பத்தின் எதிர்காலம், பிள்ளைகளின் படிப்பு, திருமணம் போன்ற விஷயங்களுக்காக யாராவது தங்கம் வாங்க நினைத்தால், அவர்களது சேமிப்பை பாதுகாப்பான முதலீடாக மாற்ற டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது நல்லது என்பதே பொருளாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

First published:

Tags: Gold, Investment