ஹோம் /நியூஸ் /வணிகம் /

ரூ.44 முதலீடு செய்தால் ரூ.27 லட்சம் உங்கள் கையில்.. எல்ஐசியின் சூப்பரான பிளான்

ரூ.44 முதலீடு செய்தால் ரூ.27 லட்சம் உங்கள் கையில்.. எல்ஐசியின் சூப்பரான பிளான்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

LIC | 90 நாட்கள் ஆன குழந்தை முதல் 55 வயது வரையிலான நபர்கள் இந்தத் திட்டத்தில் இணையலாம். உங்களுக்கு 100 ஆண்டுகள் வரையில் கவரேஜ் தரப்படுகிறது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

எதிர்காலத்திற்கு தேவையான நிதி பாதுகாப்பை இளமைக் காலத்திலேயே நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சிறுக, சிறுக நாம் சேமிக்கும் பணம் பெரும் செல்வத்திற்கான முதலீடாக மாற வேண்டும். அந்த வகையில், எல்ஐசி நிறுவனத்தின் காப்பீட்டுத் திட்டங்கள் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். அதிலும், எல்ஐசி-யின் ஜீவன் உமாங் பாலிசி உங்களுக்கு நிதி பாதுகாப்பு மற்றும் உத்தரவாதம் ஆகிய இரண்டையும் தருகிறது.

அதிக லாபம் கிடைப்பதுடன், நீங்கள் செய்யும் முதலீட்டிற்கு உத்தரவாதம் உண்டு என்பதால், எதிர்கால சேமிப்புக்கு திட்டமிடும் உங்களுக்கான சிறப்பான பாலிசியாக ஜீவன் உமாங் திட்டம் இருக்கும்.

மற்ற பாலிசிகளில் இருந்து வேறுபட்டதாக ஜீவன் உமாங் பாலிசி உள்ளது. இங்கு காப்பீடு செய்திருப்பவர், குறிப்பிட்ட காலம் வரையில் தொடர்ச்சியாக பணத்தை சேமிக்கவும், பாலிசியின் முதிர்வு காலத்தில் மிகப் பெரிய தொகை கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதே பாலிசியில் உங்களுக்கு எண்டோவ்மெண்ட் திட்ட பலன்களும் கிடைக்கிறது.

பாலிசி காலத்தில் ஒருவேளை பாலிசிதாரர் இறக்கும் பட்சத்தில், ஒட்டுமொத்த உத்தரவாத தொகையும் வாரிசுதாரருக்கு வழங்கப்படும். 90 நாட்கள் ஆன குழந்தை முதல் 55 வயது வரையிலான நபர்கள் இந்தத் திட்டத்தில் இணையலாம். உங்களுக்கு 100 ஆண்டுகள் வரையில் கவரேஜ் தரப்படுகிறது.

Also Read : குழந்தைகளின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய விருப்பமா? நல்ல லாம் தரும் டாப் 5 திட்டங்கள்

ஜீவன் உமாங் பாலிசியில் சேர்ந்து, பிற்காலத்தில் நீங்கள் ரூ.27 லட்சம் பெற வேண்டும் என்றால், இப்போதைய நாளில் இருந்து எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்ற கணக்குகளை இப்போது பார்க்கலாம்.

ஜீவன் உமாங் பாலிசி கணக்கீடு

ஜீவன் உமாங் பாலிசியில் 30 ஆண்டு கால திட்டத்தை உங்களின் பச்சிளம் குழந்தைக்கு நீங்கள் தேர்வு செய்து, மாதந்தோறும் ரூ.1,302 செலுத்தி வருகிறீர்கள் என்றால், 30 ஆண்டுகளில் நீங்கள் ரூ.4.58 லட்சம் முதலீடு செய்திருப்பீர்கள். அதாவது நாள்தோறும் நீங்கள் ரூ.44 என்ற வகையில் முதலீடு செய்தால் போதுமானது. இன்றைய விலைவாசியில் இது 4 அல்லது 3 டீக்கு சமமான தொகை மட்டுமே.

பாலிசி முதிர்வு அடைந்த பிறகு உங்கள் குழந்தைக்கு ஆண்டுதோறும் ரூ.40 ஆயிரம் போனஸ் தொகை கிடைக்கும். குழந்தையின் 100 ஆண்டுகள் வரையிலும் இந்தத் தொகை கிடைத்துக் கொண்டே இருக்கும். ஆக, மொத்தம் கிடைக்கும் தொகையை கணக்கு செய்து பார்த்தால் ரூ.27.60 லட்சம் வரும்.

ஒருவேளை உங்கள் குழந்தைக்கு 30 வயது ஆகும்போதே, அதன் எதிர்கால கல்வி அல்லது வேறு ஏதேனும் செலவுகளுக்கு பணம் தேவைப்படும் பட்சத்தில், அந்த சமயத்திலேயே முதிர்வு தொகையை பெற்றுக் கொள்ளலாம். ஆனால், 30 ஆண்டுகளுக்கு உண்டான போனஸ் தொகை மற்றும் அடிப்படை உத்தரவாத தொகை மட்டுமே கிடைக்கும்.

Published by:Vijay R
First published:

Tags: LIC, Life Insurance, Savings