உங்கள் பணத்தை ஆபத்து இல்லாத திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பினால் மத்திய அரசு வழங்கும் பல்வேறு முதலீட்டு திட்டங்கள் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். மத்திய அரசின் ஆதரவில் செயல்படுத்தப்பட்டு வரும் முதலீட்டு திட்டங்கள் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன.உங்கள் பணத்தில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்றால் நீங்கள் எந்த அஞ்சலக திட்டங்களில் முதலீடு செய்யலாம் என்பதை இங்கே பார்க்கலாம். கீழ்காணும் திட்டங்கள் இந்தியா முழுவதும் உள்ள தபால் நிலையங்களிலும், அஞ்சல் அலுவலகக் கிளைகளிலும் கிடைக்கின்றன.
கிசான் விகாஸ் பத்ரா (Kisan Vikas Patra - KVP) : கிசான் விகாஸ் பத்ரா திட்டம் நீங்கள் முதலீடு செய்யும் பணத்தை 10 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்களில் சுமார் 7% வட்டி விகிதத்தில் இரட்டிப்பாக்கும் திறன் கொண்டது. உதாரணமாக நீங்கள் இந்த KVP திட்டத்தில் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் 124 மாதங்களுக்குப் பிறகு ரூ.4 லட்சம் கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் நீங்கள் ரூ.1000 கூட முதலீடு செய்யலாம். கிசான் விகாஸ் பத்ரா திட்டம் தற்போது 6.9% வட்டி விகிதத்தை வழங்குகிறது. இது பல முன்னணி வங்கிகள் வழங்கும் FD-யின் வருவாயை விட அதிகமாகும். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு சிங்கிள் மற்றும் ஜாயின்ட் அக்கவுண்ட்ஸ்களை ஓபன் செய்வதற்கான ஆப்ஷனை போஸ்ட் ஆபிஸ் வழங்குகிறது. பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் பெயரில் KVP திட்டத்தில் முதலீட்டு கணக்கைத் திறக்கலாம். மேலும் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய உச்ச வரம்பு எதுவும் இல்லை.
Read More : ரூ.44 முதலீடு செய்தால் ரூ.27 லட்சம் உங்கள் கையில்.. எல்ஐசியின் சூப்பரான பிளான்
நேஷ்னல் சேவிங்ஸ் சர்டிஃபிகேட் (National Savings Certificate - NSC) : அஞ்சலக முதலீட்டு திட்டமான NSC-க்கு தற்போது 6.8% வட்டி வழங்கப்படுகிறது. தற்போதைய வட்டி விகிதத்தை அரசு குறைக்காமல் அப்படியே வைத்திருந்தால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு NSC-ல் முதலீடு செய்யப்படும் பணம் கிட்டத்தட்ட இரட்டிப்பாகும். உண்மையில் இந்த திட்டத்தின் மெச்சூரிட்டி பீரியட் 5 ஆண்டுகள் என்பதால் அதன் பிறகு இந்த திட்டத்தின் கீழ் உங்கள் முதலீட்டை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும். அப்போது தான் உங்கள் பணம் இரட்டிப்பாகும். உதாரணமாக நீங்கள் இந்த திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்தால், மெச்சூரிட்டி பீரியட்டான 5 ஆண்டுகளுக்கு பிறகு உங்களக்கு ரூ.2,77,899 கிடைக்கும். இப்போது இந்த தொகையை மீண்டும் 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால் 10-வது ஆண்டில் உங்களுக்கு கிட்டத்தட்ட ரூ.3,86,000 கிடைக்கும்.
சீனியர் சிட்டிசன்ஸ் சேவிங்ஸ் ஸ்கீம் (SCSS): 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான இந்த SCSS திட்டமானது முதலீடு செய்பவருக்கு 7.4% வட்டி விகிதத்தை வழங்குகிறது. சீனியர் சிட்டிசன் ஒருவர் இந்த திட்டத்தில் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால், தற்போதுள்ள வட்டி விகிதத்தின் படி 5 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு ரூ.2,76,000 கிடைக்கும். முதலீட்டாளர்கள் மீண்டும் 5 ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் அவர்களின் முதலீட்டு பணம் கிட்டத்தட்ட ரூ.3,72,00 கிடைக்கும். இன்னும் ஓராண்டிற்கு முதலீட்டை நீடித்தால் இறுதியில் ரூ.2 லட்சம் முதலீடு 11 ஆண்டுகளில் இருமடங்காகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Business, Post Office, Savings