Home /News /business /

50 வயதுக்கு மேற்பட்ட தனி நபருக்கான ஸ்டார் ஹெல்த் பிரீமியர் இன்ஷூரன்ஸ் பாலிசி அறிமுகம்!

50 வயதுக்கு மேற்பட்ட தனி நபருக்கான ஸ்டார் ஹெல்த் பிரீமியர் இன்ஷூரன்ஸ் பாலிசி அறிமுகம்!

காட்சி படம்

காட்சி படம்

சமீபத்திய ஸ்டார் ஹெல்த் பிரீமியர் இன்ஷுரன்ஸ் பாலிசி குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஹோம் கேர் ட்ரீட்மென்ட் போன்ற பலன்களை வழங்குகிறது.

இந்தியாவின் முதல் தனித்த சுகாதார காப்பீட்டு நிறுவனமான ஸ்டார் ஹெல்த் மற்றும் அலைட் இன்ஷுரன்ஸ், புதிதாக ஸ்டார் ஹெல்த் பிரீமியர் இன்ஷூரன்ஸ் பாலிசி ஒன்றை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

இந்த புதிய பாலிசி 50 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் நோய் அல்லது விபத்து காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்படும் போது ஏற்படும் செலவினங்களை ஈடுகட்ட வடிவமைக்கப்பட்ட ஒரு தனிநபர் இழப்பீட்டு சுகாதார பாலிசி என்று நிறுவனம் கூறி இருக்கிறது. சமீபத்திய ஸ்டார் ஹெல்த் பிரீமியர் இன்ஷுரன்ஸ் பாலிசி குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஹோம் கேர் ட்ரீட்மென்ட் போன்ற பலன்களை வழங்குகிறது (அதிகபட்சம் ரூ.5 லட்சத்திற்கு உட்பட்ட காப்பீடு தொகையில் 10% வரை).

இது தவிர ஆயுஷ் சிகிச்சையின் கீழ் உள்நோயாளிகளை மருத்துவமனையில் சேர்க்கும் செலவுகள் மற்றும் டே கேர் சிகிச்சைகளுக்கான காப்பீடு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது உணவு கட்டணம் மற்றும் பிற நுகர்பொருட்கள் மற்றும் ஒரு உள்நோயாளியாகவோ அல்லது மருத்துவமனையில் டே கேர் சிகிச்சையின் ஒரு பகுதியாகவோ காப்பீடு செய்யப்பட்ட தொகையில் 50% வரை நவீன சிகிச்சைகளுக்கான காப்பீடு உள்ளிட்ட பலன்களை இந்த இன்ஷுரன்ஸ் அளிக்கிறது. மேற்காணும் இந்த அம்சங்கள் இந்த பாலிசியை வயதானவர்களுக்கு மிகவும் சரியானதாக ஆக்குகின்றன.

இன்ஷுரன்ஸ் செய்யும் நபருக்கு ஏற்கனவே நோய்கள் இருந்தாலோ அல்லது மருத்துவ சிகிச்சையில் இருந்தாலோ அல்லது குறைபாடுகள் இருந்தாலோ இந்த பாலிசியைப் பெறுவதற்கு முன் மருத்துவ பரிசோதனைகள் தேவையில்லை என்பது குறிப்பிடதக்க அம்சமாக உள்ளது. வாடிக்கையாளர்கள் காலாண்டு அல்லது அரையாண்டு தவணைகளில் கட்டணம் செலுத்த கூடிய பிரீமியங்களை தேர்வு செய்து குறிப்பிட்ட இந்த பாலிசியை வாங்கலாம். இந்த புதிய பாலிசி 1 ஆண்டு, 2 அல்லது 3 ஆண்டுகளுக்கான பாலிசி பீரியட்டை வழங்குகிறது. வெளிநோயாளர் மருத்துவச் செலவுகள், உடல்நலப் பரிசோதனை பலன்கள், சாலை மற்றும் ஏர் ஆம்புலன்ஸ் செலவுகள், மருத்துவமனைக்குச் செல்லும் முன் மற்றும் பிந்தைய செலவுகள், உறுப்பு தானம் செய்பவர்களின் செலவுகள், பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை போன்ற பல சிறப்பு அம்சங்கள் இந்த பாலிசி மூலம் பெறலாம்.

also read : மார்ச் மாதத்துடன் டெட்லைன் முடியும் முக்கியமான விஷயங்கள்.. மறக்காமல் இதையெல்லாம் செஞ்சு முடிங்க

முக்கிய அம்சங்கள்:

* காப்பீடு தொகை ரூ.1,00,00,000 வரை கிடைக்கும்.

* முதல் நாளிலிருந்து வெளிநோயாளிகளுக்கான மருத்துவ செலவுகளை இந்த பாலிசி ஈடுசெய்கிறது

* நீண்ட கால தள்ளுபடி: 2 வருட பாலிசிக்கு - 2-வது ஆண்டு பிரீமியத்தில் 10% தள்ளுபடி. 3 வருட பாலிசிக்கு - 2-வது மற்றும் 3-வது வருட பிரீமியத்தில் 11.25% தள்ளுபடி

பாலிசி நன்மைகள்:

* ஒவ்வொரு க்ளெய்ம் ஃப்ரீ வருடத்திற்கும் (claim free year) ஹெல்த் செக்கப்

* காப்பீடு செய்யப்பட்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு உடனடியாக 60 நாட்கள் வரை ஏற்படும் மருத்துவச் செலவுகளை உள்ளடக்கும் முன் மருத்துவமனை செலவுகள்

* காப்பீடு செய்யப்பட்ட நபர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட உடனேயே 90 நாட்கள் வரை ஏற்படும் மருத்துவச் செலவுகளை உள்ளடக்கிய மருத்துவ செலவுகள்

* காப்பீட்டு தொகையில் 10% வரை குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு ஹோம்-கேர் ட்ரீட்மென்ட் (அதிகபட்சம்ரூ.5 லட்சத்திற்கு உட்பட்டது)

* நவீன சிகிச்சையானது ஒரு உள்நோயாளியாகவோ அல்லது மருத்துவமனையில் பகல்நேர சிகிச்சையின் ஒரு பகுதியாகவோ காப்பீடு செய்யப்பட்ட தொகையில் 50% வரை வழங்குகிறது.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Insurance, Life Insurance

அடுத்த செய்தி