ஹோம் /நியூஸ் /வணிகம் /

இந்தியாவில் டிஜிட்டல் கரன்சி..சோதனை முறையில் எஸ்பிஐ உள்ளிட்ட 9 வங்கிகளில் அறிமுகம்..

இந்தியாவில் டிஜிட்டல் கரன்சி..சோதனை முறையில் எஸ்பிஐ உள்ளிட்ட 9 வங்கிகளில் அறிமுகம்..

இந்தியாவில் டிஜிட்டல் கரன்சி.

இந்தியாவில் டிஜிட்டல் கரன்சி.

Digital Currency | டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி கண்காணிப்பதால் மோசடி, ஊழல் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவில் டிஜிட்டல் கரன்சி வெளியிடப்பட்டுள்ளது. சோதனை முறையில் எஸ்பிஐ உள்ளிட்ட 9 வங்கிகள் மொத்த விற்பனைப் பிரிவுக்கு டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தியுள்ளன.

மத்திய பட்ஜெட்டில், நடப்பு நிதி ஆண்டில் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். தற்போது இந்தியாவில் பயன்படுத்தும் பணம், காகித வடிவத்திலும், உலோக நாணய வடிவத்திலும் உள்ளன.

அதேபோன்று, 'டிஜிட்டல் கோட்' பயன்படுத்தி டிஜிட்டல் கரன்சி உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. சோதனை அடிப்படையில் டிஜிட்டல் கரன்சியை பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, கோடக் மஹிந்திரா, யெஸ் வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் மற்றும் எச்எஸ்பிசி ஆகிய 9 வங்கிகள் வெளியிட்டுள்ளன. முதல் கட்டமாக மொத்த விற்பனைப் பிரிவுக்கு டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

Read More : பணம் இல்லாத சூழல்.. அதிகரிக்கும் மன அழுத்தம்.. நிதி பிரச்னையை சமாளிக்கும் டிப்ஸ் இதோ!

டிஜிட்டல் கரன்சி என்பது மின்னணு வடிவில் இருக்கும் ஒரு பிரத்யேக நாணயமாகும். இதில் கிரிப்டோகரன்சி, ஸ்டேபிள் காயின்கள், CBDCs எனப்படும் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் என மூன்று வகைகள் உள்ளன. டிஜிட்டல் நாணயம் என்பது ஒரு நாட்டின் மத்திய வங்கியால் வெளியிடப்படும் டிஜிட்டல் நாணயமாகும். இது பிட்காயின் போல் தான் என்றாலும், ரிசர்வ் வங்கி மூலம் நிர்வகிக்கப்படும். இதில் கிரிப்டோகரன்சிகளை போல பெரியளவில் மாற்றம் இருக்காது. இந்த டிஜிட்டல் ரூபாய் மதிப்பு, ரூபாய்க்கு நிகராகவே இருக்கும்.

டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி கண்காணிப்பதால் ஒவ்வொரு ரூபாய் பரிமாற்றமும் கணக்கில் வரும். இதன் மூலம் மோசடி, ஊழல் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Digital Currency, India