ஹோம் /நியூஸ் /வணிகம் /

ஹெல்மெட்டுக்கு வரி விலக்கா..? - பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு..!

ஹெல்மெட்டுக்கு வரி விலக்கா..? - பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு..!

மாதிரிப்படம் ..

மாதிரிப்படம் ..

உயிர் காக்கும் கவசமான ஹெல்மெட்டிற்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி விதிக்கப்படுவதை முற்றி்லும் கைவிட வேண்டும் என ஐஆர்எஃப் எனப்படும் சர்வதேச சாலை பாதுகாப்பு சங்கம் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிதிநிலை அறிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய வரிகள் இல்லாத, பல்வேறு சலுகைகளுடன் இந்த நிதிநிலை அறிக்கை இருக்கும் என பலரும் எதிர்பார்க்கிறார்கள். அதற்கேற்றார் போல் சாமானியர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிகிறது.

தற்போது இரு சக்கர சாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் தலைக்கவசம் எனப்படும் ஹெல்மெட்டிற்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. ஹெல்மெட் கட்டாயம் என்கிற நிலை இருக்கும்போது, அதற்கான தர நிர்ணயம் மற்றும் அதை உறுதிப்படுத்தும் அம்சங்கள் குறித்தும் கேள்வி எழுகிறது. மிகவும் அவசியமான ஹெல்மெட்டிற்கு 18 விழுக்காடு வரி விதிக்கப்படுவது விவாதப் பொருளாக ஆன போதும் வரி விலக்கு கிடைக்கவில்லை.

தற்போது மத்திய பட்ஜெட் வரும் ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் ஐஆர்எஃப் எனப்படும் இண்டர்நேசனல் ரோட் ஃபெடரேசன் என்ற அமைப்பு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில் ஹெல்மெட்டிற்கான ஜிஎஸ்டியை 18 விழுக்காட்டில் இருந்து பூஜ்யமாமக குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் நிகழும் சலை விபத்துகளில் இரு சக்கர வாகனங்களில் விழுந்து உயிரிழப்பவர்களில் இந்தியாவின் பங்கு 11 விழுக்காடு. அதிலும் குறிப்பாக இருசக்கர வாகன விபத்துகளில் தலைக்காயம் ஏற்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் 31.14 விழுக்காடு. அதனால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என இந்திய அரசு சட்டப்பூர்வமாக வலியுறுத்துகிறது. ஆனால் அப்படிப்பட்ட உயிர் காக்கும் ஹெல்மெட்டிற்கு ஏன் பதினெட்டு விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும் என ஐஆர்எஃப் கேள்வி எழுப்பியுள்ளது.

தரமான, அதோடு விலை குறைவான ஹெல்மெட் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறார் ஐஆர்எஃப்-பின் தலைவர் கே.கே.கபிலா. ஜிஎஸ்டி வரி நீக்கப்பட்டால் இன்னும் தரமான முறையில் ஹெல்மெட்டுகளை தயாரிக்க தயாரிப்பாளர்களும் முன் வருவார்கள் என்கிறார் கபிலா. குறைவான விலைக்கு தரமான ஹெல்மெட் கிடைக்கும்போது அதை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் குறையும் என்பதால் இந்த விஷயத்தில் மத்திய அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என கபிலா வலியுறுத்தியுள்ளார். அதனால் வரும் பட்ஜெட் தாக்கலின்போது ஹெல்மெட்டிற்கான வரி விலக்கு அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

செய்தியாளர் : ரொசாரியோ ராய் 

First published:

Tags: Business, Helmet