பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) மற்றும் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) ஆகியவை 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன, இது நாட்டில் காப்பீட்டு ஊடுருவலின் அளவை மேம்படுத்துவதற்கும், சாதாரண மக்களுக்கு, குறிப்பாக ஏழைகள் மற்றும் கடைநிலை மக்கள் காப்பீடு பெறுவதை உறுதி செய்கிறது. கடந்த 2015ம் ஆண்டு மறைந்த அருண் ஜேட்லி நிதியமைச்சராகப் பதவியேற்ற போது இந்த திட்டங்களை அறிவித்தார். இந்த திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் 2015-ம் ஆண்டு மே மாதம் கொல்கத்தாவில் துவக்கி வைக்கப்பட்டது.
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) என்பது 18 முதல் 50 வயதுடைய இந்தியர்களுக்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். அதன்படி பாலிசிதாரர் ஒருவர் இறந்துவிட்டால், அவரது குடும்ப உறுப்பினர்கள் அல்லது பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு இந்த நிதி உதவி வழங்கப்படுகிறது. தகுதியான நபர் ஆண்டுக்கு ரூ.330 செலுத்தி ரூ.2 லட்சம் மதிப்புள்ள இந்த ஆயுள் காப்பீட்டுத் தொகையைப் பெறலாம். இது குறித்து தங்கள் அருகில் உள்ள வங்கிக் கிளை அல்லது தபால் அலுவலகத்திற்குச் சென்று PMJJBY பாலிசியை பெறலாம். பாலிசிதாரர்களின் வங்கி கணக்கில் பிரீமியம் தொகை தானாக டெபிட் செய்யப்படுகிறது.
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) என்பது விபத்துக் காப்பீட்டுத் திட்டமாகும், இதன் கீழ் பாலிசிதாரர் விபத்தில் இறந்தால் மட்டுமே அவர் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு (நாமினிகளுக்கு) நிதித் தொகை வழங்கப்படும். 18 முதல் 70 வயது வரை உள்ள இந்திய குடிமக்கள் இந்த பாலிசியை வாங்கலாம். இத்திட்டமானது விபத்தில் மரணம் ஏற்பட்டால் ரூ.2 லட்சமும், விபத்தினால் பாதி உடல் பாகங்கள் செயலற்று போனால் ரூ.1 லட்சமும் வழங்கப்படுகிறது.
Also Read : சிலிண்டர் மானியத்தில் புதிய விதிமுறை... யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?
இந்தியக் குடிமக்கள் குறைந்தபட்சம் PMJJBY திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ. 330 மற்றும் PMSBY திட்டத்திற்கு ரூ. 12 சேர்த்து மொத்தமாக ரூ. 342 என வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 முதல் மே 31 வரை பாலிசி காலம் கணக்கிடப்பட்டு இன்சூரன்ஸ் பிரீமியம் தொகை ஜூன் 1 அல்லது அதற்கு முன் குறிப்பிட்ட வங்கி கணக்கில் இருந்து பிடிக்கப்படும்.
இந்நிலையில் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டத்திற்கான பீரிமியம் ரூ.330-லிருந்து ரூ.436 அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேப்போன்று பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) திட்டத்திற்கான ப்ரிமீயம் ரூ.12-லிருந்து ரூ.20 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்ப்பட்டுள்ளது. இந்த காப்பீடு திட்டங்களுக்கான ப்ரீமியம் உயர்வு நாளை (ஜூன் 1) முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Insurance, National Insurance