Home /News /business /

இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பதற்கு முன்பு இந்த விஷயங்களை கவனிக்க மறந்து விடாதீர்கள்!

இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பதற்கு முன்பு இந்த விஷயங்களை கவனிக்க மறந்து விடாதீர்கள்!

இன்சூரன்ஸ் பாலிசி

இன்சூரன்ஸ் பாலிசி

மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் பலவற்றில் ரூம் வாடகைக்கு உச்சவரம்பு உண்டு

    மருத்துவம் சார்ந்த செலவுகள் அதிகரித்து வரும் சூழலில், அடிப்படையான ஒரு இன்சூரன்ஸ் பாலிசி என்பது உங்கள் ஒட்டுமொத்த குடும்பத்திற்குமான தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக இருக்காது. மருத்துவமனை ரூம் வாடகை சலுகை, மருத்துவமனை செலவு, மிகுந்த உடல்நல பாதிப்புக்கான கவரேஜ் போன்ற ரைடர் அல்லது ஆட்-ஆன்களை உங்கள் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.

    அடிப்படையான மருத்துவக் காப்பீட்டு பாலிசிக்கு கூடுதலாக ஏற்படும் செலவுகளை சமாளிப்பதற்காக டாப் -அப் பாலிசி போன்ற சேவைகளையும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்குகின்றன. என்னென்ன ரைடர்கள் உங்களுக்கு பலன் அளிக்கும் என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

    ரூம் வாடகை சலுகை :

    மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் பலவற்றில் ரூம் வாடகைக்கு உச்சவரம்பு உண்டு. இந்நிலையில், ரூம் வாடகைக்கான ரைடரை நீங்கள் தேர்வு செய்தால், கூடுதல் கட்டணம் செலுத்தாமலேயே மருத்துவமனையில் உங்களுக்கு தேவையான நாட்களுக்கு ரூம் வசதியை பெற முடியும். 35 வயது உடையவர் ரூ.15 லட்சத்திற்கு காப்பீடு செய்திருந்தார் என்றால், ரைடர் பெறுவதற்கு கூடுதலாக ரூ.1,500 செலுத்தினால் போதுமானது.

    Bank Holidays April: வங்கிகளுக்கு இந்த வாரத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறை! என்னென்ன சேவைகள் பாதிக்கப்படும் தெரியுமா?

    மருத்துவமனை செலவு ரைடர் :

    பாலிசிதாரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு நாளும், அவர்களுக்கான மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள குறிப்பிடத்தக்க தொகையை இந்த ரைடர் வழங்கும். பொதுவாக காப்பீடு பெறுவதற்கு குறைந்தபட்சம் 48 மணி நேரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்நிலையில், பாலிசியில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாட்களுக்கு தகுந்தபடி ஒன் டைம் பேமெண்ட்-ஆக இந்த ரைடர் இருக்கும்.

    PF Account : மாத சம்பளக்காரர்கள் இருமடங்கு இழப்பில் இருந்து தப்பிக்க இதை செய்திடுங்கள்!

    மிகுந்த பாதிப்புக்கான கவர் :

    புற்றுநோய், ஹார்ட் அட்டாக், சிறுநீரக செயலிழப்பு ஆகியவற்றுக்கான சிகிச்சை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை போன்றவற்றின் போது பாலிசிதாரருக்கு ஏற்படும் செலவுகளை சமாளிக்க இது உதவிகரமாக இருக்கும். ரைடருக்கான பெறும் தொகை பெற்றுக் கொண்ட பிறகு, பாலிசிதாரர் அதை ரத்து செய்துவிட்டு, அடிப்படை மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மட்டும் தொடரலாம். அடிப்படை பாலிசியுடன் இந்த ரைடரை சேர்த்துக் கொள்வது சிறந்த உதவியாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    டாப் அப் கவர் :

    வழக்கமான மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில், நீங்கள் எந்தத் தொகைக்கு காப்பீடு செய்திருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு மட்டுமே காப்பீடு பெற முடியும். ஆனால், அந்த உச்சவரம்பை கடந்த பிறகும் கூட நீங்கள் காப்பீடு பெறுவதற்கு இந்த டாப் அப் கவர் உதவிகரமாக இருக்கும். தனிநபருக்கான டாப் அப் கவர் மற்றும் மொத்த குடும்பத்திற்குமான கவர் என இரண்டு வகைகளில் நீங்கள் இதை பெற்றுக் கொள்ளலாம்.

    அடிப்படையான மருத்துவக் காப்பீட்டை ஒரு நிறுவனத்தில் பெற்றிருந்தாலும், மற்றொரு நிறுவனத்திலும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஒருமுறை மருத்துவமனையில் சேரும்போதே அடிப்படை காப்பீடு மற்றும் டாப் அப் காப்பீடு என இரண்டையும் சேர்த்து பெற்றுக் கொள்ளலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Insurance, Life Insurance, Medical Emergency

    அடுத்த செய்தி