காப்பீடு என்பது எதிர்காலத்திற்கான ஒரு பாதுகாப்பு. ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் பொழுது அல்லது தீவிரமான உடல் நல பாதிப்பு அல்லது விபத்து ஏற்படும் பொழுது அதற்குரிய காப்பீடு இருந்தால் பொருளாதார அல்லது நிதி நெருக்கடியை எளிதாக எதிர்கொள்ள முடியும்.
ஒரு குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவர் திடீரென்று இறந்துவிட்டால் அவருடைய குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். அந்த நேரத்தில் ஆயுள் காப்பீடு இருந்தால் அதிலிருந்து கிடைக்கும் கணிசமான தொகை குடும்பத்திற்கு பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உதவியாக இருக்கும். அதே போல மருத்துவக் காப்பீடு, எதிர்கால கல்விக்கான காப்பீடு, குறிப்பிட்ட நோய்களுக்கு மற்றும் விபத்துகளுக்கு காப்பீடு என்று பலவகையான பாலிசிகள் உள்ளன. அதில் ஒன்று தான் insurance protection policy என்று கூறப்படும் உங்கள் வருமானத்திற்கு உத்தரவாதமளிக்கும் ஒரு காப்பீடு.
இந்த காப்பீட்டு புதியதாக இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இது பலரும் அறிந்த டெர்ம் இன்ஷூரன்சின் மற்றொரு வடிவம் தான்.
சமையல் எண்ணெய்யின் விலை ரூ.10 வரை குறையுமா? எதிர்பார்ப்பில் இல்லத்தரசிகள்!
டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசி என்பது ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு எடுக்கக்கூடிய பாலிசி ஆகும். இந்த பாலிசியின் படி, பாலிசி வாங்கும் நபருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேரும் பொழுது பாலிசி எடுத்த தொகையை இரண்டு விதமாக தன்னுடைய நாமினி அல்லது குடும்பத்தாருக்கு வழங்குமாறு கூறலாம். பொதுவாக ஆயுள் காப்பீடு எடுத்த ஒரு நபர் இறந்து போகும் போது காப்பீட்டு தொகை அவருடைய குடும்பத்தினருக்கு முழுமையாக வழங்கப்படும். ஆனால் இந்த பாலிசியின் படி, மொத்தமாக காப்பீட்டு தொகையை வழங்குவதற்கு பதிலாக காப்பீட்டு தொகையை இரண்டு பகுதிகளாக பிரித்து, ஒரு பகுதியை ரொக்கமாகவும், மற்றொரு பகுதியை மாதாமாதம் வருமானமாகவும் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கும். எனவே இந்த திட்டத்தில் மாதாந்திர வருமானமும் கிடைக்கும் பாலிசி பெற்றவர் இறந்த பிறகு குடும்பத்திற்கு கணிசமான ரொக்கத் தொகையும் கிடைக்கும்.
டெர்ம் லைஃப் இன்சூரன்ஸை பொறுத்தவரை இதில் காப்பீட்டு முதிர்ச்சி அடையும் நன்மைகள் எதுவுமே கிடைக்காது. அதாவது டெர்ம் இன்சூரன்சை 15 ஆண்டுகளுக்கு பெற்றால், 15 ஆண்டுகளுக்குள் பாலிசி பெற்றவர் இறந்து போனால் அல்லது அவருக்கு வருமானம் ஈட்ட முடியவில்லை என்ற சூழ்நிலை ஏற்பட்டால் தான் காப்பீட்டு தொகையை பெற முடியும். 15 ஆண்டுகளுக்குள் அவ்வாறு எதுவும் அசம்பாவிதம் நிகழவில்லை மற்றும் பாலிசிதாரர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்ற பட்சத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு காப்பீடு முதிர்ச்சி அடைந்த பிறகு முதிர்ச்சி தொகை அல்லது நன்மைகள் எதுவும் கிடைக்காது.
இனி அதிக தொகைக்கு ஆயுள் காப்பீடு எடுப்பது எளிதல்ல.. பிடியை இறுக்கும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள்
பாலிசிதாரர் இறந்த பிறகு குடும்பத்திற்கு ரொக்கமாக எவ்வளவு தொகையை வழங்க வேண்டும் மற்றும் எத்தனை மாதங்கள் அல்லது ஆண்டுகளுக்கு என்ன மாதாந்திர வருமானம் வழங்க வேண்டும் என்பதையும் குறிப்பிடும் அம்சம் இதில் உள்ளது.
ஒரு நபர் 50 லட்சத்திற்கு இன்சூரன்ஸ் பாலிசியை 20 ஆண்டுகளுக்கு எடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். 20 ஆண்டுகளுக்குள் அவருக்கு இறந்துவிட்டால் ₹50,00,000 காப்பீட்டுத் தொகையை காப்பீட்டு நிறுவனம் வழங்கும். அந்த காப்பீட்டு தொகையை ₹25,00,000 ரொக்கத் தொகையாகவும் மீதமுள்ள ₹25,00,000,10 ஆண்டுகளுக்கு பிரித்து மாதா மாதம் இவ்வளவு வருமானம் என்று வழங்க வேண்டுமென்பதை பாலிசிதாரர் நிறுவனத்துக்கு தெரிவிக்கலாம்.
மேலும், பாலிசிதாரர் இறக்கும் போது எவ்வளவு பாலிசி காலம் மிச்சம் உள்ளது என்ற அடிப்படையிலும் இது நிர்ணயம் செய்யப்படும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Insurance, Life Insurance, Savings