Home /News /business /

குடும்பத்திற்காக இன்சூரன்ஸ் எடுக்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!

குடும்பத்திற்காக இன்சூரன்ஸ் எடுக்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!

இன்சூரன்ஸ்

இன்சூரன்ஸ்

insurance claim top up இன்சூரன்ஸ் திட்டத்திலும் வ டாப்-அப் மற்றும் சூப்பர் டாப்-அப் திட்டங்கள் உள்ளன.

    கொரோனா பெருந்தொற்று போன்ற காலக்கட்டத்தில் தான் மக்கள் மருத்துவ காப்பீடு பற்றி அதிகம் விழிப்புடன் செயல்பட்டனர். இருப்பினும் புதிது புதிதாக வரும் நோய்களும், பெருந்தோற்றால் ஏற்படும் பண வீக்கமும் இன்னும் விரிவாக்கப்பட்ட, பரந்த மருத்துவ காப்பீட்டு தேவை என்பதை உணர்த்தியுள்ளது.

    தேவைப்படும் நேரத்தில் நீங்கள் போதுமான அளவு காப்பீடு செய்யப்படுவதை உறுதிசெய்ய, உங்கள் காப்பீட்டுத் திட்டத்தை மேம்படுத்தும் விருப்பங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். இன்று, காப்பீட்டு சந்தை இரண்டு குறைந்த விலை விருப்பங்களை வழங்குகிறது: டாப்-அப் மற்றும் சூப்பர் டாப்-அப் திட்டங்கள். இதனால் என்ன பயன், எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்...

    இன்சூரன்ஸ் Add-on வசதிகள்:

    ஸ்மார்ட் ரீசார்ஜ் போலவே Add-on வசதிகள் தற்போது இன்சூரன்ஸ் திட்டத்திலும் வந்துவிட்டது. அவையே டாப்-அப் மற்றும் சூப்பர் டாப்-அப் திட்டங்கள் ஆகும். டாப்-அப் மருத்துவ காப்பீடு என்பது தற்போதுள்ள மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் இணைக்க கூடிய ஒரு கூடுதல் மருத்துவ காப்பீட்டு திட்டமாகும். வழக்கமான மருத்துவ திட்டங்களுக்கு அப்பாற்பட்டு கூடுதல் மருத்து செலவிற்கான கவரேஜ் பெற இவை உதவுகிறது. குறைந்தபட்ச பிரீமியம் தொகையைச் சேர்த்து செலுத்துவதன் மூலம் கூடுதலாக கவரேஜ் தொகையை உயர்த்திக்கொள்ள முடியும். இதற்கு சூப்பர் டாப் அப் பாலிசிகள் உள்ளன.

    இதையும் படிங்க.. Housing Loan : மார்ச் மாதத்திற்கு முன்பு வீடு வாங்குபவர்களுக்கு இப்படியொரு சலுகையா?

    உதாரணத்திற்கு உங்களுடைய டாப்-அப் அல்லது சூப்பர் டாப்-அப் வரம்பு ரூ.5 லட்சம் என்று வைத்துக் கொண்டால், அதற்கு பிறகான தொகையை பாலிசிதார் செலுத்த வேண்டியிருக்கும். அதே நீங்கள் டாப்-அப் அல்லது சூப்பர் டாப் அப் செய்திருந்தால், நீங்கள் ஏற்கனவே உள்ள சுகாதாரத் திட்டத்தில் உள்ள டிடெக்டபில் கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது, ஏனைய செலவுகளை இந்த டாப்-அப் திட்டம் பார்த்துக் கொள்ளும்.

    டாப்-அப் கவரில், விலக்கு என்பது க்ளைம் அடிப்படையில் பொருந்தும். அதாவது காப்பீட்டுத் தொகையை உங்கள் மருத்துவமனை க்ளைம் பில் மூலம் சமர்பிக்கும் டிடெக்டபில் வரம்பில் இருந்து தொகை கழிக்கப்படும். மேலும் ஒவ்வொரு உரிமைகோரலும் டாப்-அப் கவரைத் தூண்டுவதற்கு விலக்கு வரம்பை கடக்க வேண்டும். மாறாக, ஒரு சூப்பர் டாப்-அப் திட்டத்தில், ஒரு பாலிசி ஆண்டிற்குள் செய்யப்படும் க்ளைம்களின் மொத்த அடிப்படையில் பரிசீலிக்கப்படும், அதாவது சூப்பர்-டாப் திட்டத்தின் கீழ், பல க்ளைகள் பொதுவாக அனுமதிக்கப்படும் மற்றும் முழுத் தொகையும் தீர்ந்தால் மட்டுமே பாலிசி காலாவதியாகிவிடும்.

    இதையும் படிங்க.. பர்சனல் லோன் வாங்கும் போது இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்!

    பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு அடிப்படை உடல்நலக் காப்பீட்டுத் தொகையை வழங்குகின்றன. அவற்றின் கவரேஜ் லிமிட் முடியும் போது, டாப்-அப் அல்லது சூப்பர் டாப்-அப் திட்டம் இந்த அடிப்படைத் திட்டத்திற்கு கூடுதல் பாதுகாப்பைச் சேர்க்கிறது. பல்வேறு மாநிலங்கள் இப்போது பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனாவை பயன்பாட்டில் உள்ளது. இந்தத் திட்டம் ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை மருத்துவ சேவையை வழங்குகிறது, மேலும் இந்தத் திட்டங்கள் பரந்த அளவிலான பாதுகாப்பைப் பெற உதவும். மேலும் டாப்-அப்/சூப்பர் டாப்-அப் பெற அடிப்படை பாலிசி இருக்க வேண்டும் என்ற அவசியல் இல்லை. நீங்கள் ஏற்கனவே உள்ள சுகாதாரத் திட்டத்தில் உள்ள டிடெக்டபில் கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது, ஏனைய செலவுகளை இந்த டாப்-அப் திட்டம் பார்த்துக் கொள்ளும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Insurance, Life Insurance

    அடுத்த செய்தி