Home /News /business /

இன்ஷூரன்ஸ் எடுத்து இருப்பவர்கள் கவனத்திற்கு.. உங்கள் நாமினிக்கு மொத்த பணமும் சேர இதை செய்திடுங்கள்!

இன்ஷூரன்ஸ் எடுத்து இருப்பவர்கள் கவனத்திற்கு.. உங்கள் நாமினிக்கு மொத்த பணமும் சேர இதை செய்திடுங்கள்!

இன்ஷூரன்ஸ்

இன்ஷூரன்ஸ்

பலரும் லைஃப் இன்ஷூரன்ஸ் அல்லது டெர்ம் பாலிசி இருப்பது பற்றி நாமினிக்குக் கூட தெரியப்படுத்தாமல் இருப்பார்கள்.

    டெர்ம் இன்ஷூரன்ஸ், லைஃப் இன்ஷூரன்ஸ் என்று பல்வேறு காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளன. இன்ஷூரன்ஸ் திட்டத்தின் அடிப்படை அம்சமே அது எதிர்காலத்துக்கான நிதி ரீதியான பாதுகாப்பை வழங்குகிறது. பொதுவாக, காப்பீடு வாங்குபவர்களின் பெரிய எதிர்பார்ப்பே, உரிய நேரத்தில் கிளைம் கிடைக்க வேண்டும் என்பதே. அதுவும், டெர்ம் இன்ஷூரன்ஸ் என்று வரும் போது, பாலிசி முடிவடையும் காலத்தில் அல்லது ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் போது பணம் கிடைக்க வேண்டும் மற்றும் பணம் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் கிடைக்க வேண்டும் என்பதே ஆகும். ஒவ்வொரு பிரீமியம் தொகையையும் சரியாக செலுத்தியிருக்க வேண்டும், உங்களைப் பற்றய சான்றுகள் மற்றும் நாமினி பற்றிய விவரங்கள் மற்றும் அதற்கான சான்றுகளை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அதைத் தாண்டி, உங்கள் நாமினி இன்ஷூரன்ஸ் கிளைம் பெறுவதை எளிதாக்க சில டிப்ஸ் இங்கே.

    அனைத்து இன்ஷூரன்ஸ் ஆவணங்களையும், ஒரே இடத்தில் வைத்திருக்க வேண்டும்

    எந்தக் காப்பீடாக இருந்தாலும், காப்பீட்டு ஒப்பந்தம் முதல், பிரிமீயம் செலுத்திய விவரங்கள் உட்பட, இன்ஷூரன்ஸ் ஆவணங்களை பாதுகாப்பாகவும், ஒரே இடத்தலும் வைக்க வேண்டும். இந்த ஆவணங்கள் அனைத்தையும் ஸ்கேன் செய்து, மின்னஞ்சலில் அல்லது டிஜிட்டல் ஃபார்மட்டில் சேமித்து வைக்கலாம். இந்த ஆவணங்களின் நகல்களை உங்கள் நாமினிக்கும் ஒரு நகல் அனுப்பி வைக்கவும்.

    இதையும் படிங்க.. எஸ்பிஐ பிக்சட் டெபாசிட்

    எப்படி கிளைம் செய்வது என்பதைப் பற்றி உங்கள் நாமினிக்கு தெரியப்படுத்துங்கள்

    பலரும் லைஃப் இன்ஷூரன்ஸ் அல்லது டெர்ம் பாலிசி இருப்பது பற்றி நாமினிக்குக் கூட தெரியப்படுத்தாமல் இருப்பார்கள். அப்படி செய்யும் போது, காப்பீடு வாங்கிய நோக்கமே நிறைவேறாமல் போய்விடும். அதே போல, ஒவ்வொரு இன்ஷூரன்ஸ் நிறுவனமும் ஒவ்வொரு விதமான கிளைம் பிராசஸ் கொண்டுள்ளது. எனவே, நீங்கள் பாலிசி இருப்பதை தெரிவிப்பது மட்டும் அவசியமல்ல. எதிர்பாராத அசம்பாவிதம் நடக்கும் போது, உங்கள் நாமினிக்கு எப்படி கிளைம் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி தெரியப்படுத்த வேண்டும். ஆவணங்களின் விவரங்கள், காப்பீட்டுத் தொகை, கிளைம் படிவம், சமர்பிப்பு விவரங்கள் ஆகியவற்றை விளக்க வேண்டும். உங்களுக்கு சந்தேகம் இருந்தால், உங்கள் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் கேட்டுத் தெரிந்து கொண்டு, அதை தெரியப்படுத்தவும்.

    திருமணமான பெண்களுக்கான சொத்துரிமை சட்டம்

    உங்களின் டெர்ம் இன்ஷூரன்ஸ் செட்டில்மென்ட் தொகையை உங்கள் நாமினி பெறுவதற்கு முன்பு, உங்களுக்கு கடன் ஏதாவது இருந்தால் அவர்கள் அதில் தங்களுக்கான தொகையை பெற்றுக்கொள்ளும் உரிமை உண்டு. உங்கள் கடன்கள் அனைத்தும் செலுத்தப்பட்ட பின்பு, மீதமுள்ள தொகை தான் உங்கள் நாமினிக்குக் கிடைக்கும். அது மட்டுமின்றி, குடும்ப வாரிசு உரிமை அடிப்படையிலும் உங்கள் காப்பீட்டில் வாரிசுக்கும் பங்கு உண்டு. சட்டப்படி, பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டு. நீங்கள் திருமணமான ஆணாக இருந்தால், பெண்களின் சொத்துரிமை சட்டத்தின் படி, நீங்கள் உங்கள் இன்ஷூரன்ஸ் மற்றும் கிளைம் தொகையை உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு கிடைக்குமாறு அமைக்கலாம். பாலிசி வாங்கும் போதே, இந்த MWP சட்டத்தையும் சேர்த்து நீங்கள் ஒப்பந்தம் மேற்கொள்ளலாம்.

    இதையும் படிங்க.. uidai : ஆதார் கார்டில் இருக்கும் பழைய ஃபோட்டோ பிடிக்கவில்லையா? அப்ப உடனே மாற்றலாம் வாங்க!

    இன்ஷூரன்ஸ் கிளைம் செட்டில் செய்யும் முறை

    இன்ஷூரன்ஸ் கிளைம் செட்டில்மென்ட் முறையில் இது மிகவும் முக்கியமான விஷயம். சில நிறுவனங்கள் மொத்தமாக காப்பீட்டுத் தொகையை வழங்குவார்கள். சில நிறுவனங்கள், மாதாந்திர தொகையாக வழங்குவார்கள், சில நிறுவனங்கள் குறிப்பிட்ட தொகையை மொத்தமாகவும், மீதமுள்ள தொகையை சில ஆண்டுகளுக்கு வரை மாதந்திர வருமானம் போலவும் வழங்கும். எனவே, உங்கள் குடும்பத்தின் தேவைகேற்ப, நீங்கள் கிளைம் செட்டில் செய்யும் முறையை தேர்வு செய்ய வேண்டும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Insurance, LIC, Life Insurance

    அடுத்த செய்தி