தேசியக் கொடியை அவமதித்ததாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்தியாவின் மிகப்பெரும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாக அமேசான் இருந்து வருகிறது. இந்த நிறுவனம் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது.
அமேசான் நிறுவனத்தை பயன்படுத்தி கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டதாக சமீபத்தில் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது. இதேபோன்று வெளிநாடுகளிலும் விதிகளை மீறியதால், பல்வேறு அமைப்புகளின் கண்டனத்திற்கும் அமேசான் நிறுவனம் ஆளாகியுள்ளது.
இதையும் படிங்க :
இல்லத்தரசிகளுக்கு நற்செய்தி.. சமையல் எண்ணெய் விலை அதிரடியாக குறைந்தது!
தற்போது, தேசியக் கொடியை பயன்படுத்தி மாஸ்க், டி.ஷர்ட், கீ செயின்கள் உள்ளிட்டவற்றை அமேசான் விற்பனை செய்வதாகவும், குறிப்பாக ஷூக்களில் தேசியக் கொடி இடம்பெறுவது உள்ளிட்டவற்றால் தேசியக் கொடி அவமானப்படுத்தப்படுவதாகவும், குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதை மையப்படுத்தி ட்விட்டரில், #Amazon_Insults_National_Flag என்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகின.
சில ட்விட்டர் பயனாளர்கள், சட்டப்படி, வர்த்தக காரணங்களுக்காக மூவர்ணக் கொடி பயன்டுத்தக்கூடாது என்பதை சுட்டிக் காட்டி, அமேசான் நிறுவனத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.
இதையும் படிங்க :
இந்த நிலையில் அமேசான் மீது மத்திய பிரதேச மாநிலம் போபால் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். அம்மாநில உள்துறை அமைச்சரின் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் கண்ணியக்குறைவை தடுத்த என்ற இந்திய தண்டனை சட்டம் பிரிவு 505 (2)-ன் கீழ் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருவதால், அமேசான் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் நற்பெயர் டேமேஜ் ஆகத் தொடங்கியுள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.