10 நிமிடங்களில் இ-பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது மற்றும் டவுன்லோடு செய்வது எப்படி?

இ-பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

e-PAN அட்டைக்கு விண்ணப்பிப்பது மற்றும் டவுன்லோடு செய்வது எப்படி என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

  • Share this:
தற்போது எந்த ஒரு ஒரு அரசாங்க சலுகைகளையும் பெற அல்லது வங்கிகளில் நிதி பரிமாற்றம் மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளுக்கு ஆதார், பான் கார்டு போன்ற முக்கிய ஆவணங்கள் தேவைப்படுகிறது. முன்பு ஆதார், பான் அட்டைகளை விண்ணப்பிக்க நேரடியாக செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பிப்பது, தேவையான மாற்றங்கள் செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள் கூடிய வகையில் எளிதாக உள்ளது.

அதேபோல இவற்றில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டியது இருந்தாலோ அல்லது தவறுகளை சரி செய்வது உள்ளிட்ட பணிகளை கூட ஆன்லைனில் இருந்தே செய்து கொள்ளலாம். இதனால் மக்கள் அலைய வேண்டியதில்லை. மேலும் உங்கள்பான் எண் வெரிபிகேஷனை கூட ஆன்லைனில் செய்யலாம். அதற்கு நீங்கள் https://www.incometax.gov.in/iec/foportal/ சென்று முகப்புப்பக்கத்தில் ‘உங்கள் பான் சரிபார்க்கவும்’

(‘Verify Your PAN’ ) என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் தோன்றும் திரையில் உங்கள் பிறந்த தேதி, மொபைல் எண் மற்றும் பெயர் போன்ற உங்கள் பான் விவரங்களை கொடுக்க வேண்டும். இதன் மூலம் உங்களது விவரங்கள் சரியாக இருக்கிறதா? என்பதை நீங்கள் சரி பார்த்து கொள்ளலாம்.

ALSO READ |  உங்கள் பான் கார்டில் பிழையா? ஆன்லைனில் திருத்துவது எப்படி?

மேலும் ஆதார் அட்டை மற்றும் ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் வைத்திருப்பவர்கள் PAN அல்லது e-PAN அட்டையை அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பித்து 10 நிமிடங்களுக்குள் பெற முடியும்.

e-PAN என்பது டிஜிட்டல் முறையில் கையொப்பமிடப்பட்ட PAN கார்டு ஆகும், இது ஆதார் அட்டையின் e-KYC தரவை அடிப்படையாகக் கொண்டது. ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த வசதியை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது இ-பான் PDF வடிவத்தில் வழங்கப்படுகிறது. பிளாஸ்டிக் அல்லது காகிதம் இல்லாததால் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் இருக்குமாறு இந்த வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

e-PAN அட்டைக்கு விண்ணப்பிப்பது மற்றும் டவுன்லோடு செய்வது எப்படி என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,

1.e-PAN அட்டைக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.incometax.gov.in/iec/foportal/ க்கு செல்லவும்.

2. முகப்புப்பக்கத்தில் e-PAN-க்கு விண்ணப்பிப்பது தொடர்பான ஒரு ஆப்சன் இருக்கும், அதைக் கிளிக் செய்யவும்.

3. இப்போது ஒரு புதிய திரை தோன்றும், அதில் 'Get New e-PAN’ என்பதை கிளிக் செய்யவும்.

4. இப்போது உங்கள் ஆதார் எண், மொபைல் எண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட தகவலை கொடுத்து சர்பிக்கவும். பின்னர் நீங்கள் கொடுத்த விவரங்களைச் சரிபார்க்க ஒரு OTP யை பெறுவீர்கள்

5. அதனை கொடுத்து ஓகே என்பதை கிளிக் செய்தால் போதுமானது. உங்கள் e-PAN அட்டை விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்.

ALSO READ |  18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் பான் கார்டு... விண்ணப்பிப்பது எப்படி?

உங்கள் e-PAN நிலையை பார்க்க அல்லது பதிவிறக்க செய்ய வேண்டியவை :

1: https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற லிங்கை கிளிக் செய்து முகப்புப்பக்கத்திற்கு செல்லவும்.

2: இப்போது நீங்கள் ‘Check Status/ Download PAN’ என்பதை கிளிக் செய்து செய்ய வேண்டும்.

3: பின்னர் தோன்றும் புதிய திரையில் உங்கள் ஆதார் எண் கேட்கப்படும்.

4. ஆதார் எண்ணை சரியாக கொடுத்து உங்கள் பதிவு செய்யப்பட்ட எண்ணிற்கு வரும் OTP-ஐ கொடுக்கவும்.

5. இப்போது நீங்கள் விண்ணப்பித்த e-PAN எந்த நிலையில் உள்ளது என்ற தகவல் திரையில் தோன்றும்.

6. உங்கள் இ-பான் தயாராக இருந்தால் நீங்கள் அந்த ஆவணத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sankaravadivoo G
First published: