நீங்கள் எஸ்.பி.ஐ வங்கியில் 6 மாத கால வாடிக்கையாளராக இருந்தாலே போதும் ரூ. 50,000 கடன் வீட்டில் இருந்தப்படியே வாங்கலாம் தெரியுமா?
நீங்கள் சொந்தமாக பிசினஸ் செய்து வருகிறீர்கள், திடீரென்று அவசரத்திற்கு உங்களுக்கு ரூ. 50,000 வரை தேவைப்படுகிறது என்றால் நீங்கள் இனி கஷ்டப்படவே வேண்டாம். எஸ்பிஐயில் இருக்கும் முத்ரா கடனுக்கு விண்ணப்பித்தாலே போதும் வீட்டில் இருந்தப்படியே பணம் உங்கள் அக்கவுண்டுக்கு வந்து விடும். இந்த கடனை பெற வெறும் 3 நிமிடங்களே போதுமானது. நம்ப முடியவில்லையா? வாருங்கள் விளக்கமாக பார்க்கலாம்.
எஸ்பிஐயில் இருக்கும் பிரதான் மந்திரி முத்ரா கடன் திட்டம் மூலமாக தான் நீங்கள் இந்த கடனை பெற முடியும். இதற்கு நீங்கள் வங்கிக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆன்லைனிலே லோனுக்கு அப்ளை செய்து அக்கவுண்டில் பணத்தை பெற்றக் கொள்ளலாம். எஸ்பிஐ அதிகாரப்பூர்வ தளத்தில் இ-முத்ரா கடனின் கீழ் விண்ணப்பித்தால் போதும் உங்கள் கடனுக்கான கோரிக்கை பதிவு செய்யப்பட்டு விடும். பின்பு வங்கி நிர்வாகம் உங்களை தொடர்பு கொள்ளும்.
இந்த திட்டத்தில் கீழ் தொழில் முனைவோர் 1 லட்சம் வரை உடனடி கடன் வாங்க முடியும். முதிர்வு காலம் 5 ஆண்டுகள். ரூ. 50,000 வரையிலான கடனுக்கு நீங்கள்
வங்கிக்கு செல்ல வேண்டாம் ஆன்லைனில் முடித்து விடலாம். 1 லட்சம் என்றால் வங்கிக்கு செல்ல வேண்டும் சில ஆவணங்களையும் சமர்பிக்க வேண்டும். பின்பு வங்கி அதிகாரிகள் உங்கள் தொழில் தொடர்பாக விசாரணை செய்து 1 லட்சம் கடனை வழங்குவார்கள்.
இந்த கடனை பெறுவதற்கான தகுதிகள், நீங்கள் சிறிய அளவில் சொந்தமாக தொழில் செய்யும் தொழில் முனைவராக இருக்க வேண்டும்.
எஸ்பிஐயில் சேமிப்பு கணக்கு அல்லது நடப்புக் கணக்கு குறைந்தபட்சம் 6 மாதங்கள் இருக்க வேண்டும். ஆதார் எண் வங்கி கணக்கில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் உடனே ரூ. 50,000 கடன் பெற முடியும். 1 லட்சம் தேவை என்றால் கடை மற்றும் நிறுவனம் அல்லது பிற வணிக பதிவு ஆவணங்களுடன் வங்கிக்கு செல்ல வேண்டும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.