முகப்பு /செய்தி /வணிகம் / வெறும் 59 நிமிடத்தில் இந்த 5 வங்கிகளில் நீங்கள் லோன் பெறலாம்! எப்படி தெரியுமா?

வெறும் 59 நிமிடத்தில் இந்த 5 வங்கிகளில் நீங்கள் லோன் பெறலாம்! எப்படி தெரியுமா?

வெறும் 59 நிமிடத்தில் கடன்

வெறும் 59 நிமிடத்தில் கடன்

நடுத்தர நிறுவனங்களுக்கு 59 நிமிடத்தில் கடன் கொடுக்கும் வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்கும் பொருட்டுப் பொதுத்துறை வங்கிகளின் வாயிலாக வெறும் 59 நிமிடத்தில் கடன் வழங்கும் திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

உங்கள் தொழிலை மேம்படுத்த அல்ல்து புதிய தொழிலை தொடங்க திட்டமிட்டிருக்கிறீர்களா? பொதுத்துறை வங்கியில் இயங்கும் இந்த கடன் வசதி குறித்து தெரிந்து கொள்ளுங்கள். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பாங்க ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி, விஜயா வங்கி, இந்தியன் வங்கி ஆகிய வங்கிகளில் இந்த திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது.மத்திய அரசின் சிறப்புத் திட்டத்தின் கீழ், இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) PSB லோன்ஸ் என்ற சிறப்புப் பின்டெக் தளத்தை உருவாக்கிச் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 59 நிமிடத்தில் கடன் கொடுக்கும் வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்தது.

இந்தத் திட்டத்தின் கீழ் 1 லட்சம் ரூபாய் முதல் 10 கோடி ரூபாய் வரையிலான கடனுக்கு விண்ணப்பித்து, முதற்கட்ட ஒப்புதலைப் பெறலாம். வர்த்தகக் கடன், தனிநபர் கடன், வீட்டுக்கடன், வாகன கடன் மற்றும் முத்ரா கடன் ஆகியவை இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்றன. வர்த்தகக் கடன் - 5 கோடி ரூபாய் தனிநபர் கடன் - 20 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் - 10 கோடி ரூபாய் வாகன கடன் - 1 கோடி ரூபாய் முத்ரா கடன் - 10 லட்சம் ரூபாய்

எஸ்பிஐ வங்கியில் சம்பளக் கணக்கு உள்ளதா? இந்த தகவல் உங்களுக்கு தான்!

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொண்டு உங்கள் தொழிலை மேம்படுத்துங்கள். ஆன்லைனில் விண்ணப்பிப்பதும் மிகவும் எளிது. அதற்கு முதலில் நீங்கள் செல்ல வேண்டியது SIDBI உருவாக்கிய பின்டெக் தளமான PSB லோன்ஸ் தளத்திற்குச் செல்வது. https://www.psbloansin59minutes.com/home அங்கு தோன்றும் அடுத்தடுத்தப்படிகளை நிரப்பினால் உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். பின்பு உங்கள் தகுதிக்கு ஏற்றவாறு லோன் வழங்கப்படும். இதை சற்று நினைவில் கொள்ளுங்கள். வங்கியில் கடைசிக்கட்ட பணிகள் முதற்கட்ட ஒப்புதல் கடிதம் கிடைத்த பின்பு குறிப்பிட்ட வங்கிக்கு நீங்கள் நேரில் செல்ல வேண்டும். அங்கு, நிறுவனத்தின் நிதிநிலை மற்றும் இதர ஆவணங்களை ஆய்வு செய்து பின்பே வங்கிகள் கடனுக்கு ஒப்புதல் அளிக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Bank