Home /News /business /

INOX InstaPay Wallet : மூவி டிக்கெட் புக் செய்பவர்களுக்கு காத்திருக்கும் சலுகைகள்!

INOX InstaPay Wallet : மூவி டிக்கெட் புக் செய்பவர்களுக்கு காத்திருக்கும் சலுகைகள்!

ஐநாக்ஸ் இன்ஸ்டாபே வாலட்

ஐநாக்ஸ் இன்ஸ்டாபே வாலட்

ஐநாக்ஸ் இன்ஸ்டாபே வாலட்டைப் ( INOX InstaPay) பயன்படுத்தினால், ஐநாக்ஸ் தியேட்டர்களில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட்டுகளை மட்டுமே வாங்க முடியும்.

  புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஐநாக்ஸ் இன்ஸ்டா பே வாலட் ஐநாக்ஸ் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் படம் பார்க்க விரும்பும் பார்வையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளது ஆகும்.

  கொரோனா தொற்று குறைந்த வருவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து ஷாப்பிங், பயணங்கள், ஓட்டலில் சாப்பிடுவது போன்ற விஷயங்களை செய்து வருகின்றனர். இதில் அனைத்து தரப்பு மக்களும் தவறாமல் செய்யும் ஒரே காரியம் தியேட்டருக்கு போய், பெரிய ஸ்கிரீனில் விசில் அடித்து, கை தட்டி படம் பார்ப்பது மட்டுமே. இந்த விஷயத்தை கச்சிதமாக கணக்கில் எடுத்துக் கொண்ட ஐநாக்ஸ் சினிமாஸ் அதன் மல்டிபிளக்ஸ் தியேட்டருக்கு அதிக அளவிலான மக்களை வரவேற்க ஸ்பெஷல் தூண்டிலை போட்டுள்ளது.

  ஐநாக்ஸ் மல்டிபிளக்ஸ் குழுமம் இன்ஸ்டாபே (InstaPay) எனப்படும் கட்டண வாலட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாலட்டைப் பயன்படுத்தும் நுகர்வோர் வாலட்டில் பணத்தை ஏற்றும் போது வவுச்சர்களையும் சலுகைகளையும் பெறலாம் மற்றும் ஐநாக்ஸின்இன் மொபைல் ஆப், இணையதளம் அல்லது பாக்ஸ் ஆபிஸ் கவுண்டரில் டிக்கெட்டுகளைப் பதிவு செய்யலாம்.

  இன்ஸ்டாபே வாலட் மற்றும் அதன் சலுகைகள் குறித்த முக்கிய விவரங்களை அறிந்து கொள்ளலாம்...

  சலுகைகள் என்னென்ன?

  ஐநாக்ஸ் இன்ஸ்டாபே வாலட் என்பது ஐநாக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட்டுகள் மற்றும் உணவை வாங்குவதற்கான மின்-வாலட் ஆகும். ஐநாக்ஸ் இணையதளம், ஆப் அல்லது பாக்ஸ்-ஆபிஸ் கவுண்டரில் யூஸர்கள் தங்களது இன்ஸ்டாபே வாலட்யைப் பயன்படுத்தி டிக்கெட்கள், தின்பண்டங்கள் ஆகியவற்றை வாங்கலாம். டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள், நெட் பேங்கிங் அல்லது UPI பரிவர்த்தனைகள் மூலம் ரூ.100 முதல் ரூ.5,000 வரை நீங்கள் விரும்பும் தொகையை வாலட்டிற்கு ட்ரான்ஸ்பர் செய்ததும், இன்ஸ்டாபே வேலை செய்ய தயாராகிவிடும்.

  முதல் முறையாக ஐநாக்ஸ் இன்ஸ்டாபே வாலட்டை பதிவிறக்கம் செய்யும் பயனர்களுக்கு 50 ரூபாய் முதல் 150 ரூபாய் வரையிலான வவுச்சர்கள் கிடைக்கும்.

  குறைந்த வட்டியில் லோன் வாங்க கிரெடிட் ஸ்கோர் எவ்வளவு இருக்க வேண்டும் தெரியுமா?

  ஐநாக்ஸ் இன்ஸ்டாபே வாலட்டில் இருக்கும் தொகையானது 365 நாட்களில் காலவதியாகக்கூடியது. ஒருவேளை நீங்கள் இன்ஸ்டாபே வாலட்டில் 5 ஆயிரம் ரூபாய் வைத்திருக்கிறீர்கள், அது 365 நாட்களை கடந்துவிட்டது என்றால், 366வது நாள் அந்த பணத்தை வைத்து நீங்கள் எவ்வித டிக்கெட்டையும் புக் செய்ய முடியாது. அதனை மீண்டும் ஆக்டிவேட் செய்ய உங்களுடைய லாகின் விவரங்களை contact@inomovies.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.

  எதையெல்லாம் செய்ய முடியும்?

  இன்ஸ்டாபே வாலட் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது, ஃபர்ஸ்ட் டைம் யூஸர்களுக்கு விரைவான, தொடர்பற்ற மற்றும் பலன் தரக்கூடிய முறையாகும். இந்த முறை மூலம் டிக்கெட் புக்கிங் மட்டுமின்றி, முதல் முறையாக இன்ஸ்டாபே வாலட்டை பயன்படுத்தும் நபர் வவுச்சர்கள் மற்றும் தின்பண்டங்கள் போன்றவற்றை வெல்ல வாய்ப்புள்ளது. சிறப்பு பிரபலங்கள் திரையிடல்களுக்கான அழைப்புகள் மற்றும் வாலட் பயனர்களுக்காக பிரத்யேகமாகத் தொகுக்கப்பட்ட சலுகைகள் ஆகியவையும் அடங்கும்.

  PM kisan status : ரூ.2,000 தரும் மத்திய அரசு.. பயனாளிகள் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

  எது வேலை செய்யாது?

  திரைப்பட டிக்கெட்டுகளை வாங்க இன்னும் பலனளிக்கும் வழிகள் உள்ளன. உதாரணமாக, பல வங்கிகள் தாங்கள் வழங்கிய கார்டுகளுக்கு பல சலுகைகளை வழங்குகின்றன. BookMyShow போன்ற திரைப்பட பயன்பாடுகள், திரைப்பட டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கும், கச்சேரிகள் மற்றும் பலவற்றையும் முன்பதிவு செய்வதற்கும், வங்கிகளுடன் அடிக்கடி டை-அப் செய்வதற்கும் உங்களை அனுமதிக்கிறது. அத்தகைய ஆப்ஸுடன் கூட்டு சேர்ந்திருக்கும் வங்கிகளின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால், 'Buy one get one free ticket' சலுகைகளை பெற வாய்ப்புள்ளது.

  Paytm மற்றும் Amazon போன்ற செயலிகளில் டிக்கெட் முன்பதிவு செய்தால், சில நேரங்களில் ரூ. 50 முதல் ரூ. 100 வரை தள்ளுபடிகள் அல்லது பார்ட்னர் வங்கியின் டெபிட் கார்டு போன்றவற்றைப் பயன்படுத்தி திரைப்பட டிக்கெட்டுகளை வாங்கினால் 25 சதவீதம் வரை தள்ளுபடிகள் கிடைக்கும். ஆனால், இந்த கார்டுகள் அல்லது மூன்றாவது டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பார்ட்டி ஆப் ஆஃபர்களை INOX InstaPay Wallet பரிவர்த்னைகளுடன் இணைக்க முடியாது.

  மறுபுறம், நீங்கள் ஐநாக்ஸ் இன்ஸ்டாபே வாலட்டைப் ( INOX InstaPay) பயன்படுத்தினால், ஐநாக்ஸ் தியேட்டர்களில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட்டுகளை மட்டுமே வாங்க முடியும். உங்கள் பணப்பையில் இருப்பு குறைவாக இருந்தால் நீங்கள் கார்டைப் பயன்படுத்தலாம். ஆனால் திரைப்பட டிக்கெட்டை முன்பதிவு செய்வதில் உங்கள் அட்டை வழங்கும் பலன்களை பயன்படுத்த முடியாது.

  நீங்கள் INOX InstaPay Wallet -யைப் பயன்படுத்த வேண்டுமா?

  விரும்பும் அனைத்து படங்களையும் ஐநாக்ஸ் தியேட்டர்களில் மட்டுமே பார்ப்பேன் என அடம்பிடிக்கும் நபராக இருந்தால், நீங்கள் தாராளமாக இந்த வாலட்டை பயன்படுத்தலாம். அதேசமயம் மற்ற மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் அல்லது சாதாரண தியேட்டர்களில் டிக்கெட் பதிவு செய்யும் கட்டணங்களுடன், ஐநாக்ஸ் இன்ஸ்டாபே ஆப் முன்பதிவு கட்டணம் பொருந்தாது. மேலும் வால்ட்டில் நீங்கள் எவ்வளவு ஆயிரங்களை போட்டு வைத்திருந்தாலும் அதற்கு வட்டி எதுவும் கிடையாது. மேலும் யூஸர் கணக்கை டி-ஆக்டிவேட் செய்தால்  மட்டுமே வாலட்டில் உள்ள பணம் திரும்ப கிடைக்கும், அதுவரை கிணற்றில் போட்ட கல்லாக ஐநாக்ஸ் இன்ஸ்டாபே வாலட்டிலேயே கிடக்க வேண்டியது தான்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Cinema Ticket, Ticket booking

  அடுத்த செய்தி