அடுத்த ஐந்து ஆண்டுகளில் 105 லட்சம் கோடியில் உள்கட்டமைப்புத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான அறிவிப்பை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
நாடு முழுவதும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்களை வகுப்பதற்கு செயலாக்க குழு அமைக்கப்பட்டிருந்தது. இக்குழு 70 நிறுவனங்களுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, தயாரித்த அறிக்கை நிதிஅமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. இது தொடர்பாக, செய்தியாளர்களிடம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கினார். அப்போது, நிதித்துறை செயலாளர் ராஜிவ் குமார், பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் ஆதனு சக்கரவர்த்தி உடன் இருந்தனர். அப்போது பேசிய அவர், ‘ அடுத்த ஐந்து ஆண்டுகளில் 105 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உள்கட்டமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இவற்றில், ரூ.16 லட்சம் கோடி கிராமப்புற உள்கட்டமைப்பிற்கும், விவசாயம், நீர் பாசன திட்டத்துக்கும் செலவிடப்படும் என தெரிவித்தார். ரூ.2.5 லட்சம் கோடி மதிப்பில் துறைமுகக் கட்டமைப்பு, விமானக் கட்டமைப்பு திட்டங்களுக்கும், ரூ.3.2 லட்சம் கோடி மதிப்பில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் செலவிடப்படும் என்று தெரிவித்தார். இன்னும் சில வாரங்களில் மூன்று லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றார்.
கடந்த ஆறு ஆண்டுகளில் மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து 51 லட்சம் கோடிக்கு திட்டங்களை செயல்படுத்தியதாகவும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இது இரட்டிப்பாக உள்ளதாகவும் கூறினார். திட்டங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தலா 39.39 சதவீதம் செலவிட உள்ளதாகவும், மீதம் 22 சதவீதம் தனியார் பங்களிப்பாக இருக்கும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.