ஹோம் /நியூஸ் /வணிகம் /

ஆஃபர் லெட்டர் கேன்சல்... மாணவர்களை ஏமாற்றும் முன்னணி ஐ.டி. நிறுவனங்கள்.! 

ஆஃபர் லெட்டர் கேன்சல்... மாணவர்களை ஏமாற்றும் முன்னணி ஐ.டி. நிறுவனங்கள்.! 

ஐ.டி. நிறுவனங்கள்

ஐ.டி. நிறுவனங்கள்

IT Companies | முன்னணி டெக் நிறுவனங்களான இன்ஃபோசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா ஆகியவை புதிதாக ஊழியர்களை பணியமர்த்தும் நடவடிக்கையை தாமதப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கொரோனா, பணவீக்கம், பொருளாதார மந்தநிலை காரணமாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஜாம்பவான்களான அமேசான், விப்ரோ, மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட கூகுள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை, ஊழியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், உற்பத்தி திறன் குறைவாக இருப்பதாக பேசியிருந்தது பெரும் சர்ச்சையை உருவாக்கியது.

இதனிடையே முன்னணி டெக் நிறுவனங்களான இன்ஃபோசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா ஆகியவை புதிதாக ஊழியர்களை பணியமர்த்தும் நடவடிக்கையை தாமதப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கேம்பஸ் இன்டர்வியூ போன்ற நேர்காணல் மூலமாக தேர்வான மாணவர்களின் ஆஃபர் லெட்டர்களை ரத்து செய்துள்ளதாக வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வேலையை ரத்து செய்ததற்கான எவ்வித காரணத்தையும் மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் விளக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

போபாலைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான பவித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனக்கு வழங்கப்பட்ட ஆஃபர் லெட்டர் 6 மாத தாமதத்திற்கு பிறகு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிசினஸ்லைன் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் “எங்கள் கல்வி தகுதிக்கான நிபந்தனைகளை நீங்கள் பூர்த்தி செய்யவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே உங்கள் சலுகை செல்லாது" என மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ள பவித்ரா, தான் குறிப்பிட்ட வேலைக்கான 10, 12 மற்றும் இளங்கலைப் படிப்பில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்ற கல்வி தகுதியை பூர்த்தி செய்துள்ளார்.

பிசினஸ்லைன் அறிக்கையின்படி, விஜயநகரை சேர்ந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரியான பாவ்னா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், வேலைக்கு தேர்வான 4 மாதங்களுக்குப் பிறகு விப்ரோவில் இருந்து நிராகரிக்கப்படுவதாக மின்னஞ்சல் வந்ததாக தெரிவித்துள்ளார். விப்ரோவின் மதிப்பீட்டு வழிகாட்டுதல்களுக்கு உட்படாததால் உங்களுடையை விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாக மின்னஞ்சலில் குறிப்பிட்டப்பட்டிருந்ததாக கூறியுள்ளார்.

Also Read : தவறான அக்கவுண்டிற்கு பணம் அனுப்பி விட்டீர்களா? 48 மணி நேரத்தில் புகாருக்கு தீர்வு!

மூன்று மாதங்களுக்கு முன்பு டெக் மஹிந்திரா நிறுவனத்திடமிருந்து வேலைக்கான ஆஃபர் லெட்டரைப் பெற்ற விவேக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவர், சான்றிதழ் பரிசோதனையில் பங்கேற்கவில்லை எனக்கூறி நிராகரிக்கப்பட்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி இதற்கான மின்னஞ்சலை டெக் மஹிந்திரா நிறுவனம் தனக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வேலையில் சேருவதற்கு முன்னதாக 12 கோர்ஸ்களை படிக்க வேண்டும் என டெக் மஹிந்திரா நிறுவனம் தன்னை கட்டாயப்படுத்தியதாகவும், அதனை முடிந்து சான்றிதழ் பெற்றுள்ள நிலையில் நிராகரிக்கப்பட்டது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகவும் விவேக் தெரிவித்துள்ளார்.

ஜூன் 2022 காலாண்டில், இன்ஃபோசிஸ் நிறுவனம் தனது ஒருங்கிணைக்கப்பட்ட நிகர லாபம் ரூ. 5,360 கோடி என்று அறிவித்தது. முந்தைய ஆண்டு காலாண்டில் ரூ. 5,195 கோடியை மட்டுமே ஈட்டிய நிலையில், நடப்பு ஆண்டில் இன்ஃபோசிஸ் 3.2 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. அதேபோல் நிறுவனத்தின் வருவாயும் ஜூன் 2021 காலாண்டில் ரூ.27,896 கோடியிலிருந்து 23.6 சதவீதம் உயர்ந்து ரூ.34,470 கோடியாக உள்ளது.

Also Read : துரைக்கு ரெண்டு வேலை கேக்குதோ? 300 பணியாளர்களை வேலை விட்டு தூக்கிய விப்ரோ!

இது முந்தைய ஆண்டின் காலாண்டில் ரூ. 5,195 கோடியுடன் ஒப்பிடுகையில் 3.2 சதவீத வளர்ச்சியாகும். நிறுவனத்தின் வருவாய் ஜூன் 2021 காலாண்டில் ரூ.27,896 கோடியிலிருந்து 23.6 சதவீதம் உயர்ந்து ரூ.34,470 கோடியாக உள்ளது.

விப்ரோ நிறுவனத்தின் ஜூன் 2022 காலாண்டு லாபம் ரூ. 2,563 கோடி ஆகும். இது கடந்த ஆண்டை விட 20.9 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் காலாண்டின் வருவாய் 17.9 சதவீதம் உயர்ந்து ரூ.21,528.6 கோடியாக உள்ளது. IT சேவைகள் பிரிவில் அதன் செயல்பாட்டு வரம்பு 200 bps QoQ 15 சதவீதமாக குறைந்துள்ளது.

ஜூன் 2022ம் ஆண்டு காலாண்டின் முடிவின் படி, டெக் மஹிந்திரா நிறுவனத்தின் நிகர லாபம் 16 சதவீதம் சரிந்து ரூ.1,131.6 கோடியாக உள்ளது. ஆனால் கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.1,353.2 கோடியாக இருந்துள்ளது. 2021ம் ஆண்டில் ரூ.10,197.6 கோடியாக இருந்த முதல் காலாண்டு வருவாய், 25 சதவீதம் உயர்ந்து தற்போது ரூ.12,707.9 கோடியாக உயர்ந்துள்ளது. வருவாய் ரீதியாக பெரும் சரிவுகள் ஏற்படாத போதும், பணி நியமன விவகாரத்தில் ஐடி நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கை மாணவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி மற்றும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

Published by:Selvi M
First published:

Tags: IT Industry, Tamil News