• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • இன்ஃபோசிஸின் 4-ம் காலாண்டு லாபம் 10.5% உயர்வு... பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட்...!

இன்ஃபோசிஸின் 4-ம் காலாண்டு லாபம் 10.5% உயர்வு... பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட்...!

இன்போசிஸ்

இன்போசிஸ்

காலாண்டு அறிக்கை முடிவு வெளியீடு என்பதால் வெள்ளிக்கிழமை சந்தை சந்தை நேர முடிவில் இன்ஃபோசிஸ் பங்குகள் 4.70 புள்ளிகள் உயர்ந்து 747.85 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    இந்தியாவின் 2-ம் மிகப் பெரிய ஐ.டி., சேவைகள் நிறுவனமான இன்ஃபோசிஸ் 2018-2019 நிதியாண்டின் 4-ம் காலாண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான 4-ம் காலாண்டில் இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 10.5 சதவீதம் உயர்ந்து 4,078 கோடி ரூபாய் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதுவே சென்ற ஆண்டு 4-ம் காலாண்டில் 3,690 கோடி ரூபாய் நிகர லாபத்தை இன்ஃபோசிஸ் பெற்றிருந்தது.

    மும்பை பங்குச்சந்தைக்கு இன்ஃபோசிஸ் தாக்கல் செய்த அறிக்கையில் 4-ம் காலாண்டில் அதன் வருவாய் 19.1 சதவீதம் உயர்ந்து 21,539 கோடி ரூபாயைப் பெற்றுள்ளது.

    அமெரிக்க டாலர் கணக்கில் லாபத்தைக் கணக்கிடும் போது நிகர லாபம் 1.7 சதவீதம் உயர்ந்து 581 மில்லியன் டாலராக அதிகரித்து 581 மில்லியன் டாலராகப் பதிவு செய்துள்ளது. இதுவே சென்ற ஆண்டு 571 டாலராக இருந்தது.

    முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்குக்கு 10.50 ரூபாய் டிவிடண்ட், இடைக்கால டிவிடண்ட்டாக 7 ரூபாய் எப மொத்தமாக 17.50 ரூபாய் டிவிடண்ட் கொடுக்க இன்ஃபோசிஸ் இயக்குநர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர்.

    காலாண்டு அறிக்கை முடிவு வெளியீடு என்பதால் வெள்ளிக்கிழமை சந்தை சந்தை நேர முடிவில் இன்ஃபோசிஸ் பங்குகள் 4.70 புள்ளிகள் உயர்ந்து 747.85 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.

    மேலும் பார்க்க:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilarasu J
    First published: